Friday, February 24, 2012

தமிழைத்தானே கற்றுக்கொள்ளத் துணை செய்த சி.பா. ஆதித்தனார் இதழியல் விழா!



 திருச்சியில் சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் தமிழ்
வளர்ச்சியில் தமிழ் இதழ்கள் என்னும் பொருண்மையிலான கருத்தரங்கம்
03.03.2012 தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அதன்
அழைபிதழ் இத்துடன் இணைப்பில் உள்ளது.
நன்றி.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்

--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
 


தமிழகத்தின் மையப்புள்ளி திருச்சி .எனவே தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திருச்சியில் கூடலாம். தமிழகத்தில் குடியேறிய பிற மொழியினர்
தினத் தந்தியின் உதவியால்தான் தமிழ் பேசக் கற்றுக் கொண்டனர். நேற்றும் இது நடந்தது. இன்றும் நடக்கின்றது. நாளையும் நடக்கும் . என்றும்  தொடரும். வரலாறாகும்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ளது போல் பத்திரிக்கைகளை மாவட்டப் பதிப்புக்களாக்கியவர் சி.பா.ஆதித்தனார். மாலைப் பத்திரிக்கைகளின் வழிகாட்டி ஆதித்தனார். இன்றைய இலவச வார இதழ்களின் மூலகர்த்தா ஆதித்தனார். மாத இதழ்களின் வழிகாட்டியும் அவரே. வார இதழ்களுக்கும் அவரே காரணி.

சோர்வுற்ற நேரங்களில்  வாரந்தரி ராணியையைத் ,தொடர்ந்து படிக்கத் தவறியவர்கள் வாங்கிப் படித்தால் கூட ஆரம்பகாலத் துடிப்பும் வேகமும் படிக்கத் தூண்டும் மோகமும் ராணியிடம் இன்றளவும் உண்டு. விரும்பும் பெயரினைத் துவக்கும் இதழுக்கு வைத்திடப் புதிய வழியைக் காட்டியவரும் ஆதிதனார்தான். ராவில் முதலெழுத்தினைத் துவக்கக் கூடாதே எப்படி ராணி என்று பெயர் வைத்தார் என்ற வினாவிற்கு விடைதான் வாரந்தரி. ராணி. 

இராஜாஜியின் கோபம் காங்கிரசை வீழ்த்திட எப்படி உதவியதோ, அதேபோன்று ஆதித்தனா தி.மு.க.வை ஆதரித்த பின்னரே பட்டி தொட்டிகளெங்கும் கழகம் செல்ல முடிந்தது. காலத்தின் கட்டாயத்தால் ஆதித்தனார் பாதை மாறிய பின்னர் , கழகத்திற்குத் தினத்தந்தியை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. ஆதித்தனாருக்குக் கிடைத்தது கூட்டுறவு அமைச்சர் ப்தவி.

அந்தக்காலத்தில், ம.பொ.சியுடன் கரங்கோர்த்துக்கொண்டு சட்டசபையில் அதிக உறுப்ப்னர்களைக் கொண்டுவருமளவிற்கு வலிமை பெற்றிருந்த பொதுவுடைமைக்கட்சியினரையும் பயன்படுத்திக் கொண்டிருந்தால்
சி.பா. ஆதித்தனார்தான் தமிழக முதல்வர். வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டிய சூழலில் தமிழ் ஆர்வலர்கள் பாதை மாறியது தமிழகத்தின் தலை எழுத்தையே மாற்றிவிட்டது.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.. அவ்வளவு தகவல்கள் உள்ளன. தேவியில் வந்த திராவிட மாயை, தினமணிக் கதிரில் வந்து கொண்டிருக்கும் ஓர் தொடர் தமிழகத்தின் கடந்த காலத்தின் தவறான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டும்

இன்றும் தினத்தந்திதான் விற்பனையில் நம்பர் !. செய்திகளை முந்தித் தருவதிலும் நம்பர் 1.

 தவறுக்கு வருந்துகிறோம் என்று போட்ட செய்திக்கு  வருத்தம் தெரிவித்த வரலாறே  தினத்தந்திக்குக் கிடையாது.

என் தந்தக்குக் கிட்டத்தட்ட 90 வயது இன்றும் படிப்பது தினத்தந்திதான்.

எனது வலைப்பூவில் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் , தினத்தந்தி தொகுத்துத்தரும் சென்ற ஆண்டின்  முக்கியச் செய்திகளைத்தான் அப்படியே மீள்பதி விடுவேன்,  விளையாட்டு-கிரிக்கெட்-சினிமா செய்திகளைத்தவிர. பார்த்தவர்கள் பலர். தொலைபேசியில் பாராட்டுவர்.

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் திருச்சியில் இயங்குவது இன்றுதான் தெரியும். நடக்கப்போவது நாலாவது ஆண்டு விழா.

 திருச்சியில் விழாவெடுக்கும் முனைவர் தி  நெடுஞ்செழியன் , அவருக்குத் துணை நிற்கும் கல்லூரி நிர்வாகம், விழாவில் பங்கேற்கும் மெய்யான தமிழ்ப் பற்றாளர்கள், மற்றும் பார்வையாளர்கள் எல்லோருக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்களும், வாழ்த்துகளும்.!
 
 
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!

                                                   -  சி.சுப்பிரமணிய பாரதியார்

0 comments:

Post a Comment

Kindly post a comment.