Thursday, January 19, 2012

ஜமீலாவை எனக்கு அறிமுகப் படுத்தியவன்- இரா.நாறும்பூநாதன் -



நெஞ்சில் நிறைந்து வாழும் அந்தோணி முத்து காட்டிய வழியில், அழகியின்
துணையில் வலைப்பூ தொடர்கின்றது.

அண்மையில் நிகழ்ந்த புத்தகக் கண்காட்சியில் விரும்பிய விருபாவின் உரிமையாளர் அன்புத் தோழர். டி.குமரேசன் அவர்களைச் சந்தித்து மகிழ்வோடு பேசியபின் எதிர்ப்பக்கம் இருந்த வம்சியின் பக்கம் சென்றேன். ஏன்?

அ.நாராயணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வருகின்ற பாடம் என்ற மாத இதழுக்குப்பின் என்னைக் கவர்ந்த் வார இதழின் பெயர் பெயர் மீடியா வாய்ஸ். இதன் சிறப்பு.

!. சிறப்பாசிரியர் நடிகர் ஆர்.சரத் குமார். 2.ஓய்வு பெற்ற மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட ஆசிரியர் குழு.

இவ்வாறு முன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டு கடந்த 60 ஆண்டு காலத்தில் வெளி வரும் ஒரே இதழ் மீடியா வாய்ஸ்தான். இதன் பற்றிய சிறப்புக்களை எழுதுவது இப்பகுதியின் நோக்கம் அல்ல. ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட்டே தீர வேண்டும்.

போராட்ட கார்னர் என்றொரு பகுதியைத் துவக்கி மக்கள் பிரச்சினையத் தேடிப்பெற்றுத் தீர்த்தும் வைக்கின்றனர். வேறு எந்தப் பத்திரிக்கையும் இவ்வாறு செய்வதில்லை.

இந்த மீடியாவாய்ஸ் மூலம் அறிமுகமானவர் பவா செல்லத்துரை. அவரது ஆழமான உணர்வுபூர்வமான எழுத்துக்கள் அன்றைய ஜெயகாந்தனை நினைவூட்டுகின்றன. இப்படியாக வம்சி அறிமுகமானது. திருவண்ணாமலையில் தங்க்ளுக்குள்ள காணி நிலத்தில் கட்டிடம் ஒன்றைக் கட்டி வருகின்ற படைப்பாளிகளுக்கும் , ரசிகர்களுக்கும் இலவசமாக இளைப்பாற இடந்தர வேண்டும் என்ற நோக்கத்தை வம்சி வெளிப்படுத்தியது வித்தியாசமானதாக இருந்தது.

வம்சியில் எந்தப் புத்தகத்தை வாங்குவது என்று யோசித்தபோது, விடுதலைப் போராட்ட வீரர், ம. பொ.சி. அவர்களின் பேத்தி எஸ். பரமேஸ்வரி எழுதிய, இரண்டு பதிப்புக்களைக் கண்ட எனக்கான வெளிச்சம், மற்றும் இரண்டாவது பதிப்பான ஓசை புதையும் வெளி ஆகிய இரண்டு நூல்களையும் வாங்கினேன்.

ஓசை புதை வெளி எனது வலைப்பூவில் பதிவாகி, ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்தினவேல் மற்றும் எஸ்.தனசேகரன் ஆகியோர் மிக மிகக் குறைந்த கால அளவிலேயே கவிதையைப் பாராட்டியுள்ளனர்.

அடுத்தது வம்சியில் என்னை ஈர்த்தது இரா.நாறும்பூ நாதன் எழுதிய "ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்." நீங்கள் என்ன நினைத்துக் கொள்வீர்களோ தெரியாது. ஆனால் எனக்கு, சோவியத் பூமியையும், மகாகவி பாரதியையும், அறந்தை நாராயணனையும் ஜமீலா நினைவூட்டிற்று.

திக்கெட்டும் செல்வோம் கலைச் செல்வம் கொணர்ந்திங்கு சேர்ப்போம் என்ற வகையில் ஜமீலா என்ற சோவியத் பூமியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட நாவல் நினைவுக்கு வந்தது. மொழி பெயர்த்த அறந்தை நாராயணனின் ஞாபகம் வந்தது. சோவியத் பூமியும் நினைவிற்கு வந்தது.

