Friday, July 6, 2012

விவேகானந்தரும் ஐந்தருவிச் சாமியாரும் !-தினமணி



நன்றிக்குரியோர் :தினமணி வெள்ளிமணி 06-07-2012
பகவான் எங்கும் இருக்கிறான் என்றாலும் சில இடங்களில் தன்னை விசேஷமாகத் தோற்றுவிக்கிறான். உதாரணமாக, பூமியில் தோண்டினால் எங்கே வேண்டுமானாலும் தண்ணீர் அகப்படும். ஆனால், குளம், கிணறு, ஏரி இவை இருக்கின்ற இடங்களில் தோண்ட வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?

ஆன்மா அழிவில்லாதது, எல்லையற்றது.,

எல்லையற்றது. எல்லாம் வல்லது என்று

நம்புங்கள். குருகுல வாசம், அதாவது

ஆசிரியருடன் வாழ்ந்து கற்பதே கல்வி

பற்றிய என் கருத்து:
                                                                                                   
                                                                                                              சுவாமி. விவேகானந்தர்
ஆண்டவன் வைத்த அன்பு!

First Published : 06 Jul 2012 12:00:00 AM IST

1904ஆம் ஆண்டு, ஜூலை மாதம், நான்காம் தேதி, வெள்ளிக் கிழமை. அன்று வழக்கத்தை விட முன்னதாகவே உறக்கத்திலிருந்து எழுந்தார் சுவாமி விவேகானந்தர். தேநீர் அருந்திவிட்டு பூஜையறைக்குச் சென்றார். காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வது சுவாமிஜியின் வழக்கம்.


ஆனால் அன்று ஏனோ அந்த அறையின் கதவுகளை எல்லாம் அடைக்கச் சொல்லி தியானத்தில் ஆழ்ந்தார். வழக்கத்தை விட நீண்ட நேரம் தியானம் செய்தவர் பூஜை அறை படிகளில் இறங்கி வந்தார். அப்போது அவரையும் அறியாமல் அம்பிகை குறித்து அற்புதமான பாடலைப் பாடினார்.


சிறுவனாக இருந்தபோது ஐந்தறிவு விலங்குகளோடு விளையாடியவர் அல்லவா விவேகானந்தர்! அன்றைய தினம் அவரது மனம் குழந்தைப் பருவத்திற்கே மீண்டும் திரும்பியது. மடத்தில் இருந்த வாயில்லாத ஜீவன்களிடம் அவருக்கு அன்பு அதிகரித்தது. "மாத்ரு' என்று பெயரிட்டு ஓர் ஆட்டுக்குட்டியை வளர்த்து வந்தார் சுவாமிஜி. சுவாமியின் அறைக்குள் அந்த ஆட்டுக்குட்டிக்கு சர்வ சுதந்திரமும் இருந்தது.


ஆனால் மாத்ரு, அன்றைய தினம் சுவாமிஜியின் கண்முன்னே உயிர் துறந்தது. இதனால் மிகுந்த துயரமடைந்த சுவாமி விவேகானந்தர் ""நான் அன்பு செலுத்துபவர்கள் அல்பாயுளில் போய்விடுகிறார்கள்' என்று தமது சீடர்களிடம் வருத்தத்தோடு கூறினார்.


ஆண்டவன் யாரிடம் அதிக பாசம் கொண்டுள்ளானோ அவர் குறைந்த வயதில் மறைந்துவிடுவார் என்றொரு பழமொழி உண்டு. சுவாமி விவேகானந்தரும் அன்றைய தினம் அதை நிரூபித்தார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.