Monday, July 16, 2012

முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைத்தளம்


This page adapted for your browser comes from www.oldagesolutions.org and is not endorsed by Google.
Zoom out
முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
(அறிவியல் தொழில்நுட்ப
அமைச்சகத்தின் (இந்திய அரசு) முன்முயற்சி. அனைத்திந்திய
கழகத்தின் மூலம் வழங்கப்படும் சேவை))


Home
முகப்பு

எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது

பொழுதுபோக்கு& கேளிக்கை ஆரோக்கியம் முதியோருக்கான உதவி சாதனங்கள்
வடிவமைப்பு & சுற்றுச் சூழல் வசதிகள்

உடல் நலம் 

உடல் நலம் மற்றும் உடல்
திறன்

ஆரோக்கியமான உணவு 

ஆரோக்கியமான எலும்புகள் 

நல்ல உறக்கம் 

உங்கள் பற்குழி பாராமரிப்பு 

முதிய வயதில் தெளிவான
பார்வை 

நோய்எதிர்ப்பு சக்தி 

நல்ல கேட்கும் திறன் 

மருந்துகளை நிர்வகித்தல் 

பாத பராமரிப்பு 

தவறி விழுதல் & விபத்து 

மலசிக்கல் 

சிறுநீரை அடக்க 
இயலாமை 

உயர் ரத்த அழுத்தம் 

இதய நோய் 

சர்க்கரை நோய் 

பிராஸ்டேட் பிரச்னைகள் 

கீல்வாதம் மற்றும் 

வலி நிவாரணிகள் 

வாதம் மற்றும் 

இடம்பெயர்தல் 

ஸ்டிரோக் 

கேன்சர் 

மன நலன் 

ஊட்டச்சத்து முகப்பு ஆரோக்கியம் உடல் நலம் மூட்டு வலி மற்றும் நடமாட்டம்  English Email    Print

மூட்டு வலி மற்றும் நடமாட்டம் 

எலும்பு மூட்டுகளில் ஏற்படும் பிரச்னை பல வயதானவர்களைப் பாதிக்கிறது. மூட்டுகளிலும் தசைகளிலும் ஏற்படும் வலியும் விரைப்பும் உங்கள் நடமாட்டத்தையே முடக்கக்கூடும். இதிலிருந்து விடுபடுவதர்கு உங்கள் மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைக்கக்கூடும். ஒரு பிஸியோதெரபிஸ்ட்டிடம் சென்றால், அவர் சில சிறப்பு உடற் பயிற்சிகளை உங்களுக்குச் சொல்லிக்கொடுப்பார். நீங்கள் நடமாட உதவும் கருவிகளைப் பெறவும் உங்கள் மூட்டுகளைப் பாதுகாக்கவும் ஒரு ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்டிடம் செல்லலாம். இம்மாதிரியான உதவிகளைப் பெற நல்ல பிஸியோதெரபிஸ்டையோ, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்டையோ உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பவராக இருக்க வேண்டும்.

நடக்க உதவும் கருவிகள்

உங்களுக்கு நடமாடுவதில் பிரச்னை இருந்தால், உங்களுக்கு உதவ பல்வேறு விதமான நடமாட்டத்திற்கு உதவும் கருவிகள் இருக்கின்றன. அதில் சரியான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டால், உங்களது சுதந்திரத்தை நீங்கள் கிட்டத்தட்ட திரும்பப் பெற்றுவிடலாம். இதில் மிக எளிய உதவும் கருவி கைத்தடிதான். உங்கள் கால்களுக்கு கூடுதல் உதவி தேவையென்றால், நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். உங்கள் இரண்டு கால்களுக்கும் ஆதரவு தேவையென்றால், இரண்டு கைத் தடிகளையோ, அல்லது வாக்கிங் ஃபிரேமையோ பயன்படுத்தலாம். நடப்பதே சிரமமாக இருந்தால், உங்களுக்கு சக்கர நாற்காலி தேவைப்படலாம்.

