Monday, February 20, 2012

சென்னைப்பட்டணத்திற்குள் படையெடுத்த பசுக்கள்கூட்டமும் மாநகர மேயர் அதைச் சமாளித்தவிதமும் !

எனது ஊர் திருவாவடுதுறை. இங்குதான்  முதல் சைவத் திருமடம் நமச்சிவாய மூர்த்தியால் தோற்றுவிக்கப்பட்டது. சரஸ்வதி நூலகமும் அவ்வாறே!.

இங்கே அருகில் உள்ள.ஆற்றங்கரையில்  உள்ள து வெள்ளை வேம்பு மாரியம்மன் கோவிலும் பிரசித்தம். ஏனெனில் அங்குள்ள வேப்ப மர இலைகள்  அனைத்தும் வெள்ளையாக இருக்கும். ஓரிரு பச்சை இலைகளும் மரத்தின் அடிப்பகுதியில் மட்டும் காணப்படும்.  பார்பதற்கு ஏப்ரல், மே மாதங்கள் சிறந்தவை.

பூலோகக் கயிலாயம் என்ற பெயரும் திருவாவடுதுறைக்கு உண்டு. ஏனெனில் சித்தர் திருமூலர் சமாதியான இடம் . இன்றும் உயிர் வாழ்வதாக ஐதீகம். மற்றப்படி திருமடத்தப்பற்றிப் பெரிதாகச் சொல்ல வேண்டுமென்றால் நல்லவையும் , அல்லவையும் நிறைய உண்டு. அவற்றை இன்னொரு முறை பார்க்கலாம்.

இங்குள்ள கால்நடைகள் என்னை வயதில் மூத்த்வளாகக் கருதி   முத்துச் செல்வி என்று பெயரிட்டு அழைத்தார்கள் .நாட்டு நடப்புக்களையும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.  ஏன்னெனில். என் ஒருத்திக்குத்தான் படிக்கத் தெரியும். செய்திகளக் செவி வழியாகக் கேட்கும் வசதி இங்கு  இல்லை. பேப்பர்களும் அவ்வப்பொழுது  மனிதர்கள்  பயன்படுத்திவிட்டு  துக்கி எறிவதால் காற்றில் பறந்து வருபவைதான்,

பட்டணத்தில் மாடுகள் சினிமா வால் போஸ்டுகளாக ஒட்டப்படும் பேப்பர்களயும், பிளாஸ்டிக் கழிவுகளையும்தான் தின்னுகின்றன இன்றையப்  பேப்பரில் படித்த செய்தி மனதிற்குப் ப்ரும் வேதனையைத் தந்தது.. அவை எப்படி ஜீரணமாகும்.? பேப்பமுழுவதும் கூழாகும் அளவிற்கு மாடுகள் அசை போட்டு விடுமா? அல்லது வயிற்ரின் உட்பகுதிக்குள் ஒட்டிக் கொள்ளுமா? பிளாஸ்டிக் பொருட்கள் வயிற்றில் ஆங்காங்கே அடைத்துக் கொண்டால் சாணி எப்படிப் போடும்.?

இங்காவது அரை குறையாக நல்ல உணவு கிடைக்கின்றது. பட்டணத்து மாடுகள் அனைத்தையும் தம்பி பசுபதியை அனுப்பி ஏப்ரல் மாதத்திற்குள் அழைத்து வரச் செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டது. அன்று இந்தச் செய்திகளை ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகளிடம் கொள்கை பரப்புச் செய்லாளர் லட்சுமி மூலமாகச் சேர்த்து வேண்டும்  முடிவெடுத்தது.

உலகம் முழுவதிலிருந்துவரும் கோடிக்கணக்கான  ஐயப்ப பக்தர்களை மகர ஜோதி வழிபாடு என்னும் பெயரில் ஏமாற்றிவந்தது வெட்ட வெளிச்சமானது கேரள நீதிமன்றத்தின் ஆணையால். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்ப்பட்டும்விட்டது தேவஸ்தன் நிர்வாகத்தால். அப்படியும் செல்வோர் கூட்டம் குறைந்தபாடிலலை.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற முதல் வரியை மறந்து விட்டனர் மாந்தர்கள். பெற்றோரைப் புறக்கணித்துவிட்டு ( வீடுகளில் ஆடுமாடுகளைப் போல் நடத்திக் கொண்டு  ) , அல்லது முதியோர் இல்லங்களில் தள்ளிவிட்டு விட்டு  ஆலயந் தொழச் செய்வதால் என்ன லாபம்.?

