புது தில்லி, ஆக.30: யை முழுவதுமாக விலக்கி மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 90-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மும்பை, புணேயில் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல் நடக்கக்கூடும் என்று எஸ்.எம்.எஸ். மூலம் வதந்தி பரவியது. இதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், சொந்த மாநிலத்துக்கு திரும்பினர். இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த வதந்தி சதிக்கு பாகிஸ்தான் காரணமாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது.
இதன்பின்னர், ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். அனுப்ப கட்டுப்பாடு விதித்தும், வதந்தி பரப்ப காரணமாக கருதப்பட்ட 250 இணைய தளங்களை முடக்கியும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்தத் தடை 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 5 எஸ்.எம்.எஸ்.க்கு மேல் அனுப்ப முடியாது. இப்போது இயல்பு நிலை திரும்பியதை அடுத்து, ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 20 எம்.எம்.எஸ்.களை அனுப்பலாம் என கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில், தொகுப்பு எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப விதிக்கப்பட்ட தடையை முழுவதுமாக விலக்கி மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நன்றி ;-தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.