Saturday, June 23, 2012

பெரியபுராணத்தை ஆங்கிலப்படுத்திய திரு, ராபின் மக்கிலாசன் மறைவு


N. Kannan
20:54 (7 hours ago)

to மின்தமிழ்
மேலும் The Deserted Wife and The Dancing Girls Daughter (சிலப்பதிகாரமும் மணிமேகலையும்) இந்நூலையும் சட்ட அறிஞர் செ.சிறிக்கந்தராசாவுடன் இணைந்து உலகத்தமிழ்ர்க்கும் ஆங்கில மொழி அறியும் அனைத்து மக்களுக்கும் தந்துள்ளார்.
Inline image 1

இவரது நூல் வெளியீட்டுவிழாவின் போது எடுத்த படம். வெந்தாடியுடன் முன்வரிசையில் திரு. ராபின் மக்கிலாசன்

திரு.சிறீக்கந்தராஜாவுடன் இணைந்து வெளியிட்ட இரு புத்தக வெளியீட்டு விழாவில் நம் சுவாமிநாதனும் பேசினார்.  
 
மக்கிலாசன் தமிழுக்கு (சைவத்திற்கு) செய்த தொண்டினைப் பாராட்டி ஒரு விழா நடத்த வேண்டுமென  சிறீக்கந்தராஜா தம்பதியர் முடிவு செய்து டூட்டிங் மாரியம்மன் கோயில் வளாகத்தை முன் பதிவு செய்திருந்தனர். 
 
அந்தக் கோயில் வாடகைக்கு இருக்கும் இடத்தைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு வர, வேறொரு இடம் ஏற்பாடு செய்ய வேண்டுமென எண்ணியிருந்த வேளையில்  மக்கிலாசன் இறைவன் பாதம் அடைந்தது ஒரு இழப்பு. 

இம்மாதிரி சைவத்திற்கு தொண்டு செய்த பாதிரிகள் பித்ரு லோகத்தில் எங்கு போவர்? சைவ இடத்திலா? கிறிஸ்தவ இடத்திலா?

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்!

நா.கண்ணன்
Tthamizth Tthenee rkc1947@gmail.com
21:06 (6 hours ago)

to mintamil
 மத,மொழி இன, பேதங்களைக் கடந்தது  தொண்டு 
அன்னாரது மறைவுக்கு  இரங்கலை தெரிவித்து அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நம் கடமை
 
அன்புடன்
 
தமிழ்த்தேனீ
2012/6/22 N. Kannan <navannakana@gmail.com>
துரை.ந.உ vce.projects@gmail.com
21:18 (6 hours ago)

to mintamil
Inline image 1
Innamburan Innamburan
22:51 (5 hours ago)

to mintamil
'இம்மாதிரி சைவத்திற்கு தொண்டு செய்த பாதிரிகள் பித்ரு லோகத்தில் எங்கு போவர்? சைவ இடத்திலா? கிறிஸ்தவ இடத்திலா?'

-இது என்ன கேள்வி, கண்ணன்? கேள்வி தான் திரிசங்கு சொர்க்கத்துக்குப் போகும். உங்களின் வினோத வினா எனக்கு நினைவூட்டுவது, இது. Prof. Ernst Haeckal, who wrote the Riddle of the Universe was denounced by his colleagues for being a pagan. An understanding professor exclaimed, if there was a Christian in Christendom, it was Prof.Haeckal.  பித்ரு லோகம், சத்யலோகம், இந்த பூலோகம் எல்லாவற்றையும் பரிபாலிக்கும் இறைவன் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல. தவிர, தொண்டும், அத்துடன் வேறுபட்ட சமயமும் முரண் அல்ல.
இன்னம்பூரான்
coral shree coraled@gmail.com
22:57 (5 hours ago)

to mintamil
மதம் கடந்த பக்தி என்பது இதுதானோ... அல்லது இலக்கிய காதலாக இருக்குமோ.. எது எப்படியோ உயர்ந்த நோக்கம் பாராட்டிற்குரியது. அவர் ஆன்மா கட்டாயம் சாந்தியும் அடைந்திருக்கும், சுவர்க்கலோகம் அவருக்காக திறக்கப்பட்டும் இருக்கும்... சுவர்க்க லோகத்தில் கட்டாயம் சைவம், கிறித்தவம் என்ற பாகுபாடெல்லாம் இருக்காது என்பது மட்டும் உறுதி..
அன்புடன்
பவளா

2012/6/22 N. Kannan <navannakana@gmail.com>
 Inline image 1
மின் தமிழ் மூலம் இந்த அரிய செய்தியை உலகறியச் செய்த
என்.கண்ணனுக்கு நெஞ்சார்ந்த
நன்றியும், வாழ்த்துக்களும்.

1 comments:

 1. Maravanpulavu K. Sachithananthan
  16:58 (2 hours ago)

  to mintamil
  வணக்கம்
  பெரிய புராணம் ஆங்கில மொழிபெயர்ப்புத் தந்த

  ஆங்கிலேயக் கிறித்தவப் பாதிரியார்
  அலத்தார் உரொபின் மக்கிளாசன்

  அண்மையில் காலமானார்.

  அவரின் தொலைக்காட்சிப் பேட்டி.
  https://www.youtube.com/watch?v=Z-l2i3h7zBU&feature=pla
  நன்றி


  coral shree coraled@gmail.com
  17:24 (2 hours ago)

  to mintamil
  பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா.

  அன்புடன்
  பவளா

  2012/6/26 Maravanpulavu K. Sachithananthan

  ReplyDelete

Kindly post a comment.