Thursday, June 14, 2012

மனைவி பாதம் கழுவும் திருவிழா ! மகளிரைக் கொண்டாடும் வணிகர்கள், தமிழகத்தில்!


Inline image 1


Inline image 3


மனைவியின் பாதம் கழுவும் திருவிழா சென்ற மாதம் சியோலில் நடைப்பெற்றது.

பாதம் கழுவி முத்தம் கொடுக்கணுமாம்.. 

தண்ணீரை என்ன செய்தாங்கன்னு சொல்லல.

க்டைசி இரண்டு வரிகள் மன வருத்தைத்தான் எனக்கு எற்படுத்தியது. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும்  ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் மகளிரைப் பற்றி என்ன சொல்வது?

தமிழகம் முழுவதும் பரவி அமைந்துள்ளது ”அண்ணாச்சி:’ பலசரக்குக் கடைகள். அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை ( பொங்கல் திருநாளை ஒட்டி )சொந்த பந்தங்களுடன் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்றவண்ணம் வாடகை ஊர்திகளை (பஸ்- வேன் ) எற்பாடு செய்து கொள்வர். சமையல் பாத்திரஙகள் , மற்றும் அடுப்பு வசதிகளுடன் பயணம் தொடரும். வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து திரும்பி வரும் வரை துரும்பைக் கூட தத்தம் மனைவியரைத் தொடவிடாமல் பார்த்துக் கொள்வர். சமைப்பது, பரிமாறுவது, பாத்திரங்களச் சுத்தம் செவது இதர பல எடுபிடி வேலைகள் அனைத்தயுமே ஆண்களே செய்து மகிழ்வர்.

தங்களுக்காக உழைக்கும் மனைவியருக்கு மரியாதை செய்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ள சியோல் ஆண்மக்களைப் போற்றுவதெ நமது பண்பாக இருக்க வேண்டும்.

மேலும், பணியார்றும் மகளிரை மனைவியாகக் கொண்ட / மற்றும் மனைவியரை நேசிக்கின்ற வீடுகளில் எல்லாம் வீடுகளில் வேலைகள் சமமாகவே பங்கிடப்படும் காலத்தில் வசிக்கும் நாம் நமது மனைவியருக்கு பாத பூஜை செய்யாவிடினும், துன்புறுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா?

0 comments:

Post a Comment

Kindly post a comment.