Sunday, June 10, 2012

"பெண்களுக்காகவே விலையில்லா பொருள்கள்'-இந்திரா காந்தி, எம்.எல்.ஏ !



First Published : 04 Jun 2012 10:59:14 AM IST


துறையூர், ஜூன் 3: வேலைக்குச் செல்லும் கிராமப்புற பெண்கள் வீட்டிலும் வேலை செய்து களைப்படையக் கூடாது என்று விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை வழங்குகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றார் சட்டப்பேரவை உறுப்பினர் த. இந்திரா காந்தி.  

துறையூர் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சியில் 856 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:  

அரசு ஏழை, எளியவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கிராமப்புற பெண்கள் வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில், வெள்ளாடு, கறவை மாடு வழங்குதல், மாணவர்களுக்கு மடிக்கணினி, விலையில்லா சைக்கிள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.  

தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும். இதற்காக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார் அவர்.  

விழாவில், வட்டாட்சியர் மு. காதர்மொய்தீன், துறையூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொன். காமராஜ், துணைத் தலைவர் பி. பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் விஜயா பொன்னர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக, ஊராட்சித் தலைவர் சரவணன் வரவேற்றார்.  

நன்றி: தினமணி திருச்சி பதிப்பு - 10-06-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.