காரைக்குடிக்கு மிக அருகிலேயே உள்ளது சிராவயல். இங்குதான் ஜீவா அமைத்த "காந்தி ஆசிரமம்' உள்ளது. செட்டிநாட்டன்பர் சிராவயல் காசிவிசுவநாதன் துணையோடு தொடங்கப்பெற்ற இந்த ஆசிரமத்தில் 100 குழந்தைகளுக்குமேல் பயின்றனர்.
"காந்தியத்திட்டத்தை நடைமுறைப்பயிற்சியாகக் கற்றுத்தந்த குருகுலம் இது. தேவாரம், திருவாசகம், நிகண்டு, திருக்குறள், பாரதியார் கவிதைகள் போன்றவைகளே முக்கியமாக குருகுலத்தில் போதிக்கப்பட்ட நூல்கள். இங்குதான் நாங்கள் மனிதகுலப்பண்பை வளர்க்க வேண்டிய கருத்துக் கருவூலங்களைத் தெரிந்து கொண்டோம்.
இங்குதான் ஜாதியெல்லாம் ஒன்று என்று சொல்லக்கூடிய எண்ணம் இளம்குழந்தைகளாகிய எங்கள் உள்ளத்தில் ஏற்றிவைக்கப்பட்டது' என்கிறார்
இக்குருகுல மாணவரும், ஜீவாவின் தம்பியுமாகிய நடராஜன்.
இந்த ஆசிரமத்திற்குக் காந்தியைப்போலவே வருகை தந்து சிறப்பித்தவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்.
1929-இல் சிராவயலில் இருந்த இக்குருகுலம் பக்கத்து ஊரான நாச்சியார்புரத்திற்கு மாற்றப்பட்டது. அந்தச் சமயம்தான், ஈ.வெ.ரா., ஜனசங்கரகண்ணப்பர், சுவாமி கைவல்யம், கோவை அய்யாமுத்து இவர்களின் தொடர்பு ஜீவாவுக்கு கிட்டியது.
அக்காலத்தில் நடத்தப்பெற்ற மதுவிலக்குப் பிரசாரத்திற்காகக் குருகுலக் குழந்தைகளைக் கொண்டு நாடகங்கள் நடத்தியவர் தோழர் ஜீவா. தணியாத தமிழ்ப்பற்றால், தம்பெயரை, "உயிர் இன்பன்' என மாற்றிக்கொண்ட ஜீவா,
தம்பி நடராஜனை, மணிமொழியாக்கினார். இதனையடுத்து, சுவாமிநாதன் - மணித்தொண்டன், கிருஷ்ணன் பிள்ளை -"இளங்கோ', இராமசாமி -"தொல்காப்பியன்', நாகலட்சுமி - "கிளிமொழி" என்று ஆனார்கள். இதுபோல், எத்தனையோ குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டித் தமிழன்னையை
நன்றி :- தினமணி 16 Sep 2012 10:15:40 AM IST
0 comments:
Post a Comment
Kindly post a comment.