Wednesday, June 27, 2012

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே -- பால் நிலாப் பாதை - -இளையராஜா


பற்றிப் பிடித்துப் படித்த படிப்பு படிக்காதன காட்டும்

கற்கக் கேட்கக் கற்ற கல்வி கல்லாதனது உணர்த்தும் !

படிப்பு கல்வி அல்ல! கல்வி படிப்பும் அல்ல !

ஆற்றின் ஓட்டத்தில்

பாறை தடுக்க

எழும்பிக் குதிக்கும் அலைபோல் -

வாழ்வின் ஓட்டத்தில்

வராதன எதிர்நிற்கும்

குனிந்து நிமிறும் களைகள்!

கற்பன ஓர்நாள் அற்றுப்போம் !

அற்றுப் போகவா கற்பது ?

அற்றுப் போகாப் பொருள் கற்க

ஈறற்ற ஒன்றல்லவா கற்க வேண்டும் ?

கற்றல் என்பது நிற்றல் அல்லவா?

கற்றவாறு நிற்றல் அல்லவா ?

கற்று - அற்றுப் போதல் கற்றல் !

கற்று - அற்றுப் போதல் கற்றல்

நின்று - அற்றுப் போதல் நிற்றல்

கற்பனை நின்றால் நிற்றலே ஆகும்! அது கற்றன எல்லாம்

அற்றுப் போதலே !



எனக்கு எதுவோ உனக்கும் அதுவே... 

பால் நிலாப் பாதை

இளையராஜாவின் இரண்டு நூல்களும் வெளியீடு

குமுதம் பு ( து )த்தகம்.

தொடர்புக்கு: 044 26426124

PUDUTHAGAM@KUMUDAM.COM

04-07-2012 குமுதத்திலிருந்து எடுத்தாளப்பட்ட கவிதை !

நன்றியுடன்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.