Saturday, January 28, 2012

கைதிகள் விடுதலை: சல்மான் 40 லட்சம் நிதியுதவி

கான்பூர் : உ.பி.,மாநிலத்தில் பல்வேறு சிறைகளில் அடைபட்டிருந்த கைதிகள் விடுதலையாவதற்கு பாலிவுட் நடிகர் சல்மான்கான் நிதியுதவி அளித்துள்ளார்.


உ.பி., மாநிலத்தில் உள்ள 63 சிறைகளில் பல்வேறு குற்றங்களுக்காக அடைக்கப்பட்டிருந்த 400 சிறை கைதிகள் , ஏழ்மை நிலை காரணமாக அபராத தொகை கட்ட முடியாத தால் விடுதலை ஆகாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் நடத்திவரும் அறக்கட்டளை மூலம் அபராத தொகையை ‌செலுத்த முன் வந்தார். தொடர்ந்து அவர் சிறை அதிகாரிகளை சந்தித்தார். சிறை அதிகாரிகள் கைதிகளை விடுதலை செய்வதில் உள்ள சட்ட சிக்கல் குறித்து சட்ட பிரிவினருடன் கலந்தாலோசித்தனர். பின்னர் இதனால் எவ்வித பாதிப்பும் கிடையாது என்று பரிந்துரைத்து நோ அப்ஜெக்சன் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தனை‌யடுத்து அறக்கட்டளை மூலம் கைதிகள் சார்பாக சுமார் 40 லட்ச ரூபாய் அபராத தொகை‌யாக கட்டப் பட்டது. இதனையடுத்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2002-ம் ஆண்டு மும்பையில் அதிவேகமாக காரை ஓட்டிய குற்றத்திற்காக கைது ‌செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து 2006-ம் ஆண்டு மானை ‌‌வேட்டையாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

Kindly post a comment.