Saturday, August 11, 2012

மனித இனத்தை மாய்த்திட முனையும் புற்றுநோய் !

உலகில் மரணத்தை விளைவிக்கும் கொடிய நோய்களில் புற்றுநோய் 

முதலாவதாக விளங்குகின்றது

இந்தியாவில் மரணத்தைத் தருவிக்கும் நோய்களில் இரண்டாவதாக 

விளங்குகின்றது ( 13% ) அது ஆண்டுக்காண்டு 11% வளர்ச்சி அடந்து 

வருகின்றது. குறிப்பாக நகரப் பகுதிகளில் அதிகமாகக் காணப் 

படுகின்றது. 


ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் இந்தியாவில் புற்று நோயால் 

தாக்கப்படுகின்றனர். ஆண்டு தோறும் 3.5 லட்சம் பேர் புற்று நோயால்

இறக்கின்றனர். இந்தியாவில் மொத்தம் 28 லட்சம் புற்று நோயாளிகள்

எப்போதும் இருந்து வருகின்றனர்.புற்று நோய்க்கு இந்தியா தலைநகராக 

விளங்குகின்றது.

ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இப்பயங்கரமான நோய்க்கான 

மருந்துகளின் விலை விரைவில் வெகுவாகக் குறையும் என சில மருந்து 

நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

இந்த  நோயை முதலிலேயே கண்டு பிடிக்கப்பட்டால் நோயாளியின் முழு 

ஒத்துழைப்புடன் முழுவதும் குணமாக்கி விடலாம்.


குறிப்பாகப் பெண்களிடையே மார்பகப் புற்று நோய் ஆண்டுக்காண்டு 

அதிகமாகி வருகின்றது. ஆண்டுதோறும் 80000 பெண்கள் புதிதாக இதனால் 

பாதிக்கப் படுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் நகரமயமாதலும், 

நவீனமயமாதலும் ( MORDERNISATION ) ஆகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


.உடல் பருமன், உடல் உழைப்பின்மை, காலந் தாழ்ந்த குழந்தைப் பேறு,

பிற்ந்த குழந்தைக்குத் தய்ப்பால் இன்மை, மது அருந்துதல், புகையிலை 

உபயோகம் இவையே மார்பகப் புற்று நோய்க்கான  காரணிகள்.


டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை மாநகரங்களில் பெண்களிடையே 1982 

மற்றும் 2005 ஆண்டுகளுக்குட்பட்ட காலக் கட்டத்தில் மார்பகப் புற்று நொய் 

இரு மடங்காகி உள்ளது.


உலகிலேயே புகையிலை உபயோகத்தால் வரும் புற்று நோய் இந்தியாவின் 

தென்பகுதி, வடகிழக்குப் பகுதி, மற்றும் மத்தியப் பகுதிகளிலும் அதிகமாகும்

என ஒரு சர்வே கூறுகின்றது


உலகிலேயே வாய்ப் புற்றுநோய் வார்தாவில் அதிகம். பாண்டிச் சேரியில் ஒரு 

லட்சம் பேரில் 8.9 பேர் வாய்ப் புற்று நோயால் தாக்கப் படுகின்றனர்.

பெங்களூரிலும், சென்னையிலும் வயிற்றுப்புற்றுநோய் அதிகம்.

தற்பொழுது தெரிவிக்கப்படும் புர்று நோய் குறித்த புள்ளி விபரங்கள் 

முழுமையாக  உண்மை நிலையைப் பிரதிப்பதில்லை.


ஜார்கண்ட், ஒடிசா போன்ற ஏழ்மை அதிகமுல்ல மாநிலங்களில் புற்று 

நோயால் இறப்போர் மற்ற மாநிலங்களை விடக் குறைவு என்ற கணக்கெடுப்பு

எப்படிச் சரியாக இருக்க முடியும் ?


( D.N.A.) டி.என்.ஏ. எனும் உயிர்ச் செல் பாதிக்கப் படுவதால்தான் பெருமளவு 

புற்றுநோய் ஒருவருக்கு வருகின்றது.  குழந்தைகளுக்கு வரும் புற்று 

நோயைத் துவக்க காலத்திலேயே அடையாளம் கண்டு பிடித்து சிகிச்சை 

அளித்தால் முழுவதுமாகக் குணமளித்துவிடலாம்.


