Friday, February 17, 2012

ஜெயந்தி சங்கரின் சீனக்கவிதைகள்-மிதந்திடும் சுய பிரதிமைகள்-

உயிர்மைப்பதிப்பகம் 2007ல்வெளியிட்டுள்ளது.

பகலவனைப் பனயோலைப் பெட்டிக்குள் அடைக்க முயன்ற தவறறைச் செய்து விட்டேன், ஜெயந்தி சஙகர் விஷயத்தில்! இவர் திருமதி இராஜம் கிருஷ்ணனைப் போன்று களப்பணியாற்றிப் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் விக்கிபீடியாவிற்குச் சென்று பார்த்தால் முழு விபரங்களும் தெரியும். இக்கட்டுரையின் இறுதியில் கொஞ்சம் தகவல்கள் உள்ளன. அதில் உள்ள வண்ண எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள் ஒவ்வொன்றையும் சொடுக்கினால் ஒவ்வொரு செய்தியைச் சொல்லும். அவற்றுள் ஒன்று தமிழ் விக்கிபிடியாவிற்குள்ளும் அழைத்துச் சென்று விடும். தெர்ந்து வைத்துக் கொள்ள வேண்டியது தமிழ்ப் பற்றாளரின் தலையாய கடமை.

17-2-2012 வெள்ளிக்கிழமை. சென்னை லயோலாவில் . முனைவர் பட்டம் பெறுபவர்கள் வாய் மொழித்த்தேர்வினை எபபடி எதிர் கொள்வர் என்பதை நேரடியாகக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.

எனது மகன் ஜீவாவின் நண்பன் அந்தோணி பாபு. அவரது துணவியார் பேபி சுகந்தி. uncle, uncle பாசமுடன் அழைத்துப் பேசுவார். பெரும்பாலும்ஆங்கிலத்தில் அமையும் அவர் பேச்சு என்னைப் பொறுத்தவரை தமிழும் ஆங்கிலமும் கலந்த்தே இருக்கும். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அந்தக்குடும்பத்தினரையும் கருதிப் பழகி வந்தோம்.


தொடங்கியதிலிருந்து மூச்சு விடாம்ல் தொடர்ந்து பேசினார் என்றே கூற வேண்டும் . இடையில் ஒரு சொட்டுத்க் தண்ணீர் கூடப் பருகவில்ல என்பதும் சிறப்பு. ஈடுபாட்டுடன் செய்த ஆராய்ச்சியின் வெளிப்பாடு அது. அப்படித்தான் இருக்க முடியும். பெசியது முழுவதும் ஆங்கிலத்தில். ஸ்லைடு காட்சி விளக்கங்களுடன். வினாத்துதொடுத்த பேராசிரியருக்கு இணையான நானா அறிவியல் அறிவாற்றல் முனவர் பட்டம் பெறப்போகு - பெற்றுவிட்ட சுகந்திக்கும் இர்ந்ததை கண்கூடாகக் காண முடிந்தது.

கேள்வி கேட்கும்முன்னரேயே பதில் சொல்லத்துவங்கியதையும் கூட்டம் ரசித்தது. புற்று நோய்ச் சிகிச்சை போன்றவற்றிற்கும் இந்த ஆராய்ச்சி உதவும்.

நானோ என்றால் மிக நுண்ணிய என்று கொள்ளலாம். திப்பு சுல்தான் வாள் தயாரிப்பில், அணிகலன்கள் தயாரிப்பதில் எல்லாம் அந்தக் காலத்திலேயே இந்த அறிவியல் முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. பாரதி புத்தகாலயம் 25+25 விலையில் இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

வெர்டிபைடு டைஸ் வாங்கிப் பத்தித்தால்ம் வீட்டில் யாரும் வழுக்கி விழ மாட்டார்கள், எனவே அதனைப் பயன் படுத்தினோம் அண்மையில் வேடு கட்டும் பொழுது. இப்பொழுது அதை விடப் பாதுகாப்புத் தரக்கூடிய வெர்டிபடு நானோ டைல்ஸ் வந்துவிட்டது. இனிமேல் எல்லாத் துறையிலும் நானோதான் முக்கிய அங்கம் வகிக்கப் போகின்றது.

