Sunday, September 9, 2012

தமிழில் மொழியியல் :- துவக்க நூல்கள் !


20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிதான் தமிழக அறிஞர்கள் மொழியியல் துறையில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தனர். மொழியை, மொழியியல் கண்கொண்டு பார்க்கும் நூல்கள் பல தோன்றத் தொடங்கின.

அ ) விளக்க நூல்கள்:-

 மொழியியன் இயல்புகள உள்ளவாறு விளக்குவன விளக்க நூல்கள் பகுதியில் அடங்கும். அவ்வகையில் கிறித்துவர்கள் படைத்த நூல்கள் எட்டு நூல்களாகக் காணப்படுகின்றன.

1.உலக முதன்மைச் செம்மொழி.

இந்நூலினை ஞா.தேவநேயன் எழுதிட, 1966-ஆம் ஆண்டு நேசமணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

2.எழுத்தியல்:-  

1983 ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பாக சென்னை அபிராமி பதிப்பகம் வெளியிட்டுள்ள, இந்நூல், கு.இன்னாசி என்பவரால் எழுதப் பட்டுள்ளது.

3.சிங்கள மொழியில் திராவிட மூலம் :-

 இந்நூலை எழுதியவர்,எஸ்.ஞானப் பிரகாசர். இந்நூல், Eigentum and verlag der Internarional Zeitshrist, Authropos st.Gabtiel- Mokding hei wien, vil, mechitharistengassse-4' என்னும் பதிப்பகத்தாரால் பதிப்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நூலில் சிங்கள மொழிச் சொற்களைத் திராவிடம் - மற்றும் தமிழ் மொழிச் சொற்களோடு ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார்.


4. சொல்லியல்:- 

1985-ஆம் ஆண்டு அபிராமி பப்ளிகேஷன்ஸ் நிறுனத்தாரால் மூன்றாம் பதிப்பாக, வெளியிடப்பட்டுள்ள இந்நூலை எழுதியவர், சூ.இன்னாசி.

5.தமிழ் மொழி.:-

1911-ஆம் ஆண்டில் ஏழாம் பதிப்பாக, ஆக்ஸ்போர்டு கலரண்டன் பிரஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட நூலை , எழுதியுள்ளவர், ஜி.யு. போப்  ஆவார்.

6.தமிழ்மொழி வரலாறு :- 1972 ஆம் ஆண்டு ம்துரை சீயோன் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ள் இந்நூலை எழுதியவர், மோசசு பொன்னையா ஆவார்.

7. திராவிடக் கல்வி;-

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட்டுள்ள  இந்நூலை  எழுதியுள்ளவர், மார்க் காலிஸ் ஆவார். கருத்துக்களை விளக்கும்போது இலக்கண நூற்பாக்களையும், இலக்கியப் பாடல்கள் பலவற்ரையும் சான்று தருகின்றார்.

‘வகரம் நான்மொழிக்கு ஈறாதல் பற்றிக் கூறும் போது,
                  ”லகரக் கிழவி நான்மொழி ஈற்றது “  பென்னும் தொல்காப்பிய நூற்பாவைச் சான்றாகத் தருகின்றார்.

தமிழியல் என்னும் நூலை,  (TAMILOGY ) 
எழுதியோர்

டாக்டர்   சூ. இன்னாசி ( பேராசிரியர் (தலைவர்)
ஜே.பீ.விக்ரோரியா ( ஆய்வாளர் )
கிறிஸ்துவத்  தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை-5
1990-ல் வெளியான நூலின் விலை ரூ.20/-

இரண்டு பாக்கியுள்ளன. இவை எல்லாம் வெட்டி ஒட்டவைப்பட்டவை அல்ல. படித்து எழுதப்பட்டவை. மின்மடலின் சர்வதேசப் பொறுப்பாளர் ஏற்றுக் கொள்வார் என்றே எண்ணுகிறேன் என்னைப் போன்று தெரியாதவர்களுக்கு பழயவை எல்லாமே புதியதுதான்.


சென்னை திருவல்லக்கேணி கோஷா மருத்துவ னை அருகில் உள்ள நடைபாதைக் நடைகளில் வாங்கப்ப்ப்ட்டது. வாங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இலக்கண்வியல், மொழியியல், அகராதியியல், சென்னை மொழிபெயர்ப்பியல் என்ற நான்கு பிரிவுகள் உள்ளன. வலைப்பூவில் பதிய இன்னும் இரண்டு பாக்கியுள்ளன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.