ஆனால், வயது வந்தவர்களுக்கு வரும் புற்று நோயை உரிய காலத்தில் 

கண்டுபிடிக்கப்பட்டு சரியான சிகிச்சை மூலம் முழுமையாகக் 

குணப்படுத்தப்பட்டாலும், சில ஆண்டுகளுக்குப்பின் மீஈண்டும் அது தாக்கப் 

படக்கூடும் 


இந்தியாவில் 70% புற்றுநோய் அது முற்றிய பிறகே கண்டுபிடிக்கப்படுவதால்,

குணமாக்க முடியாமல் மரணத்தில் முடிகின்றது.

புற்று நோய் பல வகைப்படும். அது நகரம், கிராமம் என்பதல்லாமல்,

பல்வேறு சமூகங்கள், வாழ்க்கை முறை ( LIFE STYLE  ) , உணவுப் பழக்கங்கள் 

போன்றவைகளில் உள்ள வித்தியாசங்களின் அடிப்படையில் புற்று நோயின் 

வகையும்  மறுபடுகின்றது.

ஜப்பானியர் அதிக அளவு உணவில் உப்பு சேர்ப்பதால் வயிறு சம்பந்தமாக 

புற்றுநோய் அவர்களிடையே அதிகம்.

வளர்ந்த நாட்டினர் பச்சை மாமிசம், மற்றும் பால் உணவு வகைகள் அதிகம் 

உண்பதாலும், காய்கறிக:ளை அதிகம் சேர்க்காததாலும் அவர்களை விரைவில் 

புற்று நோய் தாக்குகின்றது.

சூரிய ஒளியில் உள்ள  புற ஊதாக்கதிர் அதிகம் தாக்குவதால் தோல் புற்று 

நோய் வருகிறது.

இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 71%, 30லிருந்து 69 வயது

உடையவர்களுக்கு ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம், உரிய 

காலத்தில் சோதனை செய்து கொண்டு இவ்வியாதியைக் கண்டு பிடிக்க 

வேண்டும் என்ற மனப்பான்மை இல்லாமையே ஆகும்

தற்போது இந்தியாவில் புற்று நோய்க்கு மலிவான மருந்துகள் 

கிடைக்கின்றன. கெமொதெரபி எனும் சிகிச்சை சிறந்த மலிவான 

சிகிச்சையாகும்.

உலக அளவில் 10 முதல் 12 சதவிகித புற்று நோய் நோயாளிகள் தவறாக 

இனம்  கண்டுபிடிக்கப் பட்டவர்கலேயாவர்.

பூச்சிக் கொல்லி மருந்துகள், இரசாயனப் பொருட்கள், போதைப் பொருட்கள்

ஆகியவை புற்று நோய் சம்பந்தப்பட்டவைகளாகும்.

இவ்வாறு பல்வேறு மாசுகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள நாம் எளிமையான

மற்றும் முறையான வாழ்க்கை வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

கட்டுரை ஆக்கம். நன்றிக்குரியவர்:-

ஆசிரியர்:- இல.சு.ஜெகநாதன்,  மக்கள் நினைத்தால்,

தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இய்க்க மாத இதழ்

53, 2-வது குறுக்குத் தெரு, பாரதி நகர்,

அம்பத்தூர், சென்னை-600 053...

மேலும் இவர் எழுதிய, புற்று நோய் பற்றிய தவறான கருத்துக்கள்,

புற்று நோய்க்கான காரணங்கள், பல்வேறு சிகிச்சை முறைகள்

குறித்து தனிதனியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


பொதுவாக நோய்கள்ளை வருமுன் காத்தலே சாலவும் நன்று.


ஆனால் எந்தத் தீய பழக்க வழக்கங்களும் இல்லாதோறுக்கும்

புற்றுநோய் வருவதற்கான காரணம் என்னவோ?


இயற்கை உணவு உலகம் வலைத்தளம் அவசியம் படித்துப்பலன்பெற

வேண்டிய இணைய தளம். நோய்ச் சிகிச்சைக்கான வழியும் உண்டு.

http://naturalfoodworld.wordpress.com/2011/10/17/


0 comments:

Post a Comment

Kindly post a comment.