Saturday, February 25, 2012

உலகளாவிய அளவில் நல்ல தமிழ் நூல்களுக்கு 500000 ரூபாய் பரிசு!


 


1948-இந்திய சுதந்திரத்திற்குப்பின் புத்திசாலித்தனமும் தேசப்பற்றும் மிகுந்த காங்கிரஸ் பிரமுகர்கள் பால்பண்ணை, நிலவள வங்கி போன்றவற்றைக் கூட்டுறவு முறையில் தோற்றுவித்தனர். மக்கள் தொண்டாற்றினர். காலப்போக்கில் அவற்றின் கோலமும் கொள்கைகளும் அப்படியே இருந்தாலும் ஆளுங்கட்சினரின் கருவூலங்களாக மாற்றப்பட்டுவிட்டன..

.ஆனால் ஒரு தேசிய நலநிதி கூட்டுறவு சஙகம் மட்டும் இன்னும் பொது நல நோக்குடனேயே தொடர்கின்றது தன் பணியை!. சஙத்திற்குச் சொந்தமாக ஒரே ஒரு நிலப் பகுதியை ( தோட்டத்தை ) வாங்கினர், கூட்டுறவு முறையில்.! தற்போது அது 19 தோட்டங்களாகிவிட்டன. பதவிகளையும் , ஆள்வோரின் துணையுடனும் நிலங்கள் எந்தத் தனி மனிதர்களாலும் சொந்தமாக்கிக் கொள்ளப்படவில்லை.



இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் 

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் 

என்ற பாரதிதாசனின் கனவு அங்கே நனவாக்கப்படுகின்றது.

அதனால்தான் அடுத்த கட்டமாக இலக்கிய அற வாரியம் ஒன்றை அந்தக் கூட்டுறவு சங்கத்தினர் அமைத்துள்ளனர்.அதன்மூலம் உலகில் வெளியிடப்படும் சிறந்த தமிழ் நூலுக்குப் 10,000 அமெரிக்க டாலர் அல்லது 500000 ரூபய் பரிசினை இரண்டுஆண்டுகளுக்கு ஒரு முறை மனமுவந்து வழங்கி வருகின்றனர்.

எந்தத் துறை சார்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் தமிழில்தான் இருக்க வேண்டும்.மொழித்தரம் 25%, படைப்புத் திறன் 25%,  ஒவ்வொன்றிலும் குறைந்தது நூற்றுக்கு அறுபது மதிப்பெண்கள் கட்டாயம். விளைபயன் 50% இதில் குறந்த பட்சம் நூற்றுக்கு எண்பது மதிப்பெண்கள் கட்டாயம்.


ஈராண்டிற்கொருமுறை ஆய்வுகள் நிகழும். முந்திய ஈராண்டுகளில் பதிப்பிக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.மொழி பெயர்ப்பு நூல்களுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், பிற மொழியில் தான் சுயமாக எழுதிய நூலாக இருந்து அதனைத் தமிழில் மொழி பெயர்த்திருந்தால் பரிசுப்போட்டியில் பங்கேற்கலாம்.  வாழ்க்கை வரலாறு., குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது கல்வித் தகுதி கருதி உருவாக்கப்படும் ஆய்வு நூல்களுக்கு இடமில்லை. மூவருக்கும் மிகாத கூடுப் படைப்பாளிகளின் கூட்டுத்தயாரிப்பு நூல்கள் தாரளமாகப் பங்கு பெறலாம்.

ஆய்வாண்டின் ஜனவரி மத்திமத்தில் தொடங்கி ஏப்ரல் 16ம் நாள் வரை
பங்கேற்புக்கான நூல்கள் ஆய்வுக்காக ஏற்றுக்கொள்ளப்படும். ஆய்வாண்டின் இறுதிக்குள் பரிசு முடிவு, பரிசளிப்பு நாள், இடம் ஆகியவை அறிவிக்கப்படும். ஆய்வாண்டின் இறுதிக்குள் முறையான பரிசளிப்பும் நடைபெறும்

நடுவர்கள் குழு,தேர்ந்த்டுக்கும் முறை எல்லாமே நேர்த்தியாகவே உள்ளன. குறைபாடுகள் எதுவுமே தெரியவில்லை.

உலகளாவிய தொடர்புக்கு,

1) திரு.நந்தன் மாசிலாமணி, கலைஞன் பதிப்பகம்,
19, கண்ணதாசன்சாலை, தியாகராய நகர், சென்னை17
(044  24345641)

தொலை பேசியில் தொடர்புகொள்வோர் கவனத்தில் கொள்க. நீங்கள் பேசும் பொழுது உரிமையாளர் நந்தன் இல்லாதிருக்க வேண்டும் என்று. நீங்கள் வணங்கும் தெவத்த வேண்டிக் கொள்ளுஙள்.