நானோ டெக்னாலஜி குறித்து 2007ல் சுஜாதா எழுதிய கட்டுரைகளில் இடம் பெற்றவை உண்மைகள் இன்று உண்மையாகி வருகின்றன. அதுவும் உயிர்மை வெளியீடுதான்.. நானோ புராணத்த இத்துடன் விடுத்து ஜெயந்தி சங்கரின் சீனக் கவிதைகளுக்கு வருவோம்..

http://rssairam.blogspot.com/2012/02/blog-post_3843.html
சீனாவின் சித்தர்கள் எழுவரும் முதல்வரின் கவிதை ஒன்றும்!

http://rssairam.blogspot.com/2012/02/blog-post_05.html
சு ய நில இயல் கோட்பாடு (மனித வடிவை ஆணியால் அடித்த பூமி இது!)
மற்றவர்கள் காண இயலாது மலை முகட்டை
விண்வெளியில் உலாவரும் பறவைகள் போல்!


htp://www.blogger.com/post-edit.g?blogID=5790092376734116945&postID=
2508506724644760421
சீன உரை மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகள்

!http://rssairam.blogspot.com/2012/01/blog-post_181.html
நிலவோடு தனித்தருந்தும் மதுக்கோப்பை!

iமேலே உள்ளவை எனது மொழி பெயர்ப்புகள்.படித்தவர்கள் மொழி பெயர்ப்பின் அருமை இந்தப்புத்தகத்தை வாங்கியபின்னரே தெரிந்தது.

மிதந்திடும் சுய பிரதிமைகளைப் படிக்கத் துவங்கியுள்ளேன். அட்டைப்படம் புத்தகம் வாங்குவதற்கு முன்பே உயிர்மையிலிருந்து எடுத்து வைத்திருந்தேன். வாங்குவதற்கு முன்னர் படைப்பாளி சிங்கப்பூரிலிருப்பதால், சீனம் தெரிந்திருந்து நேரடியான மொழி பெயர்ப்போ என்ற ஐயப்பாடு இருந்தது. வாங்கியபின் ஆங்கிலம் மூலமாகத் தமிழுக்கு வந்தது என்பது புரிந்தது.

ஜெயந்தி சங்கர் அறிமுகம்

மதுரையில் பிறந்தவர். இயற்பியல் பட்டம் பெற்றவர்.1995 லிருந்து எழுத்துப் பணியில் ஈடுபாடு.சிறுகதை, கட்டுரை, குறுநாவல், நாவல்கள் என மொத்தம் 13 நூல்களை எழுதியுள்ளார். ஏராளமான பருசுகளும் வாங்கியுள்ளார். மொத்தத்தில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் பக்கம் உலகத்தமிழர்களின் பார்வையைத் திருப்பி வருகின்ற வல்லமையை இவரது படைப்புக்கள் பெற்றுள்ளன. 1990 முதல் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றார். கணவ்ர் பொறியாளர். இரு ஆண் வாரிசுகள்

முன்னுரை, சீன முடியாட்சிகளின் கால அட்டவணை, சீனக் கவித உலகம் -சிறு அறிமுகம், பழங்கவித, செவ்வியல் கவிதை, டாங் காலக் கவிதைகள், டாங் காலக் கவிதை வரிகள் அறிமுகம், டங் முடியாட்சிக்குப் பிற்பட்ட கவிதைகள், மொழி பெயர்ர்க்கும் பொழுது ஏற்பட்ட சவால்கள், ஒரே கவிதைக்கு ஆங்கிலத்தில் பல்வேறு மொழி பெயர்ப்புள், பாடு பொருட்கள்,சம கால மரபுக் கவிதைகள்,நவீன சீனக் கவிதகள், பெண்கவிஞர்கள் அறிமுகம், சீனா, சீனாவின் சிறுபான்மையோர், புலம் பெயர் நாட்டில், ஹாங்காங், தாய்வான், திபெத், மலேசியச, சிங்கப்பூர் சில சீனக் கவிதைகள், சில ஆங்கிலக் கவிதைகள், கவித ந்ழுதத் துணைநின்ற ஆங்கில மூலங்களின் பட்டியல்கள் எனகவிதைப் புத்தகம் அட்டகாசமாக இருக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக உதவி செய்தோருக்கு நூலக் காணிக்கையாக்கியுள்லார். காணிக்கை என்பது பழக்கத்தி வந்து விட்ட வார்த்ததை. தமிழக நீதிமன்றங்களில் மை லார்டு போவதற்குப் பல ஆண்டுகள் ஆயின, இந்த காணிக்க என்ற சொல் இந்த இடத்தில் பயன் படுத்துவது நீங்கவே நீங்காத என்று யோசிப்பேன். சில புதுமை விரும்பிகள் மட்டும் அதனைச் செய்து வருகின்றனர். அப்பட்டியலோடு ஜெயந்தி சங்கரும் இணந்துள்ளார்.

