Friday, October 19, 2012

இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 6.5 கோடியாக உயர்வு !




இந்தியாவில் மொபைல் போன், இணையதளம், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதிலும் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நெட்வர்க் ஆன பேஸ்புக்கைத் தற்போது இந்தியர்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக்கில் இணைந்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 6.5 கோடியாக அதிகரித்துள்ளது.

2010-ம் ஆண்டு இதன் எண்ணிக்கை வெரும் 8 மில்லியன் (80 லட்சம்) அளவே இருந்தது. சமூக வலைதளங்களில் போலிக் கணக்கு வைத்துள்ளவர்களை கட்டுப்படுத்தத் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

24 மணி நேரமும் பேஸ்புக் வலைதளத்தைக் கண்காணிக்க உலகம் முழுவதும் குழுக்கள் உள்ளன. 25 சதவீத இணையதள வருவாய் பேஸ்புக் மூலமே வருகிறது.

இந்தத் தகவலை பேஸ்புக் இந்தியா நிறுவனத் தலைவர் கிருத்திகா ரெட்டி தெரிவித்துள்ளார்.                                                                                       

நன்றி :- மாலைமலர், 19-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.