Wednesday, October 24, 2012

கடத்தல்காரர்களுக்குக் கடுக்காய் கொடுத்த 14 வயதுச் சிறுவன் ! எஞ்சியோர் நிலை என்ன ?


கடத்தல்காரர்களிடமிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியபின், Khadavali ரெயில் நிலையத்தின் அருகில் சுற்றித் திரிந்த, 14, வயதுச் சிறுவன், ஷாகில் குப்தா.

 சமூக சேவகர் விவேக் Bhoir , சுற்றித் திரிந்து கொண்டிருந்த இந்தப் பையனைப் பார்த்து விசாரித்து உண்மமையைத் தெரிந்து கொண்டு, .Rabale காவல் நிலையத்தாரிடம் ஒப்புவித்தார்.    

திங்கள் பிற்பகல் நண்பர்களுடன் இருந்தபோது  மாருதி வேனுக்குள் தள்ளப்பட்டதாகவும், உரக்கக் கத்தியபோதும், வாயைக் கடினமாக மூடி அழுத்தி, அவர்கள் சொன்னபடி கேட்க வேண்டும் என்று அதட்டியதாகவும், அதே நேரத்தில் வேனில் மேலும் ஆறு குழந்தைகள் இருந்ததாகவும் கூறினான், 14, வயதுச் சிறுவன், ஷாகில் குப்தா.   

கடத்தல்காரர்கள் ஒரு DHABA- வேனை நிறுத்திய போது, கட்டிப் போடப்பட்டிருந்த கயிற்றினை இதர சிறுவர்களின் உதவியால் அவிழ்த்துக் கொண்டு மேலும் மூன்று சிறுவர்களுடன் தப்பித்துவிட்டதாகவும், தன்னுடன் தப்பித்த அந்த மூவரும் எங்கு சென்றார்கள் என்று தெரியாது ஷாகில் கூறியதாகவும் தெரிவித்தார்.

"6 மணியளவில், கடத்தல்காரர்கள் நாசிக் நெடுஞ்சாலையில் Shahapur உள்ள நிறுத்தி கமல் Dhaba வில் சாப்பிடச் சென்ற வாய்ப்பைப் பயன் படுத்தி,  பிற பாதிக்கப்பட்டவர்களது  உதவியுடன், என்னைக் கட்டியுள்ள கயியிற்றினைத் தளர்த்தி விட்டுத் தப்பிவிட்டேன். என்னுடன் மேலும்  மூன்று குழந்தைகள் வேனிலிருந்து இறங்கியதையும் பார்த்தேன், ஆனால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. நான் Asangaon சென்று, அங்கு இருந்து நான் Khadavali நிலையம் வந்து,  சேர்ந்தென் " இவ்வாறு சாஹில் கூறினார்.

" மாருதி வேன் வெள்ளை வர்ணத்தில் இருந்தது என்றும்,   Chinmay பெயர் கொண்ட ஸ்டிக்கர் பின்புறக் கண்ணாடி மீது  இருந்தது என்றும் , சாஹில் குறிப்பிட்டதாக " ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

கடத்தப்பட்டோரின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பணம்பறிப்பதே கடத்தல்காரர்களின் நோக்கமாகவும் இருந்திருப்பதாகவும் அறியப்படுகின்றது.

"சாஹில் தந்தை சந்தீப் பேக்கிங் வணிகத்தில்  ஈடுபட்டுள்ளார். என்றும் சாஹில் குறிப்பிட்டுள்ளார்.                                       

போலீஸ் கடத்தல்காரர்களைக் கண்டறிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.   தப்பிய மூன்று குழந்தைகள், மற்றும் கூண்டில் இருக்கும் மீதமுள்ள மூன்று . போலீஸ் துணை கமிஷனர், நவி மும்பை, புருசோத்தம் Karad தங்கள் தேடல் தீவிரமாக உள்ளது                                                                            

நாம் படிக்கும் தினசரிகளில், வார, மாத இதழ்களில், பார்த்திடும் தொலைக்காட்சிகளில் காணவில்லை என்று படத்துடன் செய்தி வரும் பொழுது  “உச்” என்ற ஒலியுடன் அடுத்த நிகழ்ச்சிக்குச் சென்று விடுவோம். ஆனால், நம் வீட்டில், குடும்பத்தில், நெருங்கியவர்கள் வீட்டில் யாராவது காணாமற் போனால் உள்ளம் பதைபதைக்கும். அதிர்ச்சிக்கும் உள்ளாவோம்.

அதே உணர்வோடு, ”மும்பை மிட் டே” இன்றைய இதழில் படித்த செய்தியின் தாக்கமே இந்தப் பதிவு.                                                                                    

நன்றி :- MID DAY, 24-10-2012.




0 comments:

Post a Comment

Kindly post a comment.