Monday, October 22, 2012

தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு அயோடின் பற்றாக்குறை !



 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் வேலூர் முஸ்லிம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு அயோடின் பற்றாக்குறை'  உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலர் எ. சுந்தரவல்லி விழாவுக்கு தலைமை வகித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ். விஜய் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்து பேசியது:

ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் உலக அயோடின் தினம் கொண்டாடப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோடின் சத்து என்பது வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்று உடலுக்குச் சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ஆகும்.

உடலில் பல நாளமில்லாச் சுரப்பிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கழுத்துப் பகுதியில் உள்ள தைராய்டு. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் சத்து குறைபாடு ஏற்பட்டால் தைராக்ஸின் குறைந்த அளவிலேயே சுரக்கும். இதனால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். குழந்தைகளும், மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. பெரியவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்தவேண்டும்.

மேலும் கடைகளில் அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 சதவிகிதத்தினர் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சக்தியும், அறிவுத் திறனும் தடைபடாமலிருக்க அயோடின் உப்பினைக் கண்டிப்பாக நமது உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றார் அமைச்சர்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் ஆர்.டி. பொற்கைபாண்டியன் திட்ட விளக்கவுரையாற்றினார்.

விழாவில் மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் வி.டி. தருமலிங்கம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.                                                                                                                  

நன்றி :- தினமணி, 22-10-2012




















0 comments:

Post a Comment

Kindly post a comment.