Tuesday, February 14, 2012

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரிய்மா?-?
எட்டைய புரத்தில் பாரதியார் குடியிருந்த வீடு. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்ந்தது. மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டுவிட்டது.கலைஞர் காலத்தில் 5000 ரூபாய் ஈடாகக் கொடுத்து அரசு கையகப் படுத்திக் கொண்டது. பாரதியின் தாய்மாமன் சங்கரராமன் தொகையை அதிகரித்துத் தருமாறு வழக்குமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.

இந்த வீட்டில் இருந்து கொண்டுதான் பாரதி பாப்பா பாட்டினைப் பாடி இருக்கக் கூடும். சின்னஞ் சிறு குருவி போலே- நீ திரிந்து பறந்து வா பாப்பா. பாப்பாவுக்கென்று எழுதிய பாடலகளின் எண்ணிக்கை மொத்தம் 31.அதில் இரண்டாவது பாடலின் முதல் வரிகள் இவை.

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமாஎன்பது பழைய திரைப்பாடலின் முதல் வரிகள்.

செல் போன் டவர்களின் அலைக் கற்றை வரிசைகளில் மாட்டிக்கொண்டு சற்றெறக்குறைய சிட்டுக்குருவி இனத்தையே நாம் அழித்துவிட்டோம். இலங்கை ராணுவத்தின் கொலை பாதகங்களிலிருந்து தப்பிப் பிழைத்து ஆங்காங்கே வாழும் இலங்கைத் தமிழரைப் போன்று அங்கொன்றும் உயிரோடு இருக்கக்கூடும். பார்ப்பவர்கள் படமெடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அடையாளத்திற்கு!.

ஒருகாலத்தில் சிட்டுகுருவிகள் தங்கள் கூடுகளை அமைத்துக் கொள்ளாத வீடுகளே தமிழ்நாட்டில் கிடையாது என்று சொல்லலாம். அந்த வீடுகளில் குழ்தைகள் பிறப்பக்கப் போவதற்கான சகுனமாகப் பெரியவர்கள் பேசி கொள்வர். அதே போன்று குழந்தைகளும் பிறக்கும். வீட்டிற்குள் கட்டப்பட்ட குருவிக்கூடுகளக் கலைப்பது பெர்ம் பாவமாகக் கஎஉதப்பட்ட மக்கள் வாழ்ந்த பூமி இது.

கூட்டை அமைப்பதற்கான மென் சிறகுகள், அவற்றைத் தாங்கிக் கொள்ளத் தேவையான இலகுவான குச்சிவகைகளைக் கொண்டு வருவதும் எடுத்துப்போவதுமாக பெற்றோ/ தாய்க் குருவிகள் கால நேரம் பார்க்காமல் வீட்டிற்குள் பறந்து திரியும்.அப்பொழுது அவற்றால் எழுப்பப்படும் சந்தங்களைக்ச் சங்கீதங்களாகவே மக்கள் கருதுவார்கள்.

குறிப்பாகக் குழந்தையில்லாத் தம்பதியினர் த்த்தம் வீடுகளில் குருவிகள் வீடு கட்டாதா என்று ஏங்குவர். .கட்டுவதற்குரிய வசதிகளக்கூடச் செய்து கொடுப்பர். அவற்றை ஆயிரம் முறை ஆராய்ந்து பார்த்துவிட்டு பாதுகாப்பானதுதான் என்றுன் உறுதி செய்து கொண்டபின்னரே குருவிகள் அந்தக் கூடுகளைத்தம் வீடுகளாகப் பயன்படுத்திட முற்படும்

தமிழ்நாட்டில் சித்த வைத்தியர்கள் சிட்டுக்குருவி லேகியம் தயாரித்திட இது கூடக் காரணியாய் இருக்கக் கூடும். இது குறித்து ஆய்வு செய்து யாராவது முனைவர் பட்டம் பெற்றிருகின்றார்களா என்று தெரியவில்ல. தெர்ந்திருந்தால் தகவல் தரலாம். அல்லது ஆய்வு செய்ய முற்பட்டால்அருந்தவக்காடுஎன்று பொதிகை மலை குறித்து தமிழில் முதன் முறையாக டிஸ்கவரி சானல் படங்களைப் போன்று எடுத்துள்ள பாபநாசம் மோகன்ராமை அறிமுகபடுத்தி த்திட நான்தயார்.

இன்று என்ன சிட்டுக் குருவி புராணம் என்று வினா எழுப்புகின்றீர்களா. விடை தராமலா போய் விடுவேன். அதற்கும் வின்மணியே காரணம். தினமும் தமிழில் அறிமுகப்படுத்தும் புதிய இணையதளத்தில், இன்று வீடு கட்ட பிளான் போட உதவும்தை அறிமுகம் செய்துள்ளார். அதிலும் இன்னொரு சிறப்பு என்னவென்றால், அறிமுகப்படுத்திடும் புத்தகம் சிட்டுக்குருவி பற்றியது.

குறிப்பாகக் சிட்டுக்க்குருவிகளைப் பற்றிய ஐந்து கதைகளை குழந்தைகளுக்காக எழுதியுள்ள நா.ரா. நாச்சியப்பன் என்கிற குழந்தை எழுத்தாளரையும் தெர்ந்து கொள்ள முடிகின்றது. குழந்தைகளின் அருமை செட்டி நாட்டவர்களுக்குத்தான் தெரியும். அவர்கள் ஆண்குழந்தகளை உறவுக்குள்ளேயே தத்து எடுத்துக் கொள்வார்கள் கவியரசர் கண்ணதாசன் கூட பெற்றோர் இருந்தும் உறவினரால் தத்தெடுக்கப்பட்டவ ர்தான்.

புத்தகத்தை எழுதியவர் யார், புத்தகத்தின் பெயர் என்ன என்பதை மட்டும்தான் அறிமுகப்படுத்தி வருகின்றார், வின்மணி என்று இன்றுவரை தப்புக் கணக்குப் போட்டு விட்டேன்.445 அறிமுகமான பின்னர்தான் புத்தகம் முழுவதும் தரவிரக்கம் செய்து கொள்ளும் வசதியையும் தந்திருக்கின்றா.தெர்ந்து கொண்டேன். நண்பரிடம் மன்னிப்புக் கேட்பதத் தவிர வேறு வழி? இரவு பகல் கண் விழித்தேனும் அந்தப் புத்தகங்கள் அனைத்தயும் தரவிறக்கிச் சேமித்துக் கொண்டபின்தான் வேறு வேலை செய்வது என்று தீர்மானித்துவிட்டேன்.
0 comments:

Post a Comment

Kindly post a comment.