Saturday, June 23, 2012

கோடு - மலை ஆகிய சொற்கள் குறித்த ஆய்வு கள்


திருவள்ளுவன் இலக்குவனார்
20 Jun (2 days ago)

to piravakam, thiru, tamil_ulagam, vallamai, Santhavasantham, thamizayam, bcc: tamizhsiragugal
முன்னோர் மொழிந்ததை அறியாமல் கூடி இருக்கும் இடம் கோடு என்றெல்லாம் எதை எதையோ எழுதக் கூடாது. பிறகு காடுதான் கோடு  ஆயிற்று என்பதுபோல் ஒவ்வொன்றாக எழுதத் தொடங்கி விடுவார்கள்.   

யாரேனும் ஐயம் கேட்டால்  நமக்கு விடை தெரிந்தால் தெரிவிக்கலாம். அல்லது  நூல்களைப் பார்த்துத் தெளிவு பெற்ற பின் தெரிவிக்கலாம். திரு நா.கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் கோடு என்றால் வளைவு என்றும் பொருள் உண்டு. வளைவான தோற்றமுள்ள இயற்கைப் பகுதி இதனால் கோடு என்று கூறப்பட்டது. 

எனினும் கோடு என்றால்,       வளைவு ; நடுநிலை நீங்குகை ; யானையின் தந்தம் ; விலங்குகளின் கொம்பு ; ஊதுகொம்பு ; நீர்வீசுங் கொம்பு ; மரக்கொம்பு ; யாழ்த்தண்டு ; 'கெ' , 'கே' முதலிவற்றின் தலைப்பிலுள்ள கொம்புக் குறியீடு ; பிறைமதி ; சங்கு ; குலை ; மயிர்முடி ; மலையுச்சி ; மலை ; மேட்டு நிலம் ; வரி ; ஆட்டம் முதலியவற்றிற்கு வகுத்த இடம் ; நீர்க்கரை ; குளம் ; காலவட்டம் ; வரம்பு ; ஆடைக்கரை ; முனை ; பக்கம் ; அரணிருக்கை ; கொடுமை ; நீதிமன்றம் எனப் பல பொருள்கள் உள்ளமையை அகராதிகள்  வழி அறியலாம்.  

அதே போல், மலை தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், மலையியல் என்பன போன்று குறிஞ்சியியல் என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும். சங்கச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையோ பிறமொழிச்சொற்களையோ நாம் காண இயலாது. சான்றாக எதிரொலிக்கும் மலையைச் சிலம்பு என்றனர். ஆனால், அத்தகைய வகைப்பாடு பிற மொழியாளரிடம் இல்லாததால், நாம் பொருள்விளக்கம்தான் அளிக்க இயலும்.  மலை தொடர்பான வகைப்பாடுகள் சில வருமாறு : -

அடுக்கம் (range) (72),
அடுக்கல் (series of mountain) (5),
அருப்பம் (young hill) (13), 
அரைமலை (middle of a mountain slope) (1),
அறை (huge rock) (78),
அறைவாய் (mountain pass) (1),
இகுப்பம் (large boulders, hillock) (1),
இறும்பு (foothill) (21),
ஏகல் (high hill) (3),
ஓங்கல் (mountain top) (13),
கடறு (mountain slopes) (9),
கது (mountain cleft)(8),
கல் (stone) (245),
கல்லளை (mountain cave) (3),
கவாஅன் (slopes) (32),
கன்முழை (mountain cavern)(1),
கிழிப்பு (mountain cleft) (1),
குடுமி (summit or peak of a mountain ) (26),
குவடு (hummock ) (1),
குன்று (hill) (180),
கோடு (summit of a hill )(167),
சாரல் (mountain slopes)(99),
சிகரம் (crest)(1),
சிமையம் (peak)(2),
சிலம்பு (mountain which has resound or echo) (128),
சென்னி (a mountain with a pointed summit) (44),
நவிரம் (top of the mount) (2),
பிளப்பு (mountain cleave),
பிறங்கல் (mound) (20),
பெருங்கல் (rock ) (28),
பொறை (small hill) (51),
மலை (mountain) (337),
முகடு (peak) (5),
முகை (mountain cave) (134),
வசி (mountain cleft) (8),
வரை (big mounain) (379),
விடர் (mountain crevice) (33),
விடரகம் (mountain caves) (29),
விடரளை (Cleft in a mountain cave) (1),
விண்டு (mountain which has slope sides) (8),
விலங்கல் (blocking mountain) (3)
வெற்பு (knoll) (20),
அடைப்பிலுள்ள எண் எத்தனை முறை  அச் சொல், சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிக்கின்றது. சங்க்காலத்திற்குப் பின்னர் மேலும் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே,
 நன்கு ஆராய்ந்து தெரிவிப்பது நமக்கும் நல்லது; தமிழுக்கும் நல்லது.


