Wednesday, February 29, 2012

16 நற்பேறுகளும் 64 கலைகளும்!

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! என்பதன் மெய்யான பொருள்!

துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தன
மதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை, அறம் குலம் நோவகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே. - காளமேகப் புலவர்


1. கல்வி
2. புகழ்
3. வீரம்
4. விஜயம்-வெற்றி
5.சந்தானம் - மக்கட்பேறு
6. துணிவு
7. செல்வம்
8. மதிப்புமிக்க தானியவகைகள்
8. தேக ஆரோக்கியம்
9. போகம்
10.அறிவு
11. அழகு
12. புதிது புதிதாய்க் கிடைக்கும் சிறப்புகள்
13.தான தர்மம்
14. நற்குடிப்பிறப்பு
15.நோயின்மை
16. நீண்ட ஆயுள்

ஆய கலைகள் 64 ஐயும் ஓதிடுவாள் என் அன்னை ! 64 கலைகள் பின் வருமாறு!

1 .திருமேனி அலங்கரித்தல் மற்றும் அலங்கரிக்கும் பணியாளர் கைத்திறன்.

2. திருமேனி மற்றும்  நக விரல்களுக்கு வண்ணம் பூசுதல், தலை அலங்காரம்.

3. திருநெற்றி அலங்காரம்.

4. தலை முடி அலங்காரம்.

5. ஆடை அலங்காரம்.

6   பொருத்தமான அழகிய ஆபரணங்களை அணிதல் மற்றும் இசைநடனங்கள்.

7.  இன்னிசைப் பாடல்கள்

8  இன்னிசைக் கருவிகள் மீட்டுதல்

9. ஜலதரங்கம் ( நீர் நிறைந்த கண்ணாடிக் கிண்ணங்களில் குச்சிகளால்    

     இன்னிசை எழுப்புதல்)

10. நடிப்புக் கலை

11. நடனம் மற்றும் பொதுக் கல்வி.

12. நல்லியல்புகள் மற்றும் ஆசாரங்களக் கடைப்பிடித்தல்

13. பன் மொழிப் புலமை மற்றும் வழக்காடும் திறமை.

14.கட்டற்ற வார்த்தைகளைக் கற்றிருத்தல்.

15. பேசும் திறமை.

16. வாசிக்கும் ஆற்றல்

17. எந்த்ப் பாடலையும் அந்தந்த ராகத்துடன் பாடுதல்
    
 (  எங்கள் தமிழாசிரியர்கள் எல்லாம் பாடல்களை வாசித்துக்
           காட்டியதில்லை-எனக்கு வயது 63. )

18. பாடல்களை விமர்சிக்கும் ஆற்றல்.

19. நாடகங்களை விமர்சிக்கும் திறனும் அதன் கருப் பொருளைப்
     
ப்குத்தாய்தலும்

20. எழுதப்பட்ட பாடலின் இடையே விடுபட்ட வரிகளைப் / வரியை
     
கருத்து மாறாமல் எழுதிடும்திறமை

21. பாடல்களை வரிசைப்படுத்திடும் நேர்த்தி.

22. பாடலில் எழுப்பப்படும் வினாக்களுக்குப் பாடலாலேயே பதில் கூறுதல்

23.வார்த்தை ஜாலம் / சொல்வித்தை / வார்த்தகளின் பொருளை மாற்றிப்
   
பேசிடும் திறமை.

24. இரு மனிதனின் செயல் பாடுகளைக் கொண்டே அவனைப் பற்றிய
     
உண்மைகளையும், எதிர்காலத்தையும் கூறிடும் திறமை.

25.. பிறரைக் கவர்ந்திழுக்கும் பேராற்றல்

26.சமையல்கலை நிபுணத்துவம்

27. பல்வகை நீர்ப் பானங்கள், மது பானம் தயாரித்தல், இனிப்பு கார வகைகள்
     
தயாரித்தல்

28. ஊசி வேலைப்பாடுகளைக் கொண்ட தையற்கலை.

29. பல்வேறு பருவ காலங்களுக்கும்  பயன்படுத்தும் வகையில்  பல்விதமான
   
மெத்தைகளைத் தயாரிக்கும் ஆற்றலுடைமை.

30. உடற்பயிற்சி விளையாட்டில் திறமையுடைமை.

31. இளைஞர்  விளையாட்டுக்களில் திறமை உடைமை.

32. நீச்சல்-நீர் விளையாட்டு-  பல்வகை

33.  சூதாட்டம் மற்றும் சதுரஙக விளையாட்டுக்களில் திறமையுடைமை.

34. எதிர்பாராமல் ஏற்பட்டுவிடும் நிகழ்வுகளைச் சமாளிக்கும் திறமை.

35. புதிர்களை விடுவித்தல் / விடுகதைகளுக்குப் பதில் சொல்லும் திறமை.

36. எண் விளையாட்டில் தேர்ச்சி- பொழுதை நல்ல வகையில் செலவிட.

