Saturday, October 27, 2012

போலி ரயில்வே வாரியம் நடத்தி ரூ. 20 கோடி மோசடி செய்தவர்கள் கைது !

 போலி ரயில்வே தேர்வு வாரிய அலுவலகம் நடத்தி 20 கோடி ரூபாய் மோசடி செய்தவர்களை சி.பி.ஐ., கைது செய்தது. தெற்கு ரயில்வே அதிகாரிகள் சி.பி.ஐ.,க்கு ஒரு புகார் அளித்தனர்.

அதில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அப்பாவி இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.

டில்லியைச் சேர்ந்த சுரேஷ்குப்தா, கொல்கத்தாவைச் சேர்ந்த நவீன்குமார், மித்ரா, ஆகியோர் ரயில்வே வெப்சைட் தொடங்கி, அதில் ரயில்வே வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மோசடியாக அறிவித்திருந்தனர்.

தமிழகத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இவர்களிடம் தலா 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு கோல்கட்டாவில் போலியாகத் தேர்வு நடத்தியுள்ளனர். இது குறித்த விசாரணை நடத்திய சி.பி.ஐ., அக்கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட தேனிமாவட்டத்தைச் சேர்ந்த ஜெயவேலு, கண்ணன், சேலத்தைச் சேர்ந்த கல்யாண ராமன், அடைக்காப்பான், திருச்சியைச் சேர்ந்த மேரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் இந்த கும்பல் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. 

நன்றி - யாஹூ தமிழ் செய்திகள், 27-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.