Monday, September 10, 2012

அனைத்துலகத் தற்கொலைத் தடுப்பு நாள் -10-09-2012 -SNEHA


மதம், அரசியல் சார்பற்ற தொண்டு நிறுவனமாக 14-04-1986 ஆம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகின்றது. தினமும் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை வாரத்தின் ஏழு நாட்களிளும் செயல்படுகின்றது. தொலைபேசி மூலம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றது., சிநேகா

தொலைபேசி -மின்னஞ்சல்- கடிதம்-நேரடியாக, எது வசதியோ அப்படித் தொடர்பு கொள்ளலாம். 

தொலைபேசி எண்- 044-2464 0050


மின்னஞ்சல் முகவரி :- help@snehaindia.org

இணையதளம் :- www.snehaindia.org

தொடர்பு கொள்பவரின் உணர்வுகளையும், மனச்சுமைகளையும் வெளியிட, தொடர்ந்து நட்பு பாராட்டுகிறது. அவர்கள் விபரங்களை ஒருபோதும் வெளியிடுவதில்லை.

தற்கொலைக்கு முயல்வோர், ஒருபுறம் சாகவேண்டும் என்ற மனோபாவத்துடனும், மறுபுறம் வாழவேண்டும் என்ற விருப்பத்துடனும் இரட்டை மனநிலையில் அவதிப்படுகின்றனர். இந்நிலையில்தான் அவர்கள் தற்கொலை முயற்சியீடுபடுகின்றனர். அவர்களின் மனக் குறைகளைப் பரிவுடன் கேட்டு ஆறுதலைத் தருகின்றது, சினேகா.

தற்கொலை தடுப்பிற்கு மட்டுமன்றி, மனச்சோர்வு கொண்டு தவிப்போருக்கும், தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என ஏங்குபவர்களுக்கும் தங்கள் துயர்களைப் பகிர்ந்து கொள்ள உதவிக்கரம் நீட்டுகின்றது, சிநேகா.

மனப்பாரத்தை இறக்கி வைக்க உதவும் சுமை தங்கியாக, உள்ளக் குமுறல்களின் வடிகாலாக, சிநேகா திகழ்கின்றது. உள்ளத்துயரத்துடன் அந்நியராக உள்லே நுழைபவர் தன்னைப் புரிந்து கொள்ள ஒரு நண்பர் இருக்கிறார் என்ற மனநிலையுடன் வெளியேறுகின்றார். 

இலவசமாகச் செயல்படும் ஒரு சிநேகா இலவசமான  அமைப்பு.

இறைவன் / இயற்கை  கொடுத்த உயிரை 

நாமே வலியப் போய் தற்கொலை 

 செய்து கொள்வது, எவ்வகையில் நியாயம் ? 


0 comments:

Post a Comment

Kindly post a comment.