இதற்கும் மேலும் நாறும்பூ நாதன் பெயர் என்னை இருமடங்கு இழுத்தது. ஏனெனில், என் அம்மாவின் வழி முப்பாட்டனின் பெயர் நாறும்பூநாதன்.

ஜமீலாவை அறிமுகப்படுத்தியவன் என்ற கதை மெய்ப் பொருள் நயனார் தெருவில் நடக்கின்றது. திருநெல்வேலி டவுனில் இதே போன்று கம்பராமாயணத்தெரு, தமிழ்ச்சங்க்த் தெரு, 63நாயன்மார் தெரு என்று இலக்கியங்ளையும் சைவ சமயங்களையும் நினைவூட்டும் தெருக்கள் அமைந்துள்ளன. அங்கே தோன்றிய படைப்பாளிகளிடம் இவற்றின் சைவ மணம் வீசாமல் இருக்காது.

முப்பது வருஷப்பழக்கத்தில் எஞ்சியது ஜமீலா நாவல் மட்டுமே. உதிர்ந்த பூ தொகுப்பு வெளியிட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் இரண்டாவது தொகுப்பு
வெளி வந்ததிலிருந்தும் மரணித்த நண்பரின் வீட்டிற்கு புதுமனை புகு விழா அழைப்பிதழுடன் செல்லும் மனத்தின் பாரத்தச் சூழ்நிலை வெளிப்படுத்துகின்றது.

அம்பதாயிரம் அட்வான்சில் வீட்டின் ஒரு பகுதியே சுரண்டப்படுவதற்கும் கொத்தடிமை வாழ்க்கக்கும் வித்தியாசமற்றதன்மையைச் சுட்டிடும் பாங்கு கண்ணில் நீர் வரவழித்தது.

மரணித்த நண்பர் கணேசனும் பூரணியும் இருந்த பெரிய கருப்பு வெள்ளைப் புகைப்படம் டிவிக்கு மேல்புறம் தொங்க்கிக் கொண்டு இருந்தது. திருமணத்தின்போது மாரிஸில் எடுத்தது. இடது பக்கம் மேல்புறத்தில் ப்ரிய வண்னப்புகைப்படம். ப்கைப்படத்தில் சந்தன மாலை தொங்க்கிக் கொண்டிருந்தது, ஐந்து வருடங்கள் ஒடிவிட்டன.

பி. ஏ. முடிச்சிட்டிங்க்களா? பென்ஷனல்லலாம் ஒழுங்க்கா வருதா? வார்த்தைகள் த்திக்கித்த் திணறி மோதித்தான் வெளிவருகின்றன மணிக்கு.,"பி.எட்.முடிச்சு பதிஞ்ச்சும் வைச்சாசு.எப்ப வருதுன்னு பாப்பம். டி.டி.பி வொர்க் பார்த்துக்கிட்டு இருக்கேன். அண்ணன் ஆபீஸ்ல இருந்தும் கொஞ்சம் ஜாப் வொர்க் கிடச்சுட்டு இருக்கு. பென்ஷன் பணம் மட்டும் போதால்ல. கொஞ்சம் இரிங்க அடுப்ப தணிச்சிட்டு வரேன்." உள்ளே போனாள்.

அடுத்த புதனில் நடக்கும் க்ரஹப்பிரவேசத்திற்கு இறந்த கணவன்கணேசனின் நண்பனாக அல்லது மணியின் நண்பனாகப் பூரணி செல்லக்கூடும் குழந்தைகளுடன்.

சென்னையைப்போல் திருநெல்வேலி மாறாமலா இருக்கும்? வீட்டை விட்டுப் புறப்படும்பொழுது தயக்கத்துடன் தன்னையும் கணேசனயும் இணைத்து வைத்த ஜமீலா மொழிபெயர்ப்பு நாவலைக் கேட்டுப் பெற்று எடுத்து வர மறக்க வில்லை கதையின் நாயகன், மணி.

படைப்பாளியின் முதல் தொகுப்பான கனவில் முதிர்ந்த பூ வெளியிட்ட தொகுப்புடன், 9 ஆண்டுகளுக்பிகுன் வெளியிட்ட தொகுதியுடன் ஜமீலாவும் வீட்டின் புத்தக அலமாரியில் இருந்தால் உணர்வு பூவமாகத்தானே இருக்குமே என்று மணி நினத்திருக்கக் கூடும்.

