Sunday, August 12, 2012

இந்தியாவின் சாதனைப் புத்தகத்தில், இடம் பெற்ற, சூரிய சக்தியில் இயங்கும் சைகிள் ரிக்‌ஷா !



First Published : 
12 Aug 2012 02:08:19 AM IST

சென்னை, ஆக. 11: திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக்கிய சூரிய சக்தி மற்றும் பேட்டரியில் இயங்கும் சைக்கிள் ரிக்ஷா, இந்திய சாதனைப் புத்தகத்தில் (இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்) இடம் பிடித்துள்ளது.


 சிவராஜ் முத்துராமன் என்பவரின் கண்டுபிடிப்பான இந்த சைக்கிள் ரிக்ஷா, சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 
இந்த வாகனம் குறித்து சிவராஜ் முத்துராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


 சூரிய சக்தி, பேட்டரியால் இயங்கும் இந்த சைக்கிள் ரிக்ஷா சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாகனமாகும் (ஈகோ ஃப்ரீ கேப்). மிதிவண்டியாகவும் இதை உபயோகப்படுத்தலாம். மணிக்கு அதிகபட்சமாக 45 கிலோ மீட்டர் வரை இயங்கும் இந்த வாகனத்தின் உற்பத்தி செலவு ரூ.50 ஆயிரமாகும். இந்த சைக்கிள் ரிக்ஷாவை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 150 கிலோ மீட்டர் வரை இயக்கலாம்.


 இலவசமாகப் பயணிக்கலாம்: மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், பள்ளிக் குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க சுமார் 50 வாகனங்கள் சென்னை நகர்ப்புறங்களில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 8 மாதங்களில் இலவசப் பயண வாகனங்கள் இயக்கப்படும்.


 இந்தச் சந்திப்பின் போது பில்ரோத் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மனோஜ் பினோ, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ûஸச் சேர்ந்த விவேக் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
சூரிய சக்தியில் இயங்கும் சைக்கிள் ரிக்ஷா: இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது நன்றி தினமணி 12-08-2012

1 comments:

  1. நல்ல செய்தி. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மக்களின் பயன்பாட்டிற்குத் தேவையான ஒன்று.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    ReplyDelete

Kindly post a comment.