கொ.ப.செ. லட்சுமி மூச்சிறைகக ஓடி வந்தது. நமக்குத்தரும் உணவை மடம் நிறுத்திவிடப் போகின்றதாம் வரும் மாதத்திலிருந்து என்றும், பரந்து விரிந்து கிடக்கும் வெற்று நிலத்தில் உள்ள புற்களையும், கழிவுப்பொருட்களையும் உண்டு மாடுகள் பிழைத்துக் கொள்ளும் என்று மட நிர்வாகம் முடிவெடுத்து விட்டதாவும் சொன்னது.

கையிலிருந்த பேப்பரைப் புரட்டிய முத்து லட்சுமியின் கண்ணில் சென்னச் செய்தி ஒன்று கண்ணில் பட்டது, பேப்பர், பிளாஸ்டிக்குகளைத் தின்று வந்த சென்னை மாடுகளுக்கு இப்பொழுது அதிர்ஷ்ட காலமாம்.ஹோட்டலில்  இருந்து கிடைக்கும் சாப்பாடு, இட்லி, தோசை போன்ற உணவு வகைகள், டீக்கடைகளி இருந்து போடப்படும் பிஸ்கட்டுகள் தாராளமாகக் கிடைக்கின்றனவாம்.

 பட்டணத்தில்  தெருவுக்குத்தெரு 24 மணி நேர ஆஸ்பத்திரிகள், பிரைவேட் கிளினுக்குகள் அதிகமாக உள்ளனவாம். கல்யாண மண்டபங்களுக்கும் குறைவில்லையாம். போதாக் குறைக்கு கையேந்தி பவன்களுக்கும் குறைவில்லயாம்.

 பட்டணத்து வாசிகளுக்கு உடலுழைப்புக் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டதாலும், ஆண்-பேண் இனச்செர்க்கை கால நேரம் பார்க்காமல் மிதமிஞ்சிப் போனதாலும் பெரும்பாலும் நோயாளிகளாகிவிட்டனராம். அரசு தெருவுக்குத் தெரு திறந்துவிட்ட சாராயக் கடைகளாலும் இந்த நோய்கள் அதிகரிக்கின்றனவாம்.

பிளட் பிரஸ், சுகர் ஒருவரி ஒருவர் பார்த்துக் கொள்ளும் போதே பேசத் துவங்குவதே  உனது பி.பி. எவ்வளவு சுகர் எவ்வளவு என்பதுதானாம் ) மூட்டுவலி இல்லத வீடுகளெ கிடையாதாம்.

பெரிய பெரிய ஹோட்டல்களிலும் ,கல்யாண மண்டபங்களிலும்,, சிறிய, பெரிய ஹோட்டல்களிலும் மிச்சமாகும் உணவு வகைகளத் தாராளமாகக்
கால்நடைகளுக்கு வழங்குகின்றனராம். எனவே நாம் எல்லொறும் பட்டணத்திற்குப் போய் விடலாம் என்று யோசனை  சொன்னது. தீர்மானமானது. அனைவரது ஒப்புதலையும் பெற்றது.

பட்ணத்திற்குச் செல்லும் வழி எனக்கு நன்கு தெரியும் என்று கொ.ப.செ. தம்பட்டம் அடித்துக் கொண்டது. மேலும் புத்துணர்ச்சி யூட்டுவதற்காக யானைகளை ஒறிடத்திற்குக் கொண்டு செலவது போல் நம்மையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடலாம் என்றும். கொக்கரித்தது. நமக்கு உதவிட அரசியல் கட்சிகள் போட்டி போட்டுகொண்டு வருவர் என்றும் கொ.ப.செ. உறுதி அளித்தது.


