மேலுள்ள வாகனங்கள் மூலமாக வீட்டிற்குச் சிலநாட்கள் முன்னே / பின்னே கேஸ் சிலிண்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. வாங்கிவோரும் அன்பளிப்பாக ஐந்தோ பத்தோ கொடுத்து சிலிண்டரை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொள்வோம். விலை ஏறினாலும் நமக்கு வேறு வழியில்லை.
ஒரு வீட்டிற்கு ஒரு சிலிண்டர் போதாது என்றுதான், இரண்டு சிலிண்டர் வைத்துக் கொள்ள வாய்ப்புக் கொடுத்தார்கள். தற்பொழுது ஒரு சிலிண்டர்தான் வைத்துக்கொள்ல வேண்டும், ஒன்றை வருகின்ற செப்டம்பர் 15 தேதிக்குள் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் செய்திகள் பரவுகின்றன.
வலைப்பூவில் மூத்த பெரியவர் ஒருவர் செத்துத்தான் தொலைய வேண்டும் என்று கூப்பாடும் போட்டுவிட்டார். எங்கள் பகுதி இலவச் வார இதழும் ஒரே சிலிண்டர்தான் என்று உறுதி செய்தது.
சென்னையிலிருக்கும் வசதியைப் பயன்படுத்தி சில கட்சி அலுவலகங்களைத் தொடர்பு கொண்டேன். நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல. நல்லனவற்றை ஆதரிப்பேன். மற்றவற்றைத் தனி ஒருவனாக எப்படி எதிர்த்துப் போராட முடியும்.? மெனித்துவிடுவேன்.
ம.தி.மு.க. அலுவலகத்தோடு தொடர்பு கொள்ள முடிந்தது
ண்பர் அருணகிரியுடன் பேச முடிந்தது. சற்று நேரம் சென்றபின் அவரே என்னை அழைத்தார். கம்பெனியில் விசாரித்தாகிவிட்டது. ஒரு வீட்டில், ஒருவர் பெயரில் இரண்டு சிலிண்டர்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். வேறுமாதிரியாக ஒரே வீட்டில் சிலிண்டர்கள் வெவ்வேறு பெயர்களில் வைத்திருந்தால் அவற்றைத்தான் சரண்டர் செய்ய வேண்டும். இது கம்பெனி எடுத்த முடிவல்ல. சுப்ரீம் கோர்ட்டின் ஆணை என்றார். அவருக்கு நன்றி சொல்வதற்குள் தொலைபேசி இணைப்பு ”கட்” ஆகிவிட்டது. அன்பர் அருணகிரிக்கு நன்றி. தொடர்பு எண்:-9444393903
எனவே, தற்பொழுது பயன்பாட்டில் உள்ள இரண்டில் ஒன்றைச் சரண்டர் செய்ய வேண்டியநிலமை ஒருபோதும் ஏற்படாது.
எனவே வதந்தீக்களை நம்ப வேண்டாம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.