Wednesday, March 14, 2012

முத்துச் செல்வியே, இனி நீ வெற்றிச் செல்வியே !!


அன்னை கோமதி திருவருள் துணையும்

அன்னை ஜெ.யின் அரும் பெரும் தலைமையும்

நிறைவாய்ப் பெற்ற முத்துச் செல்வியே !

கறை படாக் கரமே உழைப்பின் உயர்வே!

பெண்குலம் மகிழும் பொன் விளக்கனையாய்!

நாங்கள் இதுவரை கண்டே அறியா,

ஓங்கிய சிறப்பின் ஒரு பெரும் சோதரி,

உன்னை விட்டால் யார் துணை எமக்கு ?

உன்னையே தேர்ந்து அனுப்புவோம் உறுதி!

நகர் மன்றத் தலைவியாய் நனி புகழ் பெற்ற நீ

சட்ட மன்றிலும் தனிப் புகழ் எய்துவை !

அமைச்சர் பொறுப்பிலும் அழகுற அமர்வாய் !

அம்மா,  மனத்தில் அணுக்கமாய் நிறைவாய் !

சங்கரன்கோவில் தனிச் சிறப்பெய்திட

எங்களுக்கெல்லாம் உவகை பொங்கிட

வெற்றிக் கனியைக் கொய்வாய் உறுதி!

அன்னையின் ஆணை ! அன்பர்கள் ஆணை!!

முத்துச் செல்வியே, இனி நீ வெற்றிச் செல்வியே !! 

இவண்

மண்ணின் மைந்தன் 


சீராசை சேதுபாலா

S/O சங்கரநாராயண பிள்ளை


SNKL  திருக்கோவில்  முன்னாள் பள்ளியறைப்  பிள்ளை  மருமகன்
rssairam.blogspot.com  ”மனித தெய்வங்களும் சில சேகரிப்புகளும்”

பயனர், கட்டற்ற கலைக்களஞ்சியம் ( தமிழ் விக்கி பீடியா )

rssairam @ gmail.com   rssairam99@gmail.com  rssairam@yahoo.com  

135 / 75, தெற்குரதவீதி,சங்கரன்கோவில்,திருநெல்வேலிமாவட்டம் 627756, 

 18000 முதல் 20000 வாக்குகள் வித்தியாசத்தில்  அ,தி.மு.க.வெற்றிபேறும்.

அமைச்சர் அவையிலும் செல்வி.ஜெயலலிதா அமரவைத்து 

அழகுபார்ப்பார்.

தேர்தல் முறையில் சீர்திருத்தம் என்பதற்குப் பதிலாக புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தமிழகம் மற்றும் இந்தியாவின் தலை எழுத்தே மாறும்.புதிய தேர்தல் முறைப்படி தேர்தல் நிகழ்த்தப்படும். அதுசமயம் பாரதத்தின் முதல்  பிரதம மந்திரி செல்வி ஜெயலலிதா அவர்களே, ஆவார்.
அவரது பன்மொழிப் புலமையும், ஆழ்ந்த சிந்தனைத் திறனும் இந்தியாவின்  தலை எழுத்தையே மாற்றிடப் போகின்றது.
திராவிட இயக்கம் முதலில் சொல்லி வந்ததுபோல், ஆட்டுக்குத் தாடிபோல் நாட்டுக்குக் கவர்னர் எதற்கு என்று  வினா எழுப்பி, கவர்னர்கள் பதவிகள் இல்லாமற் போகும் மக்கள் சபை இருக்கும்போது இராஜ்ஜிய சபை கூடத் தேவை இல்லை! இரண்டு பக்கமுமே ஆர்ப்பாட்டமும் கூச்சல்களும் ஒத்திவைப்புகளும் தானே தொடர் கதை ஆகின்றன அது ஒரே சபையுடன் இருந்து விட்டுப்போகட்டும். கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்

புதிய தேர்தல் முறைப்படி தேர்தல் நடக்கப் போகின்றது..

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் பிரதமராக

செல்வி ஜெயலலிதா பதவியேற்கப்போவது

காலத்தின் கட்டாயம்,

 திருவாவடுதுறை  வெள்ளை வேம்பு மாரிய்ம்மனின் அருட் செய்தி





0 comments:

Post a Comment

Kindly post a comment.