ஏனெனில்,   தொலை பேசியில் நான் பேசிய பொழுது நந்தனைக் கேட்டேன். கொடுத்தார்கள். ம் , ம், ம், ம், ம் என்ற பதிலைத் தவிர வேறு பதில் எதுவுமே அவரிடமிருந்து வரவில்லை. மவுனவிரதமாக இருந்தால் தொலைபேசி இணைப்பினைத் தரவேண்டாம் என்று உதவியாளர்களிடம் ஆணை பிறப்பித்திருக்கலாம். . பல் உபாதைகளாய் இருந்திருப்பின் தொலை பேசியைத் தொடாமலே இருந்திருக்கலாம்.

காலையில்தான் 30% கழிவுடன் ஆயிரம் ரூபாய் வரை புத்தகங்கள் வாங்கி வந்தேன். நன்றி சொல்லப் பேசியபோது இந்தக் கூத்து.  ஏன் இந்த ம், ம்.ம்.ம்,  ம்பதிலோ தெரியவில்லை.

 இந்த லட்சணத்தில் போட்டிக்கான விண்ணப்பங்களை வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று ஊழியர் தொலைபேசியில் தெரித்தார்..2010, 2011, 2012  ஆண்டுகளில் வெளியான நூல்களை அனுப்பலாம் என்றும் போனஸ் செய்தியினைத் தந்தார்.  அந்த ஊழியரின் பதில் விதி முறைகளின் படி குழப்பத்தத் தருகின்றது.

வாங்கப் போனவன் சும்ம திரும்ப வேண்டாமே என்று 1000 ரூபய்க்குப் புத்தகங்களை வாங்கித் திரும்பினேன்.  நன்றி சொல்ல பின்னர் அந்திநேரத்தில் தொலை பேசியில் பேசியபோது அவமனப் படுத்தவும் பட்டேன். எங்குமே கழிவு நான் கேட்டது கிடையாது. அவர்களாக 25% தருவதாகக் கூறினர். அதை நான் 30% ஆகக் கேட்டேன், அவ்வளவுதான். மீதித் தொகையக் கூட அங்கிருந்த ஊழிய நண்பர்களுக்கு எல்லோரும் டீ சாப்பிடுங்கள் என்று அன்பாகக் கொடுத்துவிட்டுத் திரும்பி விட்டேன்.

சந்தியா பதிப்பக உரிமையாளர் சவுந்திரராஜன் என்னிடம் வந்திருந்தால் நானே விண்ணப்ப படிவங்களைத் தந்திருப்பேனே என்று டெல்லியிலிருந்துகூறினார்..

2 .இலங்கை திருமதி சாந்தி திருநாவுக்கரசன், colombo-04, Srilanka.

3. சிஙகப்பூர் திருமதி புஷ்பலதா நாயுடு, சிஙகப்பூர், 188064.

4.கனடா.        இணைப்பேராசிரியர் ஆர். சேரன், Canada N9B 3P4

                           பேராசிரியர்  செல்வகனக நாயகம், Canada M5S 1H8

5, பிரான்ஸ் நாகலட்சுமி சிவசம்பூ, பிரான்ஸ்

 ஆரம்பத்தில் படிக்கத் துவங்கியவர்களுக்கு இப்படி ஒரு ஐக்கியக் கோட்பாடு கொண்டோர் தமிழ்நாட்டிலா? என்ற ஐயப்பாடு எழுந்திருக்கும். முடிவில் ஐயம் தீர்ந்திருக்கும். வியப்பும் நீங்கியிருக்கும்.

1950 ஆம் ஆண்டில் ஐரோபிய முதலாளிமார்களின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில், அமைச்சர்.வீ.தி.சம்பந்தன் கூட்டுறவு முறையில் தோட்டங்கள் அமைக்கும் முயற்சியில் இறங்கினார். வெற்றியும் பெற்றார். இன்று 19 தோட்டங்கள் கூட்டுறவு முறையில் தொடர்ந்து இயங்குகின்றன.


அந்தத் தோட்டத்தில் நிர்வாகியாக தொடர்ந்து இருந்து வருபவர்தான், தான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் ஆவார். இளம் பருவத்திலேயே காந்தி, நேதாஜி போன்றோர்பால் ஈடுபாடு கொண்டார். சூன் லீ தோட்டத்தில் உதவி எழுத்தர் பதவியிலிருந்து இவரது வாழ்க்கை தொடங்குகின்றது என்று கூறலாம்.

பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றார். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட அனுபவமும் உண்டு.1949 லிருந்தே அரசியல் ஈடுபாடும் உண்டு. நல்லோரைப்  புறக்கணிக்கும் சமூகம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் உண்டோ?

