தமிழில் தலித் கவிதைகளின் முன்னோடிக் கவிஞர். அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் மற்றும் பெண்ணிய தத்துவங்க்களின் விடுதல இயக்கங்களோடு தொடர்பு கொண்டு போராடி வருபவர்.
தலித் மற்றும் பெண்களின் விடுதலையே இந்திய விடுதலை என்னும் கருத்தியலில் தீவிரமாக இயங்க்குபவர். கவிஞர் மீரா நடத்திய அன்னம் விடு தூது இதழில் அறிமுகமாகி கவிதாசரண் தொடர்ந்து எழுதி வருபவர்.
முதலாளியம்மாவின்
பழம் புடவை
அம்மாவிற்குப்
புதுப் புடவை
அம்மாவின்
பழம் புடவை
அக்காவிற்குப்
புதுப் புடவை
அக்காவின்
கிழிந்த புடவை
தங்கைக்குப்
புதுத் தாவணி
தங்க்கையின்
கிழிந்த தாவணி
தம்பிக்குப்
புதுக் கோவணம்
ஒரு புடவை பல்வேறு பரிமாணம் பெறுவதை ஒரு வாழ்வியல் சார்ந்த
கவிதையாக்கியிருக்கிறார், அரச முருகு பாண்டியன்.
இவர் வணிகவியல் பேராசிரியர் என்பது சிறப்பு.
துணைவியார்- பேராசிரியார் த.சித்ரா
குழந்தைகள்: இளவெயினி. அம்பேத்கார்
0 comments:
Post a Comment
Kindly post a comment.