Sunday, July 22, 2012

ஆவுடையார் கோவில் சிற்பம் பற்றி காளைராஜன் எழுப்பிய வினா?-பழ.கோமதிநாயகம் , வை.கோ- தா.பாண்டியன் ?

நந்தன வருடம் ஆனி 17ஆம் நாள் (01/07/2012) ஞாயிற்றுக் கிழமை ஆவுடையார் கோயில் 

வழிபாட்டிற்குச் சென்றபோது, முதலில் ஆதிகைலாசநாதர் கோயிலுக்குச் சென்று 

வழிபட்டோம்.

அங்குள்ள தூண் ஒன்றில் இந்தச் சிற்பம் உள்ளது. இந்தச் சிற்பம் எதைக் குறிக்கிறது?


வினா எழுப்புவர் நமது நண்பர் காளைராஜன் ? 


Kalairajan Krishnan's profile photo
kalairajan26@gmail.com
university

நண்பர் களைராஜன் எழுத்துக்களைப் பார்க்காத நாள் இருக்கமுடியாது, மின் அன்பர்களுக்கு.!


அவரது கேள்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திட, பழ.கோமதிநாயகம், வை.கோ, தா.பா,


ஆகியோரிடம் அழைத்துச் செல்கின்றேன்.


தேவநேயப்பாவாணர் நூலகத்தில் ஒரு கூட்டம். தமிழக  நீர் மேலாண்மை நிபுணர் பழ. கோமதிநாயகம்
இரண்டாவது ஆண்டு நினைவு நாள். அவரது நினைவாக ஒரு ல்ட்சம் பரிசு ஒரு தொண்டு 
நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது.  தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவருக்கும்
அனைத்துவகையான ஆறுகள் - மற்றும் மணல் கொள்ளை குறித்த தகவல்களையும் கொடுத்த தமிழக
அரசு உயர் அதிகாரி. இலம்க்கைக்குச் சென்று மாவீரன் பிரபாகரனுக்கு நீர் மேலாண்மையைக் கற்றுக்
கொடுத்துவிட்டு வந்தவர். தமிழக நீர் மேலாண்மைப் பொறுப்பினை விட்டு வ்ட்டு, மணல் 
மே;லாண்மைக்குரிய   அதிகாரப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வற்புறுத்தியபோது
பதவியைத் துச்சமெனத் துக்கி எறிந்து விட்டு விலகியவர். இவ்வளவு செய்திகளும் அவர் 
மரணத்திற்குப்பின்தான் அவரது குடும்பத்திற்கே தெரியும்.
அவரது முதலாண்டு நினைவு விழாக் கூட்டத்தின்போதுதான் இத்தகைய மாமனிதன் தமிழகத்தில்
வாழ்ந்து மறைந்தது  என்போன்ற பலருக்குத் தெரிவந்தது, ஊடகங்களின் வெளிவந்த காரணத்தால்.!
அவருக்குத் தம்பிபோல் பழகிவந்த பத்திரிக்கையாளர் பாண்டியராஜன் முயற்சியால் 
பழ.கோமதிநாயத்தின்  தொகுப்புகள் பாவை அச்சகத்தின் மூலமாக நூல்களாக வெளி வந்திருக்கின்றன.
அதில் அவர் பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மைத் திறத்தினை எடுத்துரைக்கும் பாங்கினை
எழுதி மாளாது. ( மின் மடல் அன்பர்களின் நடையில் ).
முதல் ஆண்டு நினவு விழாவில் சொன்னபடி, இரண்டாவது ஆண்டு நினைவு விழாவில் நடந்தது.
அந்த விழாவில், வை.கோ., தா.பாண்டியன், பழ. நெடுமாறன் கலந்து கொண்டனர்.அந்தக் கூட்டத்தில்தான்  வை.கோ.வின் தமிழறிவை, சொற்பெருக்காற்றலைத் தெரிந்து கொண்டேன், 
60 வயதுக்கு மேற்ப்ப்ட்ட  நான்.!   இப்பொழுதுதான் காளைராஜன் நிகழ்வுக்குள் வருகின்றார்.


 தா.பாண்டியன், கூறியது.  பழ.கோமதிநாயகம் பழந்தமிழ் நூல்களில் உள்ள நீர் மேலாண்மையை 
உதாரணங்களுடன் தொகுத்தளித்தமையை எடுத்துரைத்துவிட்டு, ஆவுடையார் கோவில் 
போன்ற தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் உள்ள ஓவியங்களையும், கலை 


வண்ணங்களையும், சென்று பார்த்து மகிழாவிட்டால் அவன் தமிழனே அல்ல என்றும் 


முழங்கினார்.
அதனை நன்கு எடுத்துரைக்கின்றது, சிவ.காளைராஜனின் படத்தச் சுட்டிக் காட்டிக் கேட்ட 


கேள்வி?
இதில் மேலும் ஒரு சிறப்புச் செய்தி பழ.கோமதிநாயகம். பழ.நெடுமாறனின் உடன்பிறந்த தம்பி
இலக்கிய ஜாம்பவான்களான, 


பழ.கோமதிநாயகம், 


வை.கோ.


 தா.பாண்டியன்  


செந்தமிழை எளிமைப்படுத்துகின்றேன் 


என்று சிறுமைப் படுத்தாமல் இருக்கும்


மாண்பிற்குத் தலை வணங்குவோம்.


இருக்கும் தலை சிறந்த தமிழ் நூல்களுக்கு உரை எழுதலாம். திருக்குறளுக்குப் பலர் உரை


எழுதி உள்ளது போன்று! ஆனால் ..........?


பத்திரிக்கையாளர் பாண்டியராஜன் அவர்களே !. பழ.கோமதிநாயகத்தை முழுமையாக


வெளிப்படுத்துன்க்கள், விரைவாக! 


ஈரோடு அருட்சுடர் பதிப்பகம் வெளியிட்ட “ஊர்ப் பழைமை “ என்ற நூலைப்பற்றிப் பெரியவர்


நல்லகண்ணு ஐயா அமெரிக்கா சென்றபின்தான் எங்களுக்குத் தெரிகின்றது.


உங்கள் தின, மாத இதழ்களில் ஒரு மூலையில் இத்தகைய


செய்திகளைத் தெரியப்படுத்தலாமே?0 comments:

Post a Comment

Kindly post a comment.