24 நாட்களில் 48 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட படம். நான்கு வாரங்களே
ஓடினாலும் நல்ல பெயரைப் பெற்றுள்ள படம்! ”ஒத்த வீடு” திரைப்படம் ஓர் கிராமத்துக் கதைதான் ! இந்த ஒத்த வீட்டில் பேயும் இல்லை; பிசாசும் இல்லை. மூட நம்பிக்கைகளுக்குச் சவுக்கடி கொடுக்கும் படம் என்று. மார்க்சிய ஏடான தீக்கதிர் நற்சான்று வழங்கியுள்ளது.
இந்தவார நட்சத்திரமாகவும் இயக்குநர் பாலு மணிவண்ணனைத் தேர்ந்தெடுத்துள்ளது.
சிறுகதைகள், நாவல்கள் எழுதிவந்த இவர், ”விரலுக்கேத்த வீக்கம்” திரைப்படத்தின் மூலம் மக்கள் தொடர்பாளராகி, இதுவரை 25 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
தான் பிறந்து வளர்ந்த கிராமத்து மக்களின் உதவியால் குறும்படமொன்றைத் தயாரித்த அனுபமும் உண்டு.திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கடுவெளி கிராமமே இவர் பிறந்த ஊர். கடுவெளி.
எதிரியை எதிர்த்துப் போராடி அழிப்பதற்கு மக்கள் ஓர் உள்ளத்தினராகவும், ஒருமித்த அறிவினராகவும் ஓரணியில் திரண்டு போராடுவதற்கான்ச் சிறந்த படைக் கருவிகளே கலையும் இலக்கியமும் “என்று மாவோ கூறினார்.ஒரு பிரச்சினைக்கு எதிராக ஒத்த கருத்தோடு அணிதிரள வைக்கும் ஒரு போராட்டக் கதையை உருவாக்கி வைத்திருப்பதாகச் சொல்கின்றார். மக்கள் மீர்ஹான ஆளுமைகளை எதிர்த்து நிற்கும் படைப்பு என்பதும் இவர் நம்பிக்கை.
தீக்கதிரின் இந்தவார நட்சத்திரத்திறகாகப் பேட்டிகண்ட, சபீதா ஜோசப்பிற்கும் அதனை வெளியிட்டு உதவிய தீக்கதிருக்கும் நன்றி.
http://rssairam.blogspot.in/2012/08/2016.html
அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர் எடுத்துள்ள ஒபாமா 2016 அடுத்த அமெரிக்கத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும்.
அதேபோன்று இயக்குநர் பாலு மலர்வண்னன் போன்றோர் எடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் தமிழகத்தின், இந்தியாவின் வருங்காலத்தை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை விதையை நெஞ்சில் விதைக்கின்றது.
பாலு மலர் வண்ணன் முயற்சிகள் தொடர்ந்து வெற்றிபெற நல்வாழ்த்துக்கள் !
0 comments:
Post a Comment
Kindly post a comment.