உங்கள் கைத்தடி சரியான உயரத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் புஜத்தை சேர்த்து வைத்தால், கைத்தடி உங்கள் மணிக்கட்டு வரை இருக்க வேண்டும். இரண்டு கைத்தடிகளைப் பயன்படுத்துவீர்கள் என்றால், அவை சற்று உயரமாக இருக்க வேண்டும். காரணம், அவற்றை நீங்கள் உங்களுக்கு முன்பாக நீட்டிச் செல்வீர்கள் என்பதுதான். கைத்தடியின் அடிப்பக்கத்தில் ரப்பர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான், அது வழுக்காது. அவை சீக்கிரம் தேய்ந்துவிடும் என்பதால், அவற்றை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். வாக்கிங் ஃபிரேம்களைப் பயன்படுத்தினால் அவை கூடுதல் ஆதரவைக் கொடுக்கும். அதனால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சக்கரம் பொருத்தப்பட்ட வாக்கிங் ஃபிரேம்களையே ரோலேட்டர்கள் என்கிறோம். அவை நகர்த்திச் செல்ல எளிதாக இருக்கும். குறைவான தடுமாற்றம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவும்.

கீல்வாதம் மற்றும் வலி நிவாரணிகள் 

கீல்வாதம் அல்லது அழற்சி என்பது முதிய வயதில் மூட்டு இணைப்புகளில் வரும் பொதுவான பிரச்சினை மற்றும் முதிய வயதில் வரும் பொதுவான மூன்று பிரச்னைகளில் இதுவும் ஒன்று.

பல்வேறு வகை கீல்வாதங்கள் உள்ளன. அதில் முதுமை மூட்டழற்சி பொதுவானதாகும்.மூட்டழற்சி வயது காரணமாக தேய்வு நோய்தான் மற்றபடி உணர்ச்சியை அதிகப்படுத்தும் நிலை ஏற்படாது.கைகள், பின்புறம், கழுத்து உள்ளிட்ட உடலைத் தாங்கும் மேல் அவயத்தில் எடை தாங்கும் மூட்டுகளின் நிலை பாதிக்கப்படும். அப்போது வலி வரும்போகும். வலி குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.

பெரும்பாலான கீல்வாதங்கள் பெரும்பாலும் முன்கூட்டியே தடுக்க முடியாது அல்லது குணப்படுத்தவோ முடியாது. கீல்வாதத்துக்கான சிகிச்சையின் நோக்கம் வலியிலிருந்து விடுபடுதல் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் இருந்து நிவாரணம் பெறுதல்.

ஓய்வெடுத்தல், எடை குறைத்தல், உடற்பயிற்சி மற்றும் வலி நிவாரணி சிகிச்சைகள் ஆகியவைதான் கீல்வாதத்துக்கான சிகிச்சை முறைகளாகும்.

முதியவர்கள் உட்கொள்ளும் மருந்துகளில் பெரும்பாலானவை கீல்வாதத்துக்கான மருந்துகள். வலி நிவாரணிகளில் ஸ்டீராய்ட் இல்லாத, வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகள் (NSAID) பரிந்துரைகப்படுகின்றன.

இந்த மருந்துகள் உடலில் வலி, விரைப்புத்தன்மை, வீக்கம் உண்டாக்கும் வேதிப்பொருள் உற்பத்தியைத் தடுக்கின்றன. இந்த மருந்துகள் முழுமையாக வேலை செய்யத் தொடங்க 2 அல்லது 3 வாரம் வரை ஆகலாம். .

அதிகம் பயன்படுத்தப்படும் NSAID மருந்துகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வலி நிவாரணம் தரும் இந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஒரே விதமான பக்க விளைவுகளையும் கொண்டிருக்கின்றன.

