Friday, February 10, 2012

மூங்கிலால் மொபைல் செய்யப் போகும் தொட்டி நாயக்கர்கள்!

Kieron-Scott Woodhouse

Kieron Scott-Woodhouse, from Shepherds Bush in लन्दन

படத்தின் வலது புறம் உள்ளவர் பெயரும் ஊரும் மேலேயே கொடுத்து விட்டேன்


உபயோகப்படுத்திய மொபைல் போன்களின் வடிவமைப்புக்களையும், தரங்களையும் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போனார் குறைந்த காசென்று பிற அலைபேசிகளைப் பயன்படுத்தியவர்கள் தற்பொழுது BSNL-கே திரும்பிக் கொண்டிருக்கின்றனர் அகல அலவரிசையைப் பயன்படுத்தும் வலைப்பூ ஜாம்பவான் உண்மைத்தமிழன் எனக்கு ஒரே ஒரு தடவைதான் பழுது ஏற்பட்டது என்று இரு தினங்களுக்கு முன்பு கூறினார்.நாம் இப்பொழுது எடுத்துக்கொண்ட உண்மைக்கதைக்கு வருவோம்.நான்கு வருடங்கள் வளர்ந்த மூங்கில் மரங்கள் வளையும் தன்மை படைத்தவை.

இந்த வளையும் தன்மையைப் பயன் படுத்தி மொபைல் போனைத் தயாரித்து விட்டார், மேல் காணும் மாணவர். Middlesex’s Product Design course
படிக்கும் மாணவராகவே இன்னமும் இருக்கின்றார் இது போன்று மாணவப் பருவத்திலேயே கணினித் துறையில் சில கண்டுபிடிப்புக்களைச் செய்து உலக அளவில் காப்புரிமை இந்திய மாணாக்கர்களும் இருக்கின்றனர்

LENIN RABINDARANATH SIVALINGAM

என்று ஆங்கிலத்தில் தட்டிப்பாருங்கள், உண்மை தெரியும்। பலபக்கங்களில் வந்துகொண்டே இருப்பார்।இங்கிருக்கும் ஊடகங்களுக்கு அவர் போன்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தநேரம் எங்கே இருக்கின்றது।அடுத்தது எந்தத் திரைப்படம், யாருக்கு யார் ஜோடி, குத்தாட்டப் பாடலை யார் எழுதுகின்றார், என்று திரப்படங்களின் பின்னால் ஓடுவதற்கே நேரம் போதவில்லையே। இத்தகையோரை யார் தேடப்போகின்றார்கள்। ரெகமி என்பவர் எழுதியதற்குப்பின் செண்பகராமன் பிள்ளயைப் பற்றியும், கணித மேதை இராமானுஜ ஐயங்காரைப் பற்றியும் யாராவது தமிழில் எழுதியிருக்கிறார்களா தகவல் தருவீர்களா?

செண்பகராமன் பிள்ளை என்பவர் எம்டன் கப்பலில் வந்தார், சென்னையில் குண்டு போட்டார், சுபாஷ் சந்திர போசுக்கு நேதாஜி (தலைவர் அவர்களே) என்று பட்டம் கொடுத்தார், வெளிநாட்டில் தமிழர்களிடம் பணம், தங்கம், வசூலித்துக் கொடுத்தார், படை அமைத்திடத் துணையாய் இருந்தார், ஜெய்ஹிந்தை அறிமுகப்படுத்தினார் என்ரு வீராவேசமாகப் பேசுகின்றோம் நாடகங்கள் போடுகின்றோம்। ஆனால் அவர் எண்டன் கப்பலில் பயணிக்கவும் இல்லை, சென்னையில் குண்டு போடவுமில்லை என்ற கற்பனை நாவலைத் தமிழகத்தில் ஒரு பதிப்பகம் २०० விலையில் வெளிட்டிருப்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.லெனின் ரவீரபீந்திரநாத்தின் பெற்றோர் நினைத்தால் எல்லா ஊடகங்களிலும் வரவைத்திட முடியும்। மவுனத்தின் வலிமை அதிகம் என்பத அறிந்தவர்கள் அவர்கள்। விளம்பரத்தை விரும்பாதவர்கள்। நினைவில்அவரது தந்தை தமிழில் எழுதிய கணிப்பொறி நூல்களால் பயன் பெற்ற கிராமப்புற மாணாக்கர்கள் ஏராளம் அவர்களது திருமணம் அந்தக் காலத்தில் ஒரு ஸ்வீட், காரம், காப்பியுடன் முடிந்துவிட்டது। திருமணம் முடிந்த அன்றே கணவனும் மனைவியும் பார்க்கும் பணியிடத்திற்கு வேலைக்குச் சென்றுவிட்டனர்। நல்லோர் நினவில் வாழும் தொழிற்சங்கத் தலைவர் எம்।கல்யாணசுந்தரத்தின் தலமையில் நடந்தது। அவர்கள் மக்களுக்குத் தேவையான நன்மைகளச் செய்து கொண்டு சீரான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்।