ஆம! சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்துக்கும்

அதன் அதன் அதிகாரிகளான நண்பர்கள்

புஷ்பலதா, மணியம், நிர்மலா,

மலர்விழி மற்றும்ம் அனைத்து வுஉலக அதிகாரிகளான்

நண்பர்கள் புஷ்பலதா, மணியம், நிர்மலா,

மலர்விழி தாமஸ். மூர்த்தி

மற்றும் அனைத்து நூலக அதிகாரிகளுக்கும்

நேசமுடன் இந்நூல்

நடைமுறைச் சம்பிரதாயஙளுக்காக நன்றிக்குரியோர் என்று தெரிந்தோர் பட்டியல் போடாமையே இவரது நேர்கொண்ட இயல்பான வாழ்க்கைக்குச் சான்று காட்டுகின்றது.

இந்குள்ள அரசியல் வாதிகள் பொதுப்பணத்தில் உருவானவற்றைத் திறந்து வைக்கும் பொழுது ”இதனை நாட்டிற்கு அர்ப்பணிகின்றேன்” என்று பேசிடும் போதும், அதற்குச் சுற்றிலுமுள்ள அதிகாரிகள் கூட்டமும், அரசியல் ஆதரவாளர்களும் கைதட்டும் போதும் எரிச்சலாக இருக்கும்.

என் மனைவிக்கும் மக்களுக்கும் ஆடை அணிகலன்கள் வாந்கிக் கொடுத்தேன், பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பவில்லை என்பதற்க்கெல்லாம் விளம்பரங்கள் கொடுத்தால் எவ்வளவு அசிஙமோ அதைவிட அசிஙமானது அரசு கொடுக்கும் விளம்பரங்கள். தமிழக அரசு என்று ஒரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. இப்பொழுது வருகின்றதா என்று தெரியாது. அது போன்று காலாண்டிதழ் நடத்தினால் போதும் இந்த அரசாங்கம். அந்தந்த தொகுதிகளுக்குரிய பணிகளின் தன்மைகளை மட்டும் குறித்தால் போதும். எஞ்ய பொது விஷயங்கள் அப்படியே இருக்கட்டும்.

ஆளுங் கட்சிப் பத்திரிக்கையானாலும் சரி, அவர்களை ஆதரிக்கும் பத்திரிக்கைகளானாலும் சரி எந்த விளம்பரங்களுமே இடம் பெறக் கூடாது. மேலும் தமிழக அரசு நடத்தும் பத்திரிக்கக்கு மக்களிடமிருந்து விளம்பரங்களையும் கோரிப் பெறலாம்.

அந்தந்தத் தொகுதி மக்களிடம் நேரடியாக தமிழக அரசின் காலாண்டிதழைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகளே எற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழரசு சுதந்திரமாக இயங்கிட, அரசு மற்றும் கல்வி நிறுவனங்களிடம் ஒவ்வொரு மாதமும் ஆஸ்சிரியர் பொறுப்பை ஒப்படைத்திடல் வேண்டும். அவர்களது பணிகளில் ஒன்றாக இது ஆக்கப்பட வேண்டும். இதற்கென்று சம்பளம் கொடுக்க்க் கூடாது.