சாதுவான கவுரி அதெல்லாம் வேண்டாம் பசுவினங்களைப் பராமக்கும் இல்லங்கள் பல உள்ளன. அவர்களில் ஒருவரைப்பார்த்துப் பேசினால் போது,ம் என்று பயந்து கொண்டே கூறியது.

சென்னைக் கால்நடைகளை திருவாவடுதுறக்கு அழைத்து வர முடிவு செதிருந்த பசுக்கள் வழி விடும் விநாயகர வணங்கிவிட்டு, கூட்டம் கூட்டமாக  செல்வதை, திருவாவடுதுறையிலிருந்து மயிலாடுதுறவரை   இரு புறங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

திருமடத்தில் உள்ள மடாதிபதியும் மனிதர்தானே அவரை ஏன் காலில் விழுந்து வழங்கி அருளாசி பெறுகிறோம் என்று வினோத் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத்தெரியாத கும்பகோணம் கோமளவல்லி தன் மகனின் வாயைப் பொத்தினாள்.


சென்னைக்கு வந்து சேர்ந்த பசுக்கள் கூட்டம் பேப்பரைத் தின்று கொண்டிருக்கும் மாட்டினைத்தான் முதலில் பார்த்தன. இவளுக்கு அவள் எழுந்து உண்பாள் என்று அனுபசாலிப் பசு ஒன்று பின்னாலிருந்து முணு முணுத்தது.

பசி தாங்க முடியாதா பசுக்கள் தனிதனியாகப் பிரிந்து கிடைத்ததைதின்று சென்னை நகரை வலம் வரம் துவங்கின. போக்குவரத்துக்கள் பாதிப்புக்குள்ளாயின,

எங்கெங்கு காணினும் பசுக்களடா என்று சட்டசபயில் எம்.எல்.ஏக்கள் பாட ஆரம்பித்தனர். தமிழக முதல்வர் சென்னை மாநகராட்சி மேயர் சைதைத் துரை சாமியைப் பொனில் அழக்கச் சொல்லும் பொழுது, இன்னொரு பி.ஏ. ஒரு டெலக்ஸ் செய்தி வந்த பேப்பரை முதல்வரின் மேஜை மீது வைத்தார்.

 ”தமிழக முதல்வர், அம்மா, செல்வி அவர்களுக்கு இன்னும் 24 மணி நேரத்திற்குள் அனைத்து மாடுகளையும் அப்புறப்படுத்தி திருவேற்காடு / மாங்காடு / திருநீர்மலை/திருக்கழுங்குன்றம் போன்ற பகுதிகளில் தற்க்காலிகமாக அமைக்கப்பட்டு விட்ட கோசாலைகளி சேர்த்துவிட வேண்டும் என்று அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளேன். நாளை காலை சரியாகப் பத்து மணிக்கு நிறைவேற்றுப்பட்டுவிட்ட தக்வலை நேரிலேயே வந்து உறுதிபட்ச் சொல்வேன் படங்களுடன்.

சென்றவாரம் அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சியினர் கூடித் திட்டமிட்டபோதே  அந்தப்பக்கமிருந்து நம் பக்கம் நாளை  மறுநாள் சேரப்போகின்ற 5000 பேர்கள் மூலமாகத் தகவல் கிடைத்தபோதே இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டு என்று முடிவெடுத்து விட்டோம்.”  இணைப்புக் கூட்டத்தை எங்கே எப்படி வைத்துக் கொள்ளலாம் ”என்றிருந்தது.

படித்துப்பார்த்த முதல்வர் தனக்குள் புன் முறுவல் பூத்துக் கொண்டார். நகலெடுத்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு ”காப்பி ” கொடுக்குமாறு உத்தரவிட்டார். அதற்கு அவர் கொடுத்த கால அவகாசம் ஒரு மணி நேரம்.



உணவு வழக்கத்தில் தன்மையை மாற்றிக்கொண்ட கால்நடைகள் என்ற தகவலை, கட்டுரை மன்னன் மறைந்த   டி.ஆர்.ஆர்., மகன் நட்த்தும் அம்பத்தூர் டைம்ஸ் பத்திரிக்கையைப் படித்தபோது  எழுந்த கற்பனைச் சித்திரம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.