மருந்தின் வேதியியல் வகை 
வர்த்தகப் பெயர் 

ஆஸ்பிரின் டிஸ்பிரின்

நிமிசுயூலிட் நிமிலுய்டு, நிசி

மெலோசிகாம் மெல்பிளாம், மெகேம்

இபுபுரோஃபென் புருஃபென்

டிக்லோஃபெனாக் ஓவிரான்

புரோக்சிகாம் பிரோக்ஸ்

பாரசெடமால் க்ரோசின், கால்பால்

செலகோசிப் செலாக்ட், ரெவிபிரா

NSAIDவின் பக்க விளைவுகள் 

NSAID மருந்துகள் வலி நிவாரணம் தருவதுடன் தேவையில்லாத பக்க விளைவுகளையும் சிலருக்கு ஏற்படுத்திவிடக்கூடும். வயிற்று அல்சர், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, குமட்டுதல், வாந்தி, பேதி, இரையகக் குடலில் ரத்தம் வெளிப்படுதல், ரத்த வாந்தி, அல்லது கரிய நிறத்தில் மலம் கழித்தல், ஆகியவற்றுடன் தலைவலி, மயக்க உணர்வு, தெளிவற்ற பார்வையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும். இந்த விளைவுகளைக் குறைக்க சில சிகிச்சைகள் தேவைப்படலாம்.

எதிர் மறை விளைவுகளைக் குறைக்க, இந்த வலிநிவாரணிகளை சாப்பாட்டுக்குப் பின்னர் எடுத்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக, அல்சரை தடுக்கும் ஓமேபிராசோல் (வர்த்தகப் பெயர்: ஓமேஸ், ஓசிட், புரோடாலோக்) எடுத்துக்கொண்டால் வயிற்று அல்சரைத் தடுக்கும்.

புகைபிடிப்பவர்கள் மற்றும் மது குடிப்பவர்கள் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளும்போது வயிற்றுப் பிரச்னைகளை இம்மாத்திரைகள் தூண்டக்கூடும்.

கார்டிகாஸ்டீராய்டு 

சிலவகை கீல்வாதங்களில் வீக்கத்தை குறைக்கும். மாத்திரையாகவோ அல்லது மூட்டு வீக்க இணைப்பிலோ ஊசி குத்திக்கொள்ளும்போது கார்டிகாஸ்டிராய்டு வலியைக் குறைக்கிறது. வீக்கம் மற்றும் வலி தற்காலிகமாக குறையும். .

அதே நேரத்தில் கார்டிகாஸ்டிராய்டு, நோய் எதிர்ப்புத் திறனைக் குறைப்பது உள்ளிட்ட சில பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். ஜீரணக்கோளாறு, எடை அதிகரித்தல். தசைகளின் சக்தி குறைதல், மனநிலையில் மாற்றம், கண் எரிச்சல், காட்டிராக்ட், சர்க்கரை நோய், எலும்பு முறிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும்.

கார்டிகாஸ்டிராய்டு மிகவும் நல்ல மருந்து ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிரூபிக்கப்படாத நிவாரணம்

கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்ட சிலர் மாற்று முறை மருத்துவத்தை தேடுகின்றனர். பல மாத்திரைகள், பத்திய முறைகளைப் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் கீல்வாதம் வரும் போகும். உண்மையிலேயே இந்த வைத்திய முறைகள் பலன் அளிப்பதாக சிலர் நம்புகின்றனர். எனவே கீல்வாதத்தை சரி செய்யும் என்று கூறும் மாத்திரைகள் மற்றும் முறைகள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலான கீல்வாதங்கள் குணப்படுத்த முடியாதவை.

^  மீண்டும் மேலே   ^

முகப்பு கட்டுரைகள் கோரல் எங்களைப் பற்றி | றெஸொஉர்கெ ளின்க் | வள நபர் தொடர்பு கொள்க | பொறுப்பாகாமை Sஉக்கெஸ்டிஒன்ஸ் | Sஇடெமப் 

Powered By PECS. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.

0 comments:

Post a Comment

Kindly post a comment.