Friday, January 13, 2012

70 வயதில் அறிவியல் அறிஞர் ஸ்டீஃன் ஹாக்கிங்க்


இன்று நம்மிடையே வாழ்ந்துவரும் ஒரு அசாதாரணமான அறிவியல் அறிஞர்
ஸ்டீஃபன் ஹாக்கிக். அண்டவெளி பற்றியும் காலம் பற்றியும் அண்ட வெளியில் உள்ள கறுப்புத் துறைகள் பற்றியும், உலகம் பிறந்தது பற்றியும் இதுவரை நாம் கருதி வந்த கணிப்புக்களை எல்லாம் மாற்றி புதிய உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர்.

இரண்டாம் வயதிலேயே ன்அவரை ஒரு பயங்கர நோய் ஆட்கொண்டது. உடலின் அவயவங்க்களை இயக்கக் காரணமாக இருக்கும் செய்கை நரம்பணுக்கள் அவர் உடலில் அதிகம் அழிந்து கொண்டிருந்தன. நாளாக நாளாக , அவர் இயல்பாக நடமாடமுடியாதவரானார். உடலும் கூனிக் குறுகியது. பிறர் உதவியுடன் மட்டுமே எங்கும் சென்று வர இயலும் என்ற நிலை உருவானது.


எனினும் இயற்பியல் துறையிலான தனது ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். அவரது ஆய்வு முடிவுகள் அறிஞ்ர்களை வியப்பிலாழ்த்தின.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிறன்று (08-01-20`12) அஸ்ண்ட இயல் வெளி பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. அன்றுதான் அவரது பிறந்த நாள். அனைத்து அறிவியலாரும் பாராட்டிக் கொண்டிருந்தனர். "மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று அனைவரும் ஒரே குரலில் வாழ்த்தியதை தனது இல்லத்திலிருந்து காணொளிக் கருவியின் மூலமே அவர் பார்த்துக் கேட்டு மகிழ முடிந்தது. ஆம்! சில நாட்களாக மருத்துவ மனையிலிருந்த ஹாக்கிக், கடந்த வெள்ளியன்றுதான் வீடு திரும்பினார். ஆனாலும் பூரண குணமடையவில்லை.

தனக்காக நடந்த பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை. இன்னும் சில் வாரங்க்கள் கழித்து, தம்மைக் காண வருவோர அவர் சந்திதுப் பேச இயலும் என்கின்றனர்

தனக்கு ஏற்பட்டிருக்கும் அதீதமான உடல்நலக் குறைபாடுகளையும் பொருட்படுத்தாமல், மிகச் சிறந்த அறிவியல் ஆய்வுகளைச் செய்துவரும் ஹாக்கிங்கின் மன உறுதி அனவருக்கும் பாடமாக அமையும் என்று அவரின் பிறந்தநாளில் பாராட்டிப் பேசிய பலர் கூறினர்.


1 comments:

  1. புதிய செய்தி.உடல் பாகம் இயங்காத நிலையில் தன்னை உலகம் வியக்கும் விஞ்ஞானியாக வளர்த்துள்ளார்.

    ReplyDelete

Kindly post a comment.