சமாதான நீதிபதி, டத்தோ, தான்ஸ்ரீ ஆகிய பட்டங்களை மலேசிய அரசு வழங்கியது.

இந்திய அரசும் கான பிரவாசி பாரதிய சம்மான் விருதினை வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் நியூ காசல்  பலகலக் கழகம், கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்து   கவுரவித்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக மலேசிய சமூகம் இவருக்குக் கூட்டுறவுக் காவலர் பட்டத்தைக் கொடுத்து இவரை வாழ்த்தி அவர் வழி பீடு நடை போடுகின்றது.


இந்தியாவில் இது போன்று ஏதாவது கூட்டுறவு நிகழ்வுகள் உண்டா என்று
யோசிக்கையில், அந்தமானில் மார்க்ஸிஸ்ட் தோழர்களால் நடத்தப்பட்டு வரும் தங்குமிடம் (லாட்ஜ்) நினைவிற்கு வருகின்றது.  அதன் சிறப்பு என்னவென்றால் ஒரு எல்லக்குமேல் கட்சித் தோழர்களை நிர்வாகத்தில் அனுமதிக்க மாட்டார் அதன் நிர்வாகி. சுனாமி வந்த மறு ஆண்டில் எநான் என் மனைவியுடன் நேரில் சென்றிருந்தபோது கண்ட உண்மை இது. சேர்த்து வைத்த குறிப்புக்களைத் தொலைத்துவிட்டேன்.

அந்தமான் தமிழக கவர்னரின் அதிகாரத்தில் வருகின்றதா/ கல்கத்தா நிர்வாகமா என்பதில் எனக்கு ஐயம் உண்டு.

தான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் போன்று சகல தகுதி உடையவர்கள் எவரும் தமிழகத்தில் யாராவது உண்டா என்று எண்ணிப் பார்க்கின்றேன். சற்றேறக் குறைய கூட்டுறவு என்ற சொல்லைப் பயன் படுத்தவில்லையே தவிர கூட்டாகவே நடத்தி வருகின்றார், மதுரா டிராவல்ஸ் நிறுவனர் கலைமாமணி வீ, கே.டி. பாலன்.


அவரிடம் பணியாற்றுவோரைத் தான் பெற்ற பிள்ளைகளாகவே பாவித்து நடத்தி வருகின்றார். கண்டிப்பும் உண்டு. பாசப்பொழிவும் உண்டு. திடீர் பிரவேசங்களின் போதெல்லாம் கண்டு வியந்திருக்கின்றேன். அவரது அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் மதிய உணவு இலவசம்.  அந்த நேரம் அவரைப் பார்க்கச் செல்வோர் யாராய் இருந்தாலும் அவர்களும் சாப்பிடலாம் ஓரிரு முறை சொல்வார். பிகு பண்ணினால் வற்புறுத்த மாட்டார்.

பணியாற்றுவோரில் விரும்புபவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்தும் சாப்பிடலாம்.

மதுரா மாமனிதர் விருதினைக் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சமூகத்தில் நல்லோர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஒரு லட்சம் ரொக்கப் பரிசுத் தொகையுடன் வழங்கி வருகின்றார். இன்னும் எண்ணவற்றச் சொல்லலாம்.

அம்பத்துர் அயப்பாக்கத்தில் ஒரு விழாவில் அவருக்கு கலைமகள் புதல்வன் என்றொரு பட்டத்தை ஈராண்டுகளுக்குமுன், விகடகவி ஆசிரியர் குழுவின் மூலம் வழங்கப்பட்டது. தேர்வுக் குழுவில் இதனைப் பதிவு செய்து கொண்டிருக்கின்ற சீராசை சேதுபாலாவும் ஒருவன் என்பதற்காக வலைப்பூ அன்பர்கள் பெருமை கொள்ளலாம்.

இந்திய அரசு அவருக்கு எந்தப் பட்டத்தையும் கொடுத்து மகிழலாம். எந்த பல்கலைக் கழகமும் அவருக்கு சிறப்பு டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. அவரை சுற்றுலாத் துறை அமைச்சராக்கி  அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசையும் எனக்கு உண்டு.

அடுத்தது எனக்கு தமிழ் நாட்டில் நினவுக்கு வரும் இளைஞர் ஈரோட்டில் சகல இனம், மதம், மொழி, கட்சியினராலும் ஒதுக்கித் தள்ள முடியாது என்ற அளவிற்கு மக்கள் செல்வாக்குடன் திகழும் ஈரோடு ஸ்டாலின் குணசேகரன். அவரது செயல்பாடுகளை விவரிக்கப் போனால் கட்டுரை விரியும்.


