Tuesday, August 14, 2012

A I E E E தேர்வு முறையில் தேர்வாணையம் தேர்வுகளை நடத்திட வேண்டும் !

பல செய்தித் தாள்களிலும், சில தொலைக்காட்சிகளிலும், டி.என்.பி.எஸ்.சி.

குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியானதாகத் தகவல்கள் வெளியாயின.

அதிலும் குறிப்பாக டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்கள் செயல்படும்

இடங்களிலேயே இவ்வாறு வெளியானதாக அறியப்படுகின்றது.


சென்ற ஆண்டு இதே போன்று தேர்வாணைய ஊழல்கள்

வெளியானபோது  தமிழகம் முழுவதும் 73 CANDATIES  இல்லங்களிலும்

Directorate of Vigilance and Anti-Corruption officials  மூலம்  அதிரடிச்

சோதனைகள்  நடைபெற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும்

சந்தேகத்திற்குள்ளான தேர்வாணையக் குழு உறுப்பினர்கள் வீடுகளிலும்,

இடைத்தரகர் வீடுகளிலும் சோதனைகள் தொடர்ந்திருக்கின்றன.


இத்தகைய சீர்கேடுகளைத் தடுத்திட  நம்பிக்கையான சிறப்புக் குழுக்கள்

உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அடுத்த தேர்வு அறிவிக்குமுன்பாக

இவை அனைத்தும் செய்து முடித்திடல் வேண்டும்.


 சிறிது  கால அவகாசம் எடுத்துக் கொண்டால் கூடக் காத்திருக்க இளைஞர்கள்

தயாராய் இருக்கின்றார்கள்.


 அதற்கிடையே அடுத்த தேர்வு முழுமையான பாதுகாப்புமிகு

சிறப்பம்சங்களுடன்  நடக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்ட

வேண்டும்.


அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில்  நடந்த தேர்வுகளில் அதிகப் பேர்

தேர்வுபெற்ற இடங்களைக் குறி வைக்க வேண்டும். அங்குள்ள பயிற்சி

மையங்கள் அல்லது இடைத் தரகர்களைக் கண்டறிய வேண்டும்.

நமது காவல் துறைக்கு இது  சிரமமான காரியம் அல்ல.

தேர்வாணையக் குழு உறுப்பினர்களின் உரிமைகளும் மட்டுப்படுத்தல்

வேண்டும்.

 நவீன காலத்தில் கணினி இருக்கும் பொழுது வேறென்ன வேண்டும் ?


அல்லது கணினி மூலமாகவே பதிலளிக்கும் வாய்ப்பினை

உருவாக்கவேண்டும். AIEE    தேர்வு  லட்சக்கணக்கான  

மாணாக்கர்களிடையே  தேவையான எண்ணிக்கையுடையோரை த் 

தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுகின்றது.  ஒரு மாத காலம்  எடுத்துக் 

கொள்கின்றனர். காலை அல்லது மாலையைத் தேர்ந்தெடுக்கும் 

வசதியும், தேர்வெழுதும் நாளைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் தேர்வு 

எழுதுவோருக்குத் தரப்படுகின்றது. ஆனால் தேர்வு மையத்தை தேர்வு 

நடத்துவோரே தீர்மானிப்பர். வினாக்கள் ஆளாளுக்கு வேறுபடும்.

ஆனால், DIFFICULTY LEVEL  என்பது சரிசமமாகவே இருக்கும்  அதாவது 

எளிய வினாக்கள், சற்றுக் கடினமானவை, மேலும் சிறிது கடினமானவை

என்பது சரிசமமாக இருக்கும்..தேர்வினைக் கணினி மூலம் எழுதி 

முடித்தவுடன் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் வசதியையும்

ஏற்படுத்திட முடியும். RANK ( வரிசைக் கிரமப் பட்டியலைப் பின்னர்

தயார் செய்து கொள்ளலாம். )  தேர்வு அறைக்குள் மாணாக்கர்கள் சென்று 

அமர்ந்து பத்து நிமிடங்களுக்குப் பின்னரே வினாக்கள் கணிப்பொறியில்

மின்னூட்டம் செய்தல் வேண்டும்.


மேற்படி முறையைக் கையாண்டால் எந்த விதத்திலும் வினாத்தாள்கள்

முன்னதாக வெளியாக வழியே இல்லை. இன்னும் கடுமையாக்கிட 

தேர்வினைச் சென்னையிலேயே நடத்தலாம். தேர்வு எழுதி முடித்து

அறையைவிட்டு வெளியேறும் வெளியூரச் சார்ந்தோருக்கு ஊருக்குச்

சென்ற்வர ஆகும் கட்டணத்தில் பாதியை ( ஒரு வழித்தடச் செலவை ) 

அரசே கொடுக்கவும் செய்யலாம்.

தாய் மொழி தமிழ்  போன்ற பிரச்சினைகள் எழுப்பப்பட்டால் , இருக்கவே

இருக்கின்றது  PHONETIC METHOD முறை. இக்கோரிக்கையை

அனுப்பும்  தட்டெழுத்துப் பயிற்சி கூட இல்லாத 63 வயது முதியவன் அழகி 

மென்பொருள் மூலம் அரை மணி நேரத்தில் தமிழில் தட்டச்சு செய்யப்

பழகிக் கொண்டவன்..

தகுதியும், திறமையும் கொண்ட  இளைஞர்கள் தமிழகத்தில் நிறையப்பேர்

இருக்கின்றனர். 6.40 பேர் விண்ணப்பித்ததில், 4 லட்சம் பேருக்குத்தான்

தேர்வு எழுதும் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. 


114 மையங்களில் அமைதியோடும், தகுந்த தயாரிப்போடும், இந்தமுறை 

நிச்சயமாக வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடும் தேர்வு 

எழுதிவிட்டு மகிழ்ச்சியோடு வெளியே வந்த வினாத்தாள் வெளியானது 

போன்ற  அதிர்ச்சித் தகவல்களால்  வேலை  தேடும் வாய்ப்புக்களில் 

ஒன்றைத் தவறவிட்டுவிட்ட ஏமாற்றம் எந்த ஒரு இளைஞனுக்கும்  இனி 

தமிழகத்தில்  ஒருபோதும் ஏற்படவே கூடாது.


”அது இருந்தா இது இல்லே; இது இருந்தா அது இல்லே;

அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா, அவனுக்கு இங்கே இடம் இல்லே :”

இது நல்லதீர்ப்பு என்னும் படத்தில் ஜெமினி பாடும் பாடல்.

அதே போன்று வேலைக்கு ஆட்கள் தேவையும் படுகின்றனர்.

தகுதியும் திறமையும் நிறைந்த இளைஞர்களும் இருக்கின்றனர்.

தேர்வு நடக்கும்பொழுது சில கருப்பு ஆடுகளால் குழப்பம் விளைந்து 

விடுகின்றது.

 விண்ணப்பித்த 6.40 லட்சம் பேரையுமே  நேரடியாக மீண்டும் தேர்வு எழுத

வைப்பதே சரியான செயலாகவும் இருக்கும்.



நீதி காத்திடப் போராடும் குணமும், நேர்மையான குணநலன்களும் 

கொண்ட தேர்வாணையக் குழுத் தலைவர், ஆர்.நடராஜ் அவர்களிடம் 

மக்கள் நிறையவே நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.





0 comments:

Post a Comment

Kindly post a comment.