Sunday, January 15, 2012

டிவிட்டர் புண்ணியத்தில் இலவச வீடு பெற்ற அமெரிக்க பெண்!


டிவிட்டர் புண்ணியத்தில் இலவச வீடு பெற்ற அமெரிக்க பெண்!

பொதுவாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சோஷியல் மீடியா மூலம் நண்பர்களுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பது தான் பலரது கருத்து. ஆனால் டிவிட்டர் நண்பர்கள் மூலம் தங்குவதற்கு வீடு ஒன்றை பெற்று இருக்கிறார் ஏனிமாரி வால்ஷ்.

இவர் 41 வசது நிரம்பிய பெண்மணி. டிக்காகோவை சேர்ந்தவர். தங்குவதற்கு வீடு இல்லாமல், சாலையோர பகுதிகளில் தங்கி இருந்த ஏன்மாரி வால்ஷ் குடும்பத்தில் ஏற்பட்ட சில சூழல்களால் விவாகரத்து பெற்று வேலை, வீடு போன்ற எந்த ஒரு ஆதரவும் இன்றி இருந்த வந்தார்.

ஏர்லிங்டன் ஹைட்ஸ் மெமோரியல் லைப்ரரியில் உள்ள இன்டர்நெட் வசதியினை பயன்படுத்தி தனது பிரச்சனைகளை டிவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார். இதனால் 5,000 ஃபாலோவர்களுக்கு மேல் பெற்று, அவர்கள் மூலம் இவருக்கு உதவியும் கிடைத்து இருக்கிறது.

டிவிட்டரில் கிடைத்த நண்பர்களில் சிலர் இந்த பெண் மணிக்கு 2 லேப்டாப்களையும், தங்குவதற்கு வீடும் வழங்கி இருக்கிறார்கள். பஸ் பாஸ் வசதி, மொபைல் பேமெண்ட் செலுத்துவது போன்ற சில வசதிகளும் இவருக்கு கிடைத்து இருக்கிறது.

பொதுவாக சாலையோர இடங்களில் தங்கி இருப்பவர்கள் எந்த விதமான படிப்பறிவும் இல்லாமல் இருப்பவர்கள் என்ற கருத்து தான் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் அதில் சந்தர்ப சூழ்நிலை வசத்தால் அனைத்து வசதிகளையும் இழந்தவர்களும் இருக்கின்றனர் என்ற விஷயத்தையும் ஏனிமாரி வால்ஷ் டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

அதோடு இப்படி எந்த ஒரு சரியான ஆதரவும் இல்லாதவராக இருந்த போதும், லைப்ரரியில் உள்ள இன்டர்நெட் வசதியினை பயன்படுத்தி இந்த உதவிகளை டிவிட்டர் மூலம் பெற்றிருக்கிறார்.

சோஷியல் மீடியோ போன்ற வசதிகளை பயன்படுத்தி சமூகத்தின் ஒட்டு மொத்த கவணத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் ஏன்மாரி வால்ஷ். இதில் ஒரு விஷயம் தெளிவாகிறது. சோஷியல் மீடியோவான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற வசதிகளின் முக்கியத்துவத்தை இந்த சிகாகோ பெண் மணி நிரூபித்து இருக்கிறார். இவரை டிவிட்டரில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் @padschicago ஐடியை பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.