Tuesday, October 16, 2012

வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளித்த 900 என்.எஸ்.ஜி., படையினர் விடுவிப்பு !





தேசியப் பாதுகாப்புப் படையான, என்.எஸ்.ஜி.,யிலிருந்த, 900 வீரர்கள், வி.ஐ.பி.,க்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

"கறுப்பு பூனைப் படை' என, அழைக்கப்படும், என்.எஸ்.ஜி., படைப் பிரிவைச் சேர்ந்த, சில வீரர்கள், வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை கவனித்து வருகின்றனர். கறுப்புப் பூனைப் படையில் உள்ள, மூன்று பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள், 1992லிருந்து, இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முறையாகக் கமாண்டோ பயிற்சி பெற்ற வீரர்களை, வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புக்கு ஈடுபடுத்துவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, கறுப்புப் பூனைப் படையால், பாதுகாப்பு அளிக்கப்படும், வி.ஐ.பி.,க்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக, தற்போது, வி.ஐ.பி.,க்களுக்குப் பாதுகாப்பு அளித்து வந்த மூன்று பிரிவினரில், ஒரு பிரிவினர், அந்த பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம், 900 வீரர்கள், வி.ஐ.பி., பாதுகாப்பு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைப் பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், மற்ற கமாண்டோ வீரர்களைப் போல், இவர்களும், பயங்கரவாத எதிர்ப்பு, கடத்தல் தடுப்பு, பிணைக் கைதிகள் மீட்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபவர். 

நன்றி:- தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.