Sunday, August 5, 2012

காசிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தால்போதும் என்கிறார் ஓர் மூதாட்டி?

                                                                      ஜெருசலம்


                                                              
         நேபாளத்தின் முக்திநாத்         சீனாவில்   மானசரோவர்                                              
 
  :    
தமிழகத்திலிருந்து   இந்துக்கள் நேபாளத்தில் உள்ள  முக்திநாத், சீனாவில் 

உள்ள மானசரரோவர் ,கிறிஸ்தவர்கள்  ஜெருசலம் ஆகிய இடங்களுக்குப் 

புனித யாத்திரை மேற்கொள்ள  அரசு சார்பில் நிதி உதவி செய்யப்படும் என்ற 

தேர்தல்  வாக்குறுதியை,  தமிழக முதல்வர் டாக்டர் செல்வி ஜெயலைதா 

நிறைவேற்றியுள்ளார்.

ஜெருசலம் சென்றுவர முதற்கட்டமாக 500 பயனாளிகள்  

தேர்ந்த்டுக்கப்படுவர்.

முக்திநாத் சென்று வர  250 இந்துக்களும், மானசரோவர் சென்றுவர 250 

இந்துக்களும், தேர்ந்தேடுக்கப்படுவர். அறநிலையத்துறை நாளிதழ்கள் 

மூலம்  விளம்பரம் செய்யப்படும். வந்த விண்ணப்பங்களிலிருந்து

தகுதியியான பயனாளிகள் விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவர்.


மானசரோவர் பயணத்திற்கு, சென்னையிலிருந்து விமானக்கட்டணச் 

செலவு தொகை .40 ஆயிரம் வீதம் 250 பேருக்கு வழங்கப்படும். 

முக்திநாத் பயணத்திற்கு ரயிலில் ஒருவர் சென்றுவர  ஆகும் மொத்தச் 

செலவான, 25 ஆயிரத்தில், 10 ஆயிரம் வீதம் 250 யாத்திரீகர்களுக்கு

ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டில் மொத்தம்  ரூபாய் 1.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அடுத்த தேர்தலில்:-

இந்தியாவிற்குள் இருக்கும் பார்க்க விரும்பும் புனித ஸ்தலங்களுக்குச்

சென்றுவர போக்குவரத்துச் செலவுக்கு ஆகும் தொகையில் பாதியை

புதிதாக அமைக்கப்போகும் எங்கள் அரசு கொடுக்கும் என்று ஒரு கட்சி

தேர்தல் விதியில் சேர்த்துக் கொள்ளக்கூடும்.


இன்னொரு கட்சி இலவச ரெயில் உணவு இத்யாதி சகல வசதிகளுடன்

வுடுவதாகத் தேர்தல் வாக்குறுதி அளிக்கக் கூடும்.


இன்னொரு கட்சி அமையப்போகும் கூட்டணியின் பெர்ம்பான்மையைக் 

கலந்தாலோசித்து, மேலிடத்தின் அனுமதியோடு வெளியிடுவோம் என்றும்

கூறக்கூடும்.


தென்கோடியில் உள்ள ஓர் மூதாட்டி என்னைக் காசிக்குக் கொண்டு 

சேர்த்துவிட்டால் போதும், திரும்பி வர உதவியே வேண்டாம் என்று

முணுமுணுப்பதாகக் கேள்வி.

அடுத்த அறிக்கை முழுத்தொகையும் தரப்படும் எனவும் வரக்கூடும் :-


உதவி:- தினசரிகள்                                                  
  Jayalalithaa Jayaram

0 comments:

Post a Comment

Kindly post a comment.