அரசிற்கு எவ்வளவு பணம் மிச்சமாகும்? ஆளும் அரசு ஊழல் அரசு என்று ஆள்வோரை மட்டும் திட்டுவார்களாம். ஆனால், அவர்கள் விளம்பரங்கள் மூலம் வழங்கும் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்வார்களாம். இது எந்த ஊர் நியாயம்?

நான் மட்டும் புத்த வெளியீட்டாளராக இருந்தால், பதிப்பகச்ங்களில் நேரில் வந்து புத்தகங்களை வாங்குவோருக்கு விற்றுத் தர்ம் வியாபாரிகளுக்குக் கொடுக்கும் கமிஷன் போக மீதியத்தான் வாங்குவேன். வியாபாரிகளுக்கு 22% 35% 40% என்று தரம் போல் கொடுக்கப்படுகின்றது. இது ஒரு விரிவான பகுதி. தனியாகப் பின்னர் எழுதுவேன் மூலதம் இரட்டிப்பாகக் கிடைக்கும் வியாபாரம். காலம் கொஞ்சம் ஆகும் பிழைக்கத்தெரியாத மூல்தனக்காரருக்கு அவ்வளவுதான்.

தமிழில் சீனக் கவிதைகள் முழுமையான வரலாற்றுடன் தொகுக்கப்பட்டது இதுதான் முதல் முறை என்று எண்ணுகின்றேன்.

இதயத்தினின்றும் கவிதை என்னும் தலைப்பில் இவர் மொழி பெயர்த கவிதையயை , நான் இதய ஒலி என்னும் தலைப்பிட்டு மொழி பெயர்த்துள்ளேன். எனது கவிதை மொழியாக்கம் அவர்க்குப் பக்கத்தில் நிற்க முடியாது. ஆனால் உட் கருத்தைப் புரிந்துதான் மொழி பெயர்த்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சியே.

சீன உரை மற்றும் ஆங்கிலம் மொழிபெயர்ப்புகள்- என்ற எனது பதிவுகளுக்கான முழு விளக்கமும் இவரது கவிதைப் புத்தகத்தில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. சீனக் கவிதைகளில் உள்ள சிக்கல்களைத் தொட்டிருக்கின்றேன் என்பதிலும் மகிழ்ச்சி.

மனித வடிவை ஆணியால் அடித்த பூமி இது! என்ற தலைப்பில் பதிவு செய்த கவிதை சிலருக்குப் பிடித்திருந்தது..

தங்களது புத்தகத்தில் முதலில் இடம் பெற்றுள்ள பழங்கவிதை உலகம் முழுவதும் பிரச்சினை ஒன்றுதான் என்பதச் சுட்டுகின்றது.


யாவ் மற்றும் ஷுன் ஆகியோரது புராண காத்திலிருந்து வழி வ்ழி மிகப் பிரபலமான பாடல்:-

நாம் சூரியோதத்தில் வேலை செய்வோம்
நாம் சூரிய்ஸ்தமனத்தில் ஓய்வெடுப்போம்
குடிக்கவென்று கிணறு வெட்டிடுவோம்
சாப்பிடவெண்று நிலத்தை உழுதிடுவோம்
அரசனால் நமக்கு என்ன பயன்?

இந்தப் பாடல் வரிகள் எனக்கு தமிழகத்திர்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென, சுதந்திரற்குப்பின் அமைந்த முதல் சட்டசபையில் அங்கம் வகித்த ப.ஜீவானந்தம் பாடிய பாடலினை நினைவூட்டியது.

”காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழத்தோமடா-என்தோழனே
பசையற்றுப் போனோமடா”

திரைத்துறையில் காலூன்றிய பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகளும் மனதில் நிழலாடின.

சும்மா கிடந்த நிலத்தக் கொத்தி
சோம்பல் இல்லாமல் ஏர்நடத்தி
கம்மாக்கரையை உசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்ப்பாப் பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளைஞ்சிருக்கு
வரப்பு உள்ள மறஞ்சிருக்கு -என்று காதலனும்
காடு வெளிஞ்சென்ன மச்சாந்நமக்கு
கையும் காலும் தானே மிச்சம் -என்று காதலியும்
காடு விளயட்டும் பெண்னே-நமக்கு
காலம் இருக்குது பின்னே-என்று காதலனும்
பாடுவதாக அமைத்தான்.
ஆனால், நம்பிக்கை விதை ஊன்றினான்.