மூங்கில் மொபைலில் சகல வசதிகளும் உள்ளன. கேமராவும் உண்டு. கூகிள்ஸ் அன்ராய்டு ஆபரேட்டிங் முறையில் இயங்கும்.Middlesex University அவர் படிக்கும் பல்கலைக்கழகத்தின் பெயர். ந்டுத்தர மக்களுக்கான ஆடை வடிவமைப்பைக் க்ற்றுக் கொடுக்கும் கல்லூரி என்று மட்டுமே என்னால் மொழி பெயர்க்க முடிகின்றது.இப்பொழுது உலாவ்ரும் ஐபோனின் எடையில் பாதிதான் இருக்கும்என்று பேட்டி கொடுத்திருக்கின்றார். பேட்டி நம்மவரால் செவ்வி என்று அழைக்கப்படுகின்றது. அந்தக் காலத்தில் டாக்டர் மு.வரதராசனார் சொல்லிச் சென்றுள்ளது நினைவுக்கு வருகின்றது.” மக்களிடையே பழக்கத்தில் உள்ள-மக்கள் எம்ளிதில் புரிந்து கொண்டு விட்ட தமிழ் வார்த்தைளை அப்படியே பயன்படுத்தலாம்” என்பதுதான் அது.

நூதன முறையில் செல்போனைத் தயாரித்த அந்த லண்டன் மாணவரை மனமுவந்து வாழ்த்துவோம்।

நடுத்தர மக்களுக்கும், ஏழை எளியோருக்கும், குறவன் குறத்தியருக்கும் மர்பி ரேடியோவை அந்தக் காலத்தில் கொண்டு சேர்த்த வி।ஜி।பி। சகோதரர்கள், வசந்த் நிறுவனம் போன்றோர் மூங்கில் அலைபேசிகளை மக்களிடையே கொண்டு செல்வதற்கான முன் முயற்சிகளை இப்பொழுதே துவங்கட்டும்

கைதொழில் எதுவானாலும் கற்றுக் கொள்ளத் தயங்காத படிக்காத- படிக்க முடியாத-படித்தும் வேலை கிடைக்காத- குறந்த படிப்புப் படித்தவர்கள் எல்லோரும் அருகில் உள்ள தொட்டி நாயக்கர் யாரையாவது தேடிப்பிடித்து கூடை, முறம் முடலானவற்றச் செய்யக் கற்றுக் கொள்ளுஙள்। அந்தப் பயிற்சி மூங்கிலால் மொபைல் செய்யும் பொழுது உறுதுணையாய்த் திகழும்। இது கதை அல்ல। நிஜம்! நிகழப்போகும் உண்மை।

இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும்। ஆனால் அவர்கள் விற்பனைக்குக் குறி வைத்துள்ளது சீனாவை!The bamboo smartphone started as a concept by Middlesex University student Kieron-Scott Woodhouse (pictured here on the right). A technology entrepreneur contacted Woodhouse after spotting his design online, and now the handset is becoming a reality.

1 comments:

 1. OCTOR EZHILVENDAN

  00:30 (3 hours ago)

  to me, arumugam6070, joejeya52, jayakodi, Kandasamy, kathiresan, Kunjitha, Mathivanan, mc, nagal, rama, Sankara, sheik, siddharthanslf, VIJAYAN, நலங், Sivalingam
  Images are not displayed. Display images below - Always display images from dr.ezhilvendan@gmail.com

  செப்புவார் உண்டோ செந்தோழர் ‘லெனினுக்கு’
  ஒப்பாரும் மிக்காரும் எஞ்ஞான்றும் - இப்புவியில்
  நகலெடுக்க முடிந்தால் நலமாய் இருந்திருக்கும்
  புகழோங்கி வாழ்கநம் ‘தம்பி’ - எழில்வேந்தன்

  ReplyDelete

Kindly post a comment.