Tuesday, August 14, 2012

இந்திய அரசின் .700 கோடி மதிப்புள்ள வேலைத் திட்டத்தைக் கைப்பற்றியது இன்போசிஸ் !


நாடு முழுவதும் உள்ள 1,50,000 தபால் நிலையங்களில், இந்திய தபால் துறையின் வங்கி மற்றும் காப்பீட்டு தீர்வுகளை ஏற்படுத்துதல், ஏ.டி.எம். மையங்களை அமைத்தல் ஆகிய பணிகளுக்கான சுமார் ரூ.700 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இன்போசிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்திய தபால் துறையின் சார்பில் நாடு முழுவதும் தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் நவீன உலகில் தொலைத் தொடர்பு சாதனங்களின் வருகையில், தபால் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் நிதி பரிமாற்றம், காப்பீடு ஆகிய பணிகளில், இந்திய தபால் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு வசதியாக நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களை நவீனப்படுத்த, இந்திய தபால் துறை தீர்மானித்துள்ளது. இதற்காக சுமார் ரூ.700 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ளது.
இந்திய தபால் துறையை நவீனப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள 1,50,000 தபால் நிலையங்களில், கூட்டு வங்கி மற்றும் காப்பீட்டு தீர்வுகளை ஏற்படுத்தும் பணிகளில் இன்போசிஸ் நிறுவனம் ஈடுபட உள்ளது. மேலும் இந்திய தபால் துறையின் சார்பாக நாடு முழுவதும் ஆயிரம் ஏ.டி.எம். சென்டர்களை, இன்போசிஸ் நிறுவனம் நிறுவ உள்ளது. இதன்மூலம் நிதி பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் முழுவதும் மின்னணு மையமாக மாற்றப்படும்.
மேலும் இந்திய தபால் துறையின் வடிவமைப்பு, கட்டிடங்கள், பரிமாற்றம், சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் நிறுவுதல், பராமரித்தல், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளிலும் இன்போசிஸ் நிறுவனம் பங்கேற்கும். இதன் ஒரு பகுதியாக இந்திய தபால் துறையை சேர்ந்த 35 ஆயிரம் பணியாளர்களுக்கு, இன்போசிஸ் நிறுவனம் சார்பாக பயிற்சி அளிக்கப்படும்.
இது குறித்து இந்திய தபால் துறையின் நிதி சேவை துணை இயக்குனர் ஏ.எஸ்.பிரசாத் 
கூறியதாவது,
இந்திய தபால் துறையை நவீனப்படுத்தினால், சிறந்த நிதி நிறுவனமாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம். மேலும் நவீன தொழிற்நுட்பத்தின் மூலம் இந்திய தபால் துறை பணியாளர்களுக்கு விரிவாக்கவும், சிறப்பாகவும் மக்கள் சேவையில் ஈடுபட முடியும் என்றார்.
நன்றி:-

0 comments:

Post a Comment

Kindly post a comment.