Wednesday, June 27, 2012

கன்ணன் வெளியே --காந்தி உள்ளே - விக்ரம் நடிக்கும் கரிகாலன் ?


                                                Karikalan                             
Promotional poster
Directed byL. I. Kannan
Produced byS. S. Vasan & S. Parthi
Written byA. R. Gandhi Krishna
Starring
Music byG. V. Prakash Kumar
CinematographyN. Karthik
Editing byT. S. Suresh
StudioSilver Line Film Factory
CountryIndia
LanguageTamil


கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்ற அனுபவ மொழியுடன் சினிமா எடுத்துப்பார் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், அவரோடு இணந்து பணிபுரியும் அனைவர்க்குமே ஒவ்வொரு திரைப்படமும் ஓர் தலைப் பிரசவம் என்றே கருதவேண்டும்.

7-வது அறிவு வசூலில் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது, என்றவுடன் ஓர் அரசனைத் தேடிப்பிடித்துக் கதையை உருவாக்கினர். அந்தப் படத்தின் இறுதி எழுத்து யான் என்பது சரியல்ல யன் என்றே இருக்கவேண்டும் என்று சிலர் குரல் கொடுத்தனர். உரியவர்கள் செவி சாய்க்கவில்லை.

விக்கிரமனுக்குக் கரிகாலன் கிடைத்தார். படத்தின் வேலைகள் 25% முடிந்துவிட்ட நிலையில், என்ன காரணமோ, இயக்குநராக உள்ள கண்ணனுக்குப் பதிலாக, கதையை எழுதிய காந்தி கிருஷ்ணாவே
இயக்கக்கூடும் என்று CHENNAI TIMES தகவல் தருகின்றது.

கரிகாலனின் தயாரிப்பாளருள் ஒருவரான எஸ். எஸ். வாசனை அணுகியபோது,  உறுதியாக, கண்ணன் இந்தப் படத்தில் இருப்பார் என்று பதில் கிடைத்தது.

கரிகாலன் இன்னும் 75% படமாக்க வேண்டியதுள்ளது. அதற்குள் எதுவும் மாறலாம்: மாறாமலும் இருக்கலாம். நமக்கென்ன நஷ்டம் ?

கஷ்டமோ நஷ்டமோ காரியம் ஆகவேண்டுமென்றால் கழுதையின் காலை வேண்டுமானாலும் பிடிக்கவேண்டும் என்பதுதானே முதியோர் மொழி.

வெளிநாட்டிலிருக்கும்பொழுது தமிழக முதல்வருடன்தான் முதலில் பேசினேன், என்று பத்திரிகைகளுக்குச் செய்தி !

இப்பொழுது முன்னாள் முதல்வர் சந்திப்பு. மத்திய அரசில் செல்வாக்குடையவர் என்று பலர் மந்திராலோசனை வழங்கியதால் !



0 comments:

Post a Comment

Kindly post a comment.