பட்டுக்கோட்டையைப் போல் காதல் பாட்டில் சமூகப் பிரச்சினையை யாரும் கொண்டுவர முடியாது என்று இயக்குநராக இருந்தபோது மணிவண்ணன் சொல்கின்றார். அருகிலிருந்த ஒருவர் இந்தா எழுதிக்கொள் பாட்டை என்று பாட்டுகின்றான் ஒரு பாட்டு.

கைகளிலே வலுவிருக்கு
கம்மாய்க்கரை நிலமிருக்கு
மண்ணை நம்பி விதைவிதப்போம்-கண்ணம்மா
அது கொடுக்கப்போற பலன் நமக்கு-பொன்னையா
என்ற நம்பிக்கையத் தருகின்ற பாடலைப் பாடினான்.

அவன்தான் கவிஞன் ஜீவபாரதி. அந்தப் பாடலே மணிவண்ணனின் படத்தில் டைட்டில் சாங்காகிவிட்டது. இணை இயக்குநர் பதவியையும் பெற்றுத்தந்தது ஏழெட்டுப்படங்களில் பணியாற்றிய கவிஞன், சில திரைப்படப் பாடல்களையும் எழுதினான். அமரும் இருக்கைகளில் பணம் போடும் தயாரிப்பாளர் இருந்தால் கூட கம்பீரமாகவே அமர்ந்திருப்பான். அமர்ந்துள்ள இருக்கையின் முன்னால் வந்து கூனிக் குறுகி அமர்வது அல்லது எழுந்து கைகட்டி நிற்பது என்ற வழக்கமெல்லாம் அவனிடம் கிடையாது. திரைத்துறை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டபின் தானாகவே வெளியேறிவிட்டான். மணிவண்ணனும் இயக்குநராக இருப்பதைவிட நடிப்பதே லாபம் என்று நடிக்கச் சென்று விட்டார். .


சீனக் கவிதைகளை மொழிபெயர்ப்பது மிகமிகக் கடினம். சிரமமான பணியினை கவிதைப் பொருளை உள்வாங்கிக் கொண்டு அட்டகாசமாக மொழியாக்கம் செய்திருப்பது தமிழுக்கு அவர் செய்த பெருந்தொண்டு உரிய விளம்பரம் செய்தால் பல பதிப்புகள் வெளியிடும் வாய்ப்புகள் ஒளிமயமாக இருக்கின்றது , உயிர்மைக்கு.

நான் வாங்கிய கடையிலேயே, அப்படி ஒரு புத்தகம் வரவில்லையே என்றனர். 200 ரூபாய் வில என்று சொன்னவுடன் வேலபார்த்த பையன் இதுவா சார் என்று எடுத்து வந்து தந்தான்.

இத்துடன், சுஜாதாவின் நானோ டெக்னாலஜி, ஓசுரிலிருந்து வெளிவரும் புது விசை என்ற காலாண்டிதழ் (34 ), த் ச்ண்டே இந்தியன்வார இதழ். பெங்களூருவிலிருந்து தனிச் சுற்றுக்கு மட்டும் என்று பாட்ட சூப்பரான காலாண்டிதழ் “சிற்றேடு” (5),
ஆகியவற்றை வாங்கிவிட்டு நடையைக் கட்டினேன் வீடு நோக்கி. ஷேர் ஆட்டோ சவுகரியமாய்க் கிடைகின்றது, சென்னையில்.

சீனாவின் சிறுபான்மையினர் என்ற பகுதியில், கவிஞர்- யிதாம் ட்செரிங் (1933-2004) எழுதிய கவிதை!

வழி

சாலையின் மீது குளம்புகளின் வேகத்தை ரசித்திடுவேன்,
பாலையில் ஒட்டகங்கள் சுமந்திடும் பெரும்பாரத்தை வியந்திடுவேன்,
நுரைபனி போர்த்திய மலைக்கழுகுகளை பயமுறுத்திடும்,
கணவாயிலிருந்து பாய்ந்திடும் முரட்டுப்புலியைப் போல காட்டெருது நாக்கை
நீட்டிக்கொண்டிருப்பதப் பார்க்கிறேன்!

