Tuesday, August 14, 2012

கம்போடியாவில் ஹிட்லரின் ஒரு வாரிசு -எஸ்.கிருஷ்ணன்


Krishnan S's profile photoKrishnan Skrishnan.singai@gmail.com

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியில் நாஜி ஹிட்லரின் உத்தரவின் பேரில் பல லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறுஉலகத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்தது என்பதும் அந்த நாஜி, குற்றவாளிகளனைவருக்கும்- ஆல்ஃபிரட் ஈச்மன் உட்பட அனைவரும்-
நியுரம்பர்க் விசாரணையில் மரண தண்டனை வழங்கப்பட்டதும் உலகமே அறியும்.

ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற படுகொலைசமீபகாலத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் கம்போடியா என வழங்கப்படும் ஆசிய நாட்டிலும் நிறைவேறியது. அந்தப் படுகொலை ‘போல்பாட்’ (Pol Pat) எனும் சர்வாதிகாரியின் ஆட்சியில் கேமர் ரூஜ் (Khmer Rouge) எனும் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

ஒரு சிறைக்கூடத்தில்அந்தச் சிறையின் அதிகாரியாக இருந்த ஒருவன் விசாரணை என்ற பெயரில் அப்பாவி கம்போடியர்களைச் சித்திரவதை செய்து கொன்றுகுவித்திருக்கிறான். பெரியவர்கள் பட்டினியாலும்,
சித்திரவதையினாலும் மாண்டனர். மற்றவர்கள் கண்முன்னால் அவன் குழந்தைகளைக் கொன்றவிதம் இதயம் கொதிக்கச் செய்யும். குழந்தைகளின் கால்களை ஒன்றாகப் பிடித்துக் கொண்டு அவர்களை தரையில் துணி தோய்ப்பது போலஅடித்துக் கொன்றிருக்கிறான். இதை நிகழ்த்திய கொடூரனின் பெயர் காம்ரேட் டுச் (Comrade Duch) என்பது. இவனைப் பற்றி பிறகு பார்ப்போம்.

இப்போது கம்போடியாவுக்குச் செல்வோம்.

கம்போடியா நாட்டின் எல்லைப் பகுதியிலுள்ள ஒரு சிற்றூர். அங்குள்ள கிராம சர்ச் ஒன்றில் பாஸ்டராக இருக்கும் கிரிஸ்டோஃபர் லாபெல்என்பவர் ஏசு ஊழியம் செய்து கொண்டிருந்தார். கம்போடியா பெரும்பாலும் புத்த மதம் சார்ந்த மக்கள் உள்ள நாடு. அதில் கிறிஸ்தவமும் கால்ஊன்றி வளரத் தொடங்கியது.

1996-ஆம் ஆண்டு அது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதன் பாஸ்டர் கிறிஸ்டோஃபரை அணுகிப்பேசத் தொடங்கினான். அவன் குரல் மிகவும் மெல்லியதாகவும் கவனமாகக் கேட்டாலொழிய காதில் விழாத முறையிலும் அவன் பேசினான்.அவன்தன்னை ஹாங் பின் (Hang Pin) என்றும், தான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் என்றும் அறிமுகம் செய்து கொண்டான். அவன் தோற்றத்தில் மெலிந்த,குள்ளமானஆளாக இருந்தான்.

அவன் பாஸ்டரிடம், அவனது மனைவியை யாரோ சிலர் வீட்டுக்குள் புகுந்த கோரமாகக் கொலை செய்துவிட்டார்கள் என்றும், அவனையும் பின்புறம் துப்பாக்கி முனையால் குத்தித் துன்புறுத்தி கொலை செய்ய முயன்றதாகவும் பாஸ்டரிடம்சொன்னான். அவர்களிடமிருந்து தப்பி வந்திருக்கும் அவன் கடவுளின் துணை நாடி பாஸ்டரைத் தேடி வந்திருப்பதாகச் சொன்னான்.

மறுநாள் பாஸ்டர் கிறிஸ்டோஃபர் ஓர் ஆற்றின் நீரோடையின் மத்தியில் நின்றுகொண்டு அவனுக்கு ஞானஸ்நானம் செய்வித்து கிறிஸ்துவனாகமதமாற்றம் செய்தார். புத்த மதத்திலிருந்து அவன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினான். மதம் மாறியபின் அவன் பைபிளை ஆழ்ந்து படிக்கத்தொடங்கினான்.

இவனது பைபிள் ஆர்வத்தைப் பார்த்து பாஸ்டரே ஆச்சரியப்பட்டார். இதுபோல் ஆர்வமுள்ள ஒரு கிறிஸ்தவனை தான்பார்த்ததேயில்லை என்பது அவரது எண்ணம். சில நாள்களுக்குப் பிறகு ஹாங் பின் பகுதி நேர மத போதகராக மாறி ஊழியம் செய்யத்தொடங்கினான்.நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்டர் கிறிஸ்டோபர் லாபெல் ஓய்வு பெற்று, தனது சொந்த ஊரான லாஸ் ஏன்ஜலிஸ் நகரத்தில்வாழ்ந்து வந்தார்.
அப்போது அவருடன் தொலைபேசியில் ஒருவர் பேசினார். அவர் சொன்ன செய்தி– அவரிடம் ஞானஸ்நானம் பெற்ற ஹாங்பின் என்பவன் கம்போடிய நாட்டில் போல் பாட் ஆட்சியில் 17000-க்கும் மேல் மக்களைப் படுகொலை செய்த ஒரு போர்க்குற்றவாளியான காம்ரேட் டுச் என்பவன்.

