Friday, July 27, 2012

ஒலிம்பிக்கில் இசைக்கப் போகும் செட்டி நாடு வித்யாஷ்ரம் மாணாக்கர்கள்!



அஜய், விக்ரம், சாரதி, பாலசுப்பிரமணியம், ஸ்ருதி சாகர் என்று நான்கு


நண்பர்கள். சென்னை  செட்டிநாடு  வித்யாஷ்ரம் பள்ளியில்.பத்தாம் 


வகுப்பு  படித்துக்கொண்டிருந்தனர். நண்பர்களுக்கு உதிதத எண்ணத்தில் 


உதயமானது , 2005 ஆம் ஆண்டில் SUSTAIN FORT  என்ற இன்னிசைக் குழு.!




 காலப்போக்கில் பெற்ற வளர்ச்சியில் மேலும் சில திறமை உடைய


 நண்பர்களும் இணைந்து கொண்டனர்.  STACCATO   என்று பெயரையும் 


மாற்றிக் கொண்டனர். இந்தியாவில் இந்தப் பெயரில் வேறு இன்னிசைக்


குழுக்கள் எவையும் இல்லை.




காற்றின் ஒலி ( SOUND OF AIR ),  மற்றும் சால்சா (SALSA) என்று இரு இசை


வடிவங்கள் உருவாக்கியது இந்தக் குழு. ஏன்? எதற்காக?


ஒலிம்பிக்கில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பினைத் தவறாமல் 


பயன்படுத்திக் கொள்ள எடுத்த முயற்சியின் விளைவுதான், இது.!




சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். ஆசியாவிலிருந்து


இரண்டு குழுக்களே தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒன்று சீனா. இன்னொன்று


சென்னையைச் சார்ந்த் இவர்களைக் கொண்ட, STACCATO குழுவினர்.


மின்னஞ்சல்கள் மூலம்  ஒலிம்பிக்கில்  பங்கெற்கும் வாய்ப்பு உறுதியான


பின்னர் கூட இவர்களால் நம்ப முடியவில்லை.




தற்பொழுது கடுமையான  பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சும்மாவா? 


2,50, 000  பேர் முன்னிலையில்,  ஒலிம்பிக் மேடையில் நமது  இந்தியத் 


தமிழ்நாட்டில் வாழும்  இளைஞர்கள் இன்னிசை கீதம் 


இசைக்கப்போகின்றனர். 






இந்தக் குழுவில் இருப்போரில்   அனைவருமே இசைக் குடும்பப் 


பின்னணியைச் சேர்ந்தவர்கள். உதாரணம்:-  ஏ.ஆர். ரஹ்மானின் 


உறவினர் காஷிஃப் ரஃபிக், இந்தக் குழுவினில் ஒருவர். 


தன்னம்பிக்கையோடு முன்முயற்சி எடுத்தவர் இவர்தான்!





சென்னை செட்டி நாடு 


வித்யாஷ்ரம் 


நிர்வாகத்திற்கு 


இன்னொரு கிரீடம்!



பங்கேற்போர் :-




 ஸ்ருதி சாகர், விக்ரம் சாரதி, 


பி.டி.பாலசுப்பிர மணியன், அஜய் ஞானசேகரன், 


தபாஸ் நரேஷ், காஷிப் ரஃபிக், 


ரோஹித் கிருஷ்ணமூர்த்தி, 


வந்தனா ஸ்ரீனிவாசன்,  ஐஸ்வர்யா,


 மனோஜ் குமார்,  ஷல்லு வருண், 


சதிஸ் நாரயண்,  நிகில், கவுதம்  பரத்வாஜ், 


வருண் கோவிந்த், அருண் ஹரிதாஸ்.




இந்தத் தகவலைத் தந்தவர்கள், பி.வைத்தீஸ்வரன், புதிய தலைமுறை.!


 ஏனோ அவர்கள்  செட்டிநாடு வித்யாஷ்ரம் என்பதற்குப் பதிலாக


செட்டிநாடு தர்ஷன் என்று குறிப்பிட்டு விட்டனர். 




 ஒலிம்பிக்கில் நடனமாட 50க்கும் மேற்பட்ட  


தமிழகத்தின்  பல்வேறு பள்ளி- கல்லூரிகளைச் 


சேர்ந்த மாணாக்கர்களும் செல்கின்றனர்


என்பது  ஓர் தொலைக் காட்சி தரும்  செய்தி.
















.


0 comments:

Post a Comment

Kindly post a comment.