2012/6/20 N. Ganesan <naa.ganesan@gmail.com>


On Jun 19, 8:25 pm, Saravana Rajendran <rajesarav...@gmail.com> wrote:
> ஊர்களின் முடிவில் வரும் கோடு என்றால் என்ன? திருவிதாங்கோடு என்ற
> திருவீதிக்கூடு மருவி திருவிதாங்கோடு வந்தது எனவானது என்று பத்மநாதன்
> என்ற பெரியவர் கூறினார், தக்கலை ஜமால் ஐயா சந்திப்பு என்று இருக்கலாம்
> பழந்தமிழ் பாடல்களில்  கோடு பற்றி குறிப்புகள் உள்ளனவா?
>

கோடு:கொடு என்றால் வளைவு எனப்பொருள். இப்பொழுது இரும்புக்கால
நாகரிகம் கண்டெடுக்கப்படும் இடம் சங்க இலக்கியப் புகழ் பெற்ற கொடுமணல்
நொய்யல் வளைந்துசெல்லும் இடம். கொடுவாள் - வளைவாள்,
கொடுந்தமிழ் - மக்கள் பேச்சுமொழிக்காய் வளைதமிழ்.
சிறுகுன்றுகளோ, மலைகளோ உள்ள ஊர்கள் கோடு என முடியும்.

நாஞ்சில்நாட்டின் விளவங்கோட்டில் ஊர்த் தலைவர்களாக இருந்தவர்கள்
இப்போதைய திருவிதாங்கோட்டு மன்னர்கள். ஸ்ரீவாழும்கோடு என்றெல்லாம்
விளக்கம் 19-ஆம் நூற்றாண்டு நூல்களில் காணலாம்.

விளாத்திகுளம், விளவங்கோடு, விளாங்குறிச்சி.
விளவ மரங்கள் மிகுந்த மலைநாடு = விளாங்கோடு.

விளாங்கோடு (நாஞ்சில்) > விடாங்கோடு > விதாங்கோடு.
யாடவர் > யாதவர் (யாடு = ஆடு)
கடம்பு > கதம்ப (பூ)
யாடவர் > யாதவர், கடம்ப > கதம்ப,
திருவிளாங்கோடு/திருவிடாங்கோடு > திருவிதாங்கோடு.

நா. கணேசன்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com
ருத்ரா (இ.பரமசிவன்) epsivan@gmail.com
20 Jun (2 days ago)

to தமிழ்
தமிழ்ச்செல்வர் திருவள்ளுவர் இலக்குவனார் அவர்களே

சங்கச்சொற்கள் தமிழனுக்கு பழக்கம் ஆகவில்லை என்றால் இவையெல்லாம்
தமிழ் அல்ல ஹீப்ரு என்று சொன்னாலும் சொல்லிவிடுவான்."செந்தமிழும்
நாப்பழக்கம்"என்று இதைத்தான் தமிழ் மூதாட்டியும் சொல்லிச்சென்றார். எனவே
"கோடு" தொடங்கிய சொற்களில் கோர்வையாக இத்தனை சொற்களை
உரித்துக்காட்டிய உங்கள் தமிழ்த்தொண்டு தொடர வாழ்த்துகள்.

அன்புடன்
ருத்ரா

On Jun 20, 5:54 am, திருவள்ளுவன் இலக்குவனார் <thiru2...@gmail.com>
wrote:
> 2012/6/20 N. Ganesan <naa.gane...@gmail.com>
> *அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும்
> பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும்
> மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே
> பொறுத்தருள்க.
>
> *அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
> / தமிழே விழி! தமிழா விழி!
> எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
>
> பின்வரும் பதிவுகளைக் காண்க:
>
> *www.ilakkuvanar.org
> thiru2050.blogspot.com
> thiru-padaippugal.blogspot.comhttp://writeinthamizh.blogspot.com/http://literaturte.blogspot.com/http://semmozhichutar.com*- Hide quoted text -
>

0 comments:

Post a Comment

Kindly post a comment.