37. மந்திர வித்தைகளில் திறமை- மாயாஜாலம்

38.சீட்டாட்டத்திறமை / நையாண்டி செய்தலில் திறமை / நையாண்டி-கேலி

39.பிறரைப் போன்று பேசிடுதல் / நடித்துக் காட்டுதல்

40. மாறு வேடப்போட்டிகளில் சாமர்த்தியம் காட்டும் திறமை.

41. வண்ண ஓவியங்கள் வரைதல்

42. பூ மாலை தொடுத்தல், பூவினாலான ஆபரணங்களச் செய்தல், மலர்க்
    
கிரீடம், மலர்க் கொத்து, மலர்க் கூண்டு முதலானவை.,

43. ரதங்களை மலர்களால் அலங்கரித்தல்

44. செயற்கையான முறையில் மலர்களைத் தயாரித்தல்

45. தந்தம் போன்ற மோதிரம், காதணி ஆகியவற்றைத் தயாரிக்கும் திறமை.

46. முறுக்கு நூல் அல்லது சிட்டங்களால் பறவைகள், மலர்கள் தயாரித்தல்
    
 (  மயில் , வீடு, பூந்தொட்டி முதலியவை எனது அன்னையால்
           தயாரிக்கப்பட்டு கண்ணாடிச் சட்டமிட்டு நீண்ட நாட்கள் எங்கள்
            வீட்டில் இருந்தன. )..

47.களிமண்ணால் ஆன உருவச் சிலைகள், பொம்மைகள் தயாரிக்கும் திறன்

48.ஒரு பொருளின் தோற்றத்தை மாற்றிக் காட்டும் திறன். சிலுக்கிலால் ஆன்
   
வீட்டு மிருகங்களை உருவாக்குதல் ஒரு உதாரணம்.

49. கிளி மற்றும் சில பறவைகளைப் பேசிப்பழகப் ப்யிற்சி அளிக்கும்
    
கலைத்திறன்..

50. செம்மறி ஆடு, சண்டைச் சேவல் மற்றும் பறவைகளை 
    
 பழக்கி தொழில்  முறையில் சண்டையிடச் செய்தல்

51.தோட்டமிடுதல் மற்றும் விவசாய வேலைகளில் திறமை,

52. வாசனைத் திரவியங்கள் தயாரித்தல்

53. பிரம்பு  மற்றும் கோரைப் புற்களக் கொண்டு வீட்டிற்குத் தேவையான தட்டு
    
முட்டுச் சாமான்கள். செய்யும் திறமை.

54. மரத்திலால் ஆன பொருட்களுக்கு வண்ணச் சாயம் பூசுதல்

55. மரத்தினால் ஆன பொருட்களைச் செய்தல்.

56. எந்திரவியல் குறித்த அறிவு / ஞானம்.

57.  கட்டுமானத் துறை  ( வீடு முதலானவை க்ட்டுதல்  )

58.  வண்ணக் கற்களாலான தரை வேலைப்பாடுகளில் திறமை.

59.  உலோகவியலில் அறிவு / ஞானம்

60.  முத்து பவளம் குறித்த அறிவு / ஞானம்

61.விலை உயர்ந்த கற்களுக்கு வண்ணம் தீட்டும் திறமை

62. போர்க் கலையில் ப்யிற்சி

63. குறிச் சொற்கள் / அடையாளச் சொற்களில் தேர்ச்சி

64. தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் சைகைகளைத் தெரிந்திருத்தல்

என்ன வலைப்பூ நண்பர்களே !

16 வகைப் பேறுகளையும்,.

64 வகையான கலைகளையும்

எப்பொழுதோ எங்கோ இணய தளத்தில்

சேகரித்ததை

ரஜனிகாந்த் இல்லத் திருமணக் காட்சியைப் போட்டுத் துவக்கி

முடித்து விட்டேன்.

இனிமேல் நம்மை யாரும் இவை தெரியுமா என்று கேட்டு விடக் கூடாது

என்பதற்காகத்தான்.

படிக்காவிட்டாலும் ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்வீர்கள் என்று

உறுதியாக நம்புகின்றேன்..1 comments:

 1. Viswanathan (a z h a g i . c o m) noblehearted@gmail.com to me

  show details 08:46 (11 hours ago)

  Dear Sir,

  My humble namaskarams - to the divinity in you and everybody else.

  Your blog looks technically great now with the new theme - what is the theme's name? It has various options (snapshot, mosaic, flipcard, etc.). Snapshot is very nice.

  You seem to be very active and posting in lots and lots.

  Noted your kind thoughts to have the links for 'india.azhagi.com' and 'service to mankind' after your signature. Thanks to the Lord Almighty, as ever.

  Lots of Love and Warm Hugs viswanathan :: india.azhagi.com :: service to mankind

  The realised ones say: "Self-realisation is (shall be) the ultimate (the one and only) goal of one's life."
  - Show quoted text -

  ReplyDelete

Kindly post a comment.