Monday, September 24, 2012

330 வருடங்களுக்கு முன் வரலாற்றில் தவறாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களைத் திருத்த ஆன்லைன்-ல் போராட்டம். !




 
டாக்டர் கிறிஸ் நாஷ் ஓர் உளவியல் நிபுணர். அவர் இங்கிலாந்தில் வசிக்கும்பொழுது ஓர் உண்மை நிகழ்வைப் புத்தகமாக்கினார். அதில் 1682-ல் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட மூன்று பெண்மணிகளைப் பற்றியது.  அம்மூவரும் சூனியக்காரிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டதே அத்தண்டனைக்குக் காரணம். அவர்களின் பெயர்கள் முறையே, டெம்பரன்ஸ் லாயிட், சூசன்னா எட்வர்ட்ஸ், மேரி ட்ரம்பிள்ஸ்.

 17-ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட இம்மூவரின் மரணதண்டனை அப்போதைய படைப்பாளிகள் பலருக்கும் கருப்பொருளாய் இருந்திருக்கின்றது . அம்மூவரின் பெயரும் பொறிக்கப்பட்ட நினைவிடம் இன்றும் உள்ளது. 

அவர்கள் தண்டனை ஒரு எக்ஸிடெர் வெளியே Heavitree-ல் ஆகஸ்ட், 25, 1682 -ல் நிறைவேற்றப்பட்டது.The Book of Bideford என்ற நூலில் இந்த உண்மை நிகழ்வை,  ஜான் வாட்கின்ஸ் என்ற வரலாற்று ஆசிரியர் 1792-ல் ஆவணப்படுத்தியுள்ளார்.

அந்த மூன்று பெண்களும்சூனியக்காரிகள் அல்ல என்பது டாக்டர் கிறிஸ் எழுதிய நூலின் முடிவு. அவர்களை அரசு மன்னித்து சூனியக்காரிகள் பட்டியலிலிருந்து அந்த மூவரின் பெயரையும் நீக்கிவிடவேண்டும்  என்பதே அவரது கோரிக்கை.

தற்பொழுது  கிறிஸ்  கனடாவில் வசிக்கின்றார். அவர் எழுதிய நூலின் கோரிக்கையை நிறைவேற்றிடப் 10000 பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தைத் துவக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாகக் கையெழுத்திட விரும்புவோர் http://epetitions.direct.gov.uk/petitions/37616 என்ற இணைய தளத்திற்குச் செல்லலாம்.

http://swns.com/news/campaign-to-clear-names-of-three-women-hanged-for-witchcraft-three-centuries-ago/ என்ற இணையத்தில்  முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

SOUTH WEST NEWS என்பதன் சுருக்கமே SWN . திகைப்பும் வியப்பும் தரக்கூடிய தகவல்களையும், படங்களையும் வைத்திருப்போர் SWS-ஐத் தாரளமாக அணுகலாம். தக்க விலைக்கு வாங்கிக் கொள்ளத் தயாராக உள்ளனர். இதழியல் திறம் படைத்தோரையும் தொடர்பு கொள்ளச் சொல்கின்றது, SWS நிறுவனம்.






0 comments:

Post a Comment

Kindly post a comment.