Monday, January 9, 2012

ஜெயலலிதா பற்றி அவதூறு நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் வழக்கு

அது இருந்தா இது இல்லை! இது இருந்தா அது இல்லை! அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால் அவனுக்கு இங்கே இடமில்ல.- நல்ல தீர்ப்பு சினிமா

`

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி வார இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த அன்பு என்பவர் ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வார இதழின் மீதும், நக்கீரன் கோபால் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து நக்கீரன் கோபால் மீது 506 (2) (கொலை மிரட்டல்), 505 (மன உளைச்சலை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துதல்), 504 (உயர் பதவியில் இருப்பவர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவது), 323 (கையால் தாக்குதல்), 148 (ஆயுதம் வைத்திருந்தல்), 147 (சட்ட விரோதமாக கூடுதல்) ஆகிய 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நக்கீரன்அலுவலகத்தில் நேற்று மாலை போலீசார் சோதனை நடத்தினர். கோபால், காமராஜ் எங்கே இருக்கிறார்கள் என்று அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தன
ர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.