காதுகளில் பூரணியின் கேவல் சத்தம் கேட்டது. "முப்பது வருஷமா பழகி இருக்கீங்க்க. அவரு போயிட்டா எல்லாமே போச்சா? கடைசியில் என் கூடப் பிறந்தவங்க்க மட்டும்தான் எனக்கு உறவா? அப்பப்ப வந்து பார்த்துக்குங்க்க. இங்க்கே பிரண்டு பொண்டாட்டி பிள்ளைங்க்க இருக்காங்க்களா இல்லையான்னு..." என்பது போல இருந்தது அந்த விசும்பலின் உணர்வு.

அவளைத் திரும்பிப் பார்க்கும் தைரியம் கணேசனின் நண்பனுக்கு இல்லை. மணிமாமா என்பதன் மூலம்தான் கணேசனின் நண்பனின் பெயர் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இல்லை என்றால் மணியின் பெயரே நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

மானிடத்தின் சராம்சங்கள் மனித உறவுகளே. உறவுகளின் வகிரங்களும் குரூரங்க்ளும் அலட்சியங்களும் விளைவதக் கண்டு மனம் துயறுற்ற கலைஞன் மீண்டும் மீண்டும் தன் படைப்பின் மூலம் தெளிவு படுத்திக் கொள்ள முற்சிக்கின்றான்.

குற்றவாளி யாரென்று தெரிந்தபின்னும் இழுத்தடிக்கும் இன்றய சட்டதிட்டங்களும், அலுவலகத்தில் என்ன நடக்கிறதென்ற சிந்தனையே அற்ற போலீஸ் ஏட்டையாவும், (யாருக்குத் தண்டனை) கட்டுப் பெட்டி மாவட்டமான நேல்ல மாவட்டத்தில் வித்தியாசமான கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜமீலாவும் சமூகமாற்றத்திற்கான தூரத்தையும் எடுத்துரைக்கின்றன.

சமூகத்தில் மிகமிகச் சாமன்யமாக நிகழும் சம்பவங்க்களைக் கொண்டு பெரிய பெரிய விஷ்யங்க்களுச் சிந்தனயை இழுத்துச் செல்லும் கதாசிரியரின் திறமையைப் பாராட்டாமலிருக்க முடியாது.

இன்னும் 9 ஆண்டுகால இடைவெளியை அடுத்த படைப்பிற்கு படைப்பாளி எடுத்துக் கொள்வாரானால் அது சமூகத்திற்கு பேரிழப்பு என்று சொல்லித் தொடர்ந்து இடைவெளியின்றி எழுதவேண்டிய காலக்கட்டம் இது என்பதைச் சுட்டிக்காட்டவே விரும்புகின்றேன்.

கோவில்பட்டி அன்பர் உதய சங்கர் கதா வெளியில் விரியும் சிறகுகள் என்ற இரு பக்கங்களைப் படித்தால் இக்கதைக்கு விமர்சனமே எழுதத் தேவை இல்லை என்பது உண்மையாகும். இருந்தாலும் நாறும்பூநாதன் என்ற பெயர் தந்த ஆசையால் ஏதோ எழுதி வைத்தேன்.

ஏனெனில் உதய சங்கர் விமர்சனத்திற்கு வைத்துள்ள இலக்கிய மணம் வீசும் தலைப்பும், சொற்செட்டான கவிதைக்கொப்பான வசனங்களைவிடச் சிறந்த விமர்சனத்தை யாரும் எழுதிவிட முடியாது.

நாறும்பூநாதனிடமிருந்து அடுத்த படைப்பினை உடனே எதிர் பர்க்கின்றோம். ஏனெனில் திருநெல்வேலியும், வாழ்க்கைச் சூழலும் பெரிதும் மாறிவிட்டன.


[Image1]


மூலவர்
:நாறும்பூநாதர்
உற்சவர்:பூநாதர்
அம்மன்/தாயார்:கோமதியம்பாள்
தல விருட்சம்:மருதம்
தீர்த்தம்:தாமிரபரணி
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:புடார்க்கினியீஸ்வரர்
ஊர்:திருப்புடைமருதூர்
மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு

வ்ம்சி புக்ஸ், 19,டி.எம்.சாரோன், திருவண்ணாமலை, 606 601.
அலைபேசி: 9444867023, தொலை பேசி: 04175- 251468.

www.vamsibooks.com. e-Mail- vamsibooks@yahoo.com

nharampunhathan-9629487873

1 comments:

Kindly post a comment.