 ஈரோடு புத்தகத் திருவிழா அவர விதைது இன்று என்றும் அழியாத ஆலமரமாக ஓங்கி வளர்ந்து வருகின்றது. கோடீச்வரராய் இருந்தாலும் தான் சார்ந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் செய்லாற்ற முடியும். இருபுறமும் கூர்மையன வாளினைக் கையில் பிடித்துக்கொண்டு அற்புதங்கள் பல ஆற்றி வருகின்றார், ஸ்டாலின் குணசேகரன்.


 மாவட்ட ஆட்சியர் சகாயம் தமிழகத்திற்குக் கிடைத்திட்ட சொக்கத்தங்கம். இந்தியாவிலேயே யாருமே கேட்காகாத போதே திண்டுக் கல்லில் இருந்தபோது சொத்துக் கணக்கினை முதன் முதலில் காட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர்.

மதுரைக்கு வந்தவுடன், இலங்கை அகதிகளில் படித பத்து இளைஞர்களுக்குப் பத்து லட்சம் செலவில் BPO  வைத்துக் கொடுத்துள்ளார். மற்றவற்றை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகின்றேன்

தான்ஸ்ரீ டத்தோ கே.சோமசுந்தரதை இடையில் விட்டு விட்டேன் என்கிறீர்களா?
இவற்றைப்  படித்த பின்னராவது இவர்போன்றோர் தமிழகத்தில் உருவாக மாட்டார்களா என்ற ஆசையினால்தானே இந்தப் பதிவு.

ஒன்றுமே செய்ய வேண்டாம் தவறான முறையில் இயங்கிவரும் கூட்டுறவு சஙகப் பொறுப்பாளர்கள் அதனை விட்டு விலகினாலே போதும்.

அறங்காவலர்களாகக் திருக்கோவிலில் நியமிக்கப்படுவோருக்கு தேவாரம் திருவாசகம் பிரபந்தம் ஏதேனும் தெரிந்திருந்தாலே போதும்

500000 பரிசினைத் சிறந்த த்மிழ் நூல்களுக்குப் பரிசளிக்கக் காத்திருக்கும்  தான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் என்ற தவப் புதல்வனைப்

பெற்ற்றோ.  கே.எஸ் இரத்தினசாமிப் பிள்ளை, திருமதி. அன்னக்கிளி.

பிறப்பிடம் :- தெலுக் இந்தான், பேராக், மலேசியா

பிறந்த நாள் :- 13-03-1930

 தான்ஸ்ரீ சோமா புத்தகப் பரிக்கான விண்ணப்படிவம் ப்ல்வேறு புத்தக வெளியீட்டாளர்களிடமும் கிடைக்கின்றது. அனுப்பப் படாதிருந்தால் அந்தப் பதிப்பகத்தின் முகவரி பரிசளிப்பவர்களிடம் இல்லை என்றுதான் பொருள். சென்னையில் கலைஞன் பதிப்பகம் கட்டாயம் தந்தாக வேண்டும். அங்கும் கிடைக்கும்.

 VIRUBA.COM 10000  டாலருக்கான  பரிசுத் தொகயினை பெற விண்ணப்பிப்பதற்கான அனைத்துத் தகவல்களுடன் படைப்பாளிகளுக்காகக் காத்திருக்கின்றது. விண்ணப்ப படிவமும் அதிலேயே உள்ளது. தரவிறக்கிக்கொள்ளலாம்.
 

உலகத்தில் வெளியாயிருக்கும் அனைத்துத் தமிழ் நூல்களைப் பற்றிய சகல விதமான தகவல்களையும் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பதிப்பகங்கள்  தஙள் வெளியிடும் தமிழ் நூல்களில் ஒரு பிரதியினை விருபாவிற்கு அனுப்புவித்தால் நல்லது. ஆதார பூர்வமான தகவல்களச் சேர்த்திட அலந்துந்து திரியும் குமரேசன் அவர்களுக்கு அனைவரும் உதவிட வேண்டும். படைப்பாளியே தன் நூலைத் தந்து உதவலாம்.

தகுதி படைத்த நூல்கள அனுப்பி வைத்து இந்தியாவில்- தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் பரிசினைப் பெற்றிட வேண்டுகின்றேன்.

500000 ரூபாய் ஒரெ நூலிக்கா அல்லது பல்வேறு நூல்களுக்குப் பகிர்ந்தளிக்ககப் படுமா என்பன போன்ற வினாக்களுக்கெல்லாம் விடை இல்லை. ஆனால் பரிசு/ பரிசுகள் வழங்கப்படும் உறுதியாக. அவர்கள் அப்போதைக்கப்போது தேவைக்ளுக்கேற்ப எடுத்திடும் முடிவுகளே இறுதியானவை.



வையத்துள் வழ்வாங்கு வாழ்பவர் வானுறையுந்

தெய்வத்துள் வைக்கப் படும் -திருவள்ளுவர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.