கஷ்டப்ப்டுவோர்களது பாதத்தின் கீழ் எப்போதும் பாதையுண்டு!
நீரில் பாய்ந்திடும் ஒருவரைப் பார்த்து
மிக உயர்வாகத் தயவு செய்து எண்ணாதீர்கள்:
கடலாழ்த்தின் பவளங்கள் என் மூதாதையரின் கழுத்தணிகள்!

ஆங்கில மொழி பெயர்ப்பாளர் :YANGDON DHNDUP

பவளங்கள் என்று எழுதியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. கழகத் தமிழ் அகராதியிலேயே, பவழம்-பவளம் என்று பொருள் தந்துள்ளது. இஙுகு வார, மாத, தினசரி, பாடப் புத்தகங்களிலும் தவறாகவே அச்சாகின்றன. இளமையில் தமிழாசிரியர் ஒருவரிடம் பழனி அல்லது பழ்நி எது சரி என்று கேட்டபோது இரண்டுமே சரி என்றார். கோவில்/கோயில் குழப்பம் தருகின்றது. சரியானதச் சொல்லித் தர வேண்ட்டாமா?


ஆங்கில மொழி பெயர்ப்பாளர் :YANGDON DHNDUP

பவளங்கள் என்று எழுதியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. கழகத் தமிழ் அகராதியிலேயே, பவழம்-பவளம் என்று பொருள் தந்துள்ளது. இஙுகு வார, மாத, தினசரி, பாடப் புத்தகங்களிலும் தவறாகவே அச்சாகின்றன. இளமையில் தமிழாசிரியர் ஒருவரிடம் பழனி அல்லது பழ்நி எது சரி என்று கேட்டபோது இரண்டுமே சரி என்றார். கோவில்/கோயில் குழப்பம் தருகின்றது. சரியானதச் சொல்லித் தர வேண்டாமா?

அண்மையில் குழந்தைகள் கலைகளஞ்சியம், பொதுக் கலக் களஞ்சியம் டிவிடி வெளியிட்டுள்ளது. வாங்கியுள்ளேன்.இன்னும் பார்க்கவில்லல் ஆங்கிலம் தமிழ் அகராதி 400 விலையுள்ளது 300க்குக் கிடைகிறது. நல்ல தாளில் அட்டகாசமாக உள்ளது.ஆனால் சென்னைப் பல்கலைகழகம் சென்றால்தான் கிடைக்கும்

சென்னைப் பல்கலைக்கழக வளாகம் என்று இரு இடங்கள் உள்ளன மெரீனா பீச்சில்! தெரியாதவர்களுக்குப் பெருங்குழப்பமே!

தமிழ் வளர்ச்சிக் கழகம், திருவள்ளுவர் சிலை எதிரில், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 600005 என்று ஒரு முகவரி வேண்டும். அதாவது திருவள்ளுவர் சிலை எதிரே என்பது தமிழ் வளர்ச்சிக் கழகத்தை கண்டுபடித்திட உபயோகமாய் இருக்கும்.

ஒரு விரலில்தான் இவற்றை எழுத முடியும் ஏனெனில் த்ட்டச்சு தெரியாது. எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நம்மில் பலரால் சீன மொழியைக் கற்றுக் கொள்ள முடியாது. ஆங்கிலமும் எல்லோருக்கும் தெரியாது. ஆனால் இவை எல்லாம் குறையில்லை. மிதந்திடும் சுய பிரதிமைகளை வசதியுள்ளவர்கள் விலைக்கு வாங்கிப் படிக்க வேண்டும்..


திரைப்படத்திற்குச் செல்லும் செலவுதான் ஆகும். அவசியம் வாங்குங்கள் எல்லோரும். நான் தற்பொழுதுதான் வாங்கியுள்ளேன். இனிமேல்தான் ஒவ்வொரு கவிதையாகப் படிக்க வேண்டும். தமிழ் இலக்கணம் படிக்காதவர்கள் கவலையே பட வேண்டாம். உள்ளுணர்வுகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை, மிதந்திடும் சுய பிரதிமைகள் கற்றுக் கொடுக்கின்றது.


மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விரும்பி

வரவேற்ற புதுமைப் பெண்கள் பட்டியலில்

முக்கிய இடம் உண்டு.தங்களுக்கு !


சீனப் படைப்புக்களில் முக்கியமானதைத் தமிழுக்கு மொழி பெயருங்கள்; ய சாகித்தியஅகடமி விருது உஙளுக்குக் கிடைக்கட்டும். சீன மொழியிலிருந்து நேரடியாக மொழி பெயர்த்தால்தான் கிடைக்குமா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் சீனமும் வசமாகும் தஙகளுக்கு!..

ஜெயந்தி சங்கர் அவர்களே வாழிய நீடு!

என்னைக் கேட்டால் இதற்கே கொடுக்கலாம்.
மறக்காமல் விண்ணப்பித்துவிடுங்கள்.

ஏனெனில் அவர்கள் எப்படித் தேர்ந்த்டுப்பார்கள்
என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நேதாஜிக்கு - தலைவர் அவர்களே - என்று தலைவர்களாலேயே அழைக்கப்பட்ட வீரனுக்கு இன்னும் பாரத ரத்னா வழங்கப்படவில்ல!

என்னைப் பற்றி

ஜெயந்தி சங்கர் தன் வாழ்விடத்தின் இருப்பையும் வாழ்வையும் சிறுகதைகளாகவும் நெடும்புனைவுகளாகவும் எழுவதன் மூலம் அவற்றை உலக அனுபவங்களாக்குவார். எளிய நிகழ்வுகளையும் பிரபஞ்ச வாழ்வனுபவமாக உணர வைப்பதே இவரது எழுத்தின் வெற்றி. தனது சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து புனைவுகளாக சிருஷ்டிக்கும் இவரின் ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் ஒரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. சிறுவயது இடப்பெயர்வுகளூடாக கற்றதும் இழந்ததுமான அனுபவம் வாய்க்கப் பெற்றுள்ள இவர் பிற கலாசாரங்கள் மீது, குறிப்பாக சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டுள்ளார். சமீபகாலங்களில் பல்வேறு மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வரும் இவர் 1995 முதல் எழுதி வரும் இவரது ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் கவனிக்கத் தகுந்தவை. நிறைய சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள இவர் எண்ணற்ற பரிசுகளும் வாங்கியுள்ளார். 2006ஆம் வருடம் பிரசுரமான ‘நியாயங்கள் பொதுவானவை’ என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த ‘அரிமா சக்தி விருது 2006′ல் சிறப்புப் பரிசு பெற்றது. உலகளாவிய பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றுள்ள இவர் சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட இவரின் எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறுபவர். சில சிறுகதைத் தொகுப்புகளிலும் இவரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது சிறுகதைகள் வேற்று மொழியில், குறிப்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்ப்பும் காணவிருக்கின்றன. அதன் துவக்கமாக பாரதிய வித்யா பவனின் நவ்னீத் ஹிந்தி டைஜஸ்ட்டில் ஜனவரி 2008 இதழில் இவரின் ‘திரிசங்கு’ சிறுகதை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்பாக இவர் எழுதித் தொகுத்து 2007ல் அச்சான ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’ நூலுக்கு ‘நல்லி – திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருது 2009′ அளிக்கப் பட்டது. ‘சிங்கப்பூர் இலக்கிய விருது – 2008′ல் இவரது சிறுகதைத் தொகுப்பான ‘பின் சீட்’ தேர்வானது. கல்கி 28-12-08ல் பிரசுரமான சிறுகதை ‘புதிய அவதாரம்’ இலக்கியச் சிந்தனை அமைப்பினால் 2008 டிஸம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ளது. 2009ல் ‘மனப்பிரிகை’ நாவலுக்கு – அரிமா சக்தி 2008 (சிறப்பு) விருது அளிக்கப்பட்டது.


0 comments:

Post a Comment

Kindly post a comment.