Saturday, February 18, 2012

கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்.

கடந்த 13.02.2012 முதல் 15.02.2012 வரையில் எமது பள்ளி இணைந்துள்ள கெங்கபிராம்பட்டி குறுவள மையத்தில் கிராமக் கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
அதில் ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சிறப்புக் கருத்தாளராகக் கலந்துக்கொண்டு பயிற்சி அளித்தார்.
முன்னதாக நடைபெற்ற பயிற்சி துவக்க விழாவில் மைய பொறுப்பு ஆசிரியப் பயிற்றுநர் வி. சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார். கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா செல்வம் தலைமை தாங்கினார். உப்பாரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வி.சிவலிங்கம், கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கி. மாதேஸ் உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி. வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மைய உதவி ஒருங்கிணைப்பாளர் பி.சிவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, குழந்தைகளின் உரிமைகள், அரசு பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி, நலவாழ்வு,சத்துணவு, மற்றும் சுகாதாரம் பற்றியும் கிராமக் கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் முக்கியப் பணிகள், பள்ளிகளுக்கு அவர்கள் செய்ய வேண்டிய உதவிகள் பற்றியும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நிகழ்வுகளின் இடையே பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகள் ஆகியன நடத்திக் காட்டப்பட்டது. அதில் ஜோதிநகர் பள்ளி மாணவர்களால் நடத்திக் காட்டப்பட்ட DIFFERENCE BETWEEN TRADITIONAL AND ACTIVITY LEARNING METHODOLOGY CLASS ROOM.என்ற நிகழ்ச்சியும் மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பான ஆங்கில மற்றும் தமிழ் பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. அரசு பள்ளி மாணவர்களாலும் எளிமையாக ஆங்கிலத்தில் உரையாட முடியும் என்பதை நிரூபிப்பதாய் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இப்பயிற்சி முகாமில் 12 பள்ளிகளைச் சேர்ந்த கிராமக் கல்விக் குழுத் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
--
Posted By கவி.செங்குட்டுவன் @ செ.இராஜேந்திரன் to கல்விக் கோயில் at 2/17/2012 10:05:00 AM

வலைப்பு அன்பர்களுக்கு தஙள் ஊர் எங்கிருக்கின்றது என்று எப்படித் தெரியும்? அதனைத் தெரிந்துகொள்ள வட்டம், மாட்டத்தையும் குறிப்பிடுங்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் என்று கருதுகின்றேன். சரிதானே?

கெங்கபிராம்பட்டி, உப்பாரப்பட்டி (அஞ்சல்), ஊத்தங்கரை (வட்டம்) - 635 207 ...

DIFFERENCE BETWEEN TRADITIONAL AND ACTIVITY LEARNING METHODOLOGY CLASS ரூம்- என்ற நிகழ்ச்சி குறித்து விளக்கமாகத் தமிழில் சொன்னால் எல்லோருமே பயன்பெறலாம். உஙகள் ஊரின் பெயரிலேயே ஒரு வலைப்பூ அல்லது இணையதளமும் (கூட்டாக) ஆரம்பித்து கிராம அளவில் முதல் முயற்சி என்ற பெருமையும் அடையலாமே?

உங்கள் நல்ல முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள். ஆங்கிலத்தில் பேச-எழுதப் சிறப்புப் பயிற்சியும் கொடுஙகள்.

சென்னைப் பல்கலக் கழகத்தில் சிறுவர்கள் கலைகளஞ்சியம், பொதுக் கலைக்களஞியம் டிவிடி யாகப் போட்டிருக்கின்றனர். விலை 250/- 20 தொகுப்புக்கள் அடங்கியது. ஒரே ஒரு புத்தகம்தான் உள்ளதால் இந்த முயற்சி.அட்டகாசமான ஆங்கிலம்-தமிழ் அகராதி 400 விலையுள்ளது 300 க்குக் கிடைகின்றது.மெரீனா பீச்சில் திருவள்ளுவர் சிலைக்கு எதிரில் உள்ள தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் கிடைக்கும் நேரடியாகச் சென்று வாங்கினால் சலுகைகள் தரக்கூடும். 12 பள்ளி மாணாக்கர்களுக்குமே வாங்கிட வழி செய்யுங்கள். நீண்ட ஆண்டுகளுக்குப்பின் பல்கலை செய்துள்ள நல்ல காரியம் இது. .0 comments:

Post a Comment

Kindly post a comment.