இந்த காம்ரேட் டுச்-சின் இயற் பெயர் கெயிங் கியூக் ஈவ் (Kang Guek Eav) என்பது. இவன் போல் பாட் ஆட்சியில் கேமர் ரூஜ் இயக்கத்தினர் நடத்தியபயங்கரமான கொடுமைகளின் போது டுவால் ஸ்லெங் (Tuol Sleng)  சிறையின் வார்டனாக இருந்தவன். லாபெல் அசந்து போனார்.
வாடிய முகமும்,இளைத்த உடலும், மெல்லிய குரலுமுடைய தன்னால்
ஞான ஸ்நானம் செய்விக்கப்பட்ட அந்த மனிதன் ஒரு பயங்கரமான மனிதனா?ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்த மகாபாவியா?
அவருக்கு அதிர்ச்சி.

 கம்போடியாவில் அப்படி என்னதான் நடந்தது, பார்ப்போமா?

கேமர் ரூஜ் ஆட்சியில் டுவால் ஸ்லெங் சிறையில் வார்டனாக இருந்த டுச் சுமார் 17,000 பேரின் மரணத்துக்குக் காரணமானவன். இவ்வளவுஅதிகமான அப்பாவிப் பொதுமக்களை இந்தக் கொடூரன் கொல்ல என்ன காரணம் என்று வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்து பார்த்தனர்.

அவர்கள் கணக்குப்படி மொத்தம் நடந்த பல லட்சம் கொலைகளில் இந்த டுச் மட்டும் 17000 கொலைகளுக்குப் பொறுப்பாகிறான். இவன் சிறையில்வார்டனாக இருந்து எப்படி இந்தக் கொலைகளைச் செய்தான்? இந்த வழக்கை விசாரித்த அதிகாரி, நிகழ்ச்சி நடந்த அந்த சிறைக்குச் சென்று அங்குகிடைத்த எல்லாச் சாட்சியங்களையும் துல்லியமாக ஆராய்ந்தார். அங்கு சிறையில் அடைக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழைக்கப்பட்டகொடுமைகளை வெளிக் கொணர்ந்திருக்கிறார்.

சிறையில் மக்கள் துன்புறுத்தப்பட்டனர்; சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். இவைஎல்லாவற்றையும் இந்த டுச் கணக்கு வைத்திருக்கிறான்.இவனுக்கு மிகவும் பிடித்த சித்திரவதை கைதியைத் தலை கீழாகத் தொங்கவிட்டு அவன்தலை முகம் இவை சிறுநீரால் நிரப்பப்பட்ட தொட்டியில் மூழ்கும்படி வைத்து அடித்துத் துன்புறுத்துவது.

குழந்தைகள் விஷயத்தில் இவன் காட்டுமிராண்டிகளைவிட கேவலமாக நடந்து கொண்டான். அந்த குழந்தைகளின் இரண்டு கால்களையும்சேர்த்துப் பிடித்துத் தூக்கி அவர்கள் தலை சிதறும்படி தரையில் அடிக்கச் செய்வான். மூளை சிதறி ரத்தமும் நிணமுமாகக் குழந்தைகள் தன்காலடியில் கிடப்பதைக் கண்டு அவன் மகிழ்ச்சியடைந்தான். தன்னை ஒரு பெரிய சாதனையாளனாக முன்னிருத்திக் கொள்ளவேண்டுமென்கிறவெறி அவனுக்கு.

அவன் கொடுமை புரிந்த அந்தச் சிறைச் சாலைக்கு சில அமெரிக்க பத்திரிகையாளர்கள் சென்றார்கள். அங்கு சுவற்றிலெல்லாம்அங்கு நடந்த கொடுமையின் சின்னமாக ரத்தக்கறை படிந்து கிடப்பதைக் கண்டனர். மேலும் சுவர்களில் சில சித்திரங்கள். அவை அனைத்தும் அந்தச்சிறையில் பசியும் பட்டினியுமாகக் கிடந்த மக்களின் படங்கள். இதை வரைந்தது ஓர் ஓவியன். அங்கு கைதியாக அடைபட்டிருந்தவன். அவன்உயிரை இவர்கள் போக்காததற்குக் காரணம் அவனிடம் அடிக்கடி போல் பாட்டின் போட்டோ ஒன்றைக் கொடுத்து அதுபோல வரையச்சொல்லுவார்கள். அவனும் வரைந்து கொடுப்பான். அவன் ஒருவன்தான் கொலைக்கு ஆளாகாமல் வெளியே வந்த ஒரே சாட்சி.

இன்றுநீதிமன்றத்தில் தனது இயலாமையையும் பொருட்படுத்தாமல் டுச்-குக்கு எதிராகச் சாட்சியமளித்திருக்கிறார். டுச் சிறையில் உள்ளவர்களைஒவ்வொருவராக விசாரணைக்கு உட்படுத்துவான். அவன் அவற்றை எழுதி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகளையும் எழுதிக்கையெழுத்திடுவான்.

அந்த ஆவணங்களே இன்று அவனுக்கு எதிரான முக்கிய சாட்சியாக அமைந்துவிட்டன. இனி இதன் பின்னணியைப்பார்ப்போம்.

அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.
blogspot.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.