Saturday, January 21, 2012

எனக்கான வெளிச்சம்-தி.பரமேசுவரி

உன்னெஞ்சில் நீர் வடிந்தால் என்ற வரிகளை யாரும் எழுதிவிடலாம். இதனைக் கவிதை என்று கூறிவிட இயலாது. என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று எழுதப் படும் பொழுதுதான் அதுகவிதை ஆகின்றது என்று சொல்லுவார் "தாமரை பூத்த தடாகமடி" என்ற என்றும் அழியாப்புகழ் பெற்ற திரைப்படப் பாடலை எழுதிய "வெளிச்சம்" புகழ் திருச்சி. தியாகராஜன்.

அதே போன்று, இயல்பாய்க் கடந்து செல்லும் வாழ்க்கை கவிதையாய் இல்லாவிடினும், சில கணங்களிலேனும் கவிதையை அடையாளம் காணலாம் என்று கவிததுவத்தின் மேன்மையை , வசீகர சாபத்தில் தோய்ந்த கனவுலகத்தில் அனுபவித்துக் காட்டுகின்றார், கவிஞ்ர், தி.பரமேசுவரி.

ஆணாயினும் பெண்ணாயினும் எல்லாக் கவிதைகளிலும் அவருடைய வாழ்க்கையே பதிவாகி இருப்பதான எண்ணத்துடனே பெரும்பாலானோர் வாசிக்கத் துவங்குகின்றனர். இதன்மூலம் ஆண்-பெண் கவிஞ்ர் வேற்றுமை தேவையில்லை என்றே கொள்ளலாம். கொள்ளவும் வேண்டும். சமூக நீதிகளை/அநீதிகளை / அனுபவங்களை சுட்டிக்காட்ட ஆணாயிருந்தாலென்ன ? பெண்ணாயிருந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான். பெண் கவிஞ்ர் என்று போடுவதே கூடத் தவறுதான். கவிஞ்ர் என்று போடுவது கூட அந்தக் கவிஞ்ரை அவமானப்படுத்துவதாகத்தான் அர்த்தம்.

இவரது பதிப்புக்களில் தி.பரமேசுவரி என்று மட்டுமே போடுவதன் மூலமே வெற்றி பெற்று விடுகின்றார். என்றும் இதே கொள்கையைக் கடை பிடிப்பார்
என்று எதிர்பார்ப்போம், நம்புவோம். பள்ளி நாட்களிலேய விடுதலை வீரர், தாத்தா, ம.பொ.சி. அவர்களால் என் வாரிசு என்று சுட்டிக்க்காட்டப்பட்டவர் எண்ணிய எண்ணியாங்கு எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார் என்பது நிச்சயம்.

ஒரு கவிதைப்புத்தகம் முதல் பதிப்பு விற்பதே அரிது. இந்தப் புத்தகம் முதலும் விற்று இரண்டாவது பதிப்பும் காலியாகி, புதியதாக மூன்றாவது பதிப்பொன்றும் வந்துள்ளதென்றால் தமிழ் வாரிசு தவறாமல் தொடர்கின்றதென்றுதானே பொருள்?

எத்தனையோ பேரிருக்க தாத்தா என்வாரிசு இவர்தான் என்று அடையளங்க்காட்டியது நிரூபணமாகிக் கொண்டிருக்கின்றது என்றுதானே பொருள்?

இரு பதிப்பைக் கண்ட முதற் கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையினை
இங்கு காண்போம்.

எனக்கான வெளிச்சம்


பனிமூடி இருக்கும் வனம்

நிறை சூலியாய்க் காடு

பூத்திருக்கும் மலர்கள்

அடர்த்தியான மரம் செடி கொடிகள்

திரியும் விலங்குகள்

வெள்ளி நீர் வீழ்ச்சிகள்

பனியில் குளிர்ந்து

வெயிலில் கருகி

மழையில் நனைந்து

அசையா மோனத்தில்

சூன்யத்தின் நிழல்

தேடித் திரும்புகிறது

சக மனுஷியை!

பாட்டியின் உடலில் உயிர்ப்பு

மெல்லிசாய்..

பேத்தியின் திருமணம்

பார்க்க ஆசைப்பட்டதில்

பத்தாம் வகுப்பு மாணவி

மனைவி ஆனாள்.

முகமற்ற மனிதன் கைப்பிடித்து

ஏழு அடி எடுத்து வைக்கையில்

மாலை மாற்றுகையில்

பக்கத்தில் அமர்கையில்

கருகி உலர்கிறாள்

நெளிந்த பித்தளைப் பாத்திரமாய்ப்

பெண் முகம்...

ஆனந்த வெள்ளத்தில்

ஆவி பிரிய

நூற்று மூணாவது வயதில்

செத்துப் போன

பாட்டிக்காக அழுகிறார்கள்!

முட்டுச் சந்தில்

நிற்கப் போகிறோம்

என்றுணர்ந்தே

உன்னுடன் பயணித்தேன்

என்னை நிறுத்திவிட்டு

நீ மட்டும் திரும்பி நடந்தாய்

உன் காலடித் தடங்களில்

முட்கள் பூத்தன..

முன்னும் பின்னும்

போக வழியில்லாத

தவிப்பில் நான்!

தி.பரமேசுவரி

பாட்டியை வெளிச்சமாக்கிக் (கலங்கரை விள்க்கமாகக்) காட்டிய முதற் கவிதை இதுவாகத்தான் இருக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.