Wednesday, December 21, 2011

குற்றவலைத் தளத் திட்டம் முதல்வர் ஜெ., துவக்குகிறார்


சிவகங்கை மாவட்டத்தில், குற்ற வலை திட்டத்தை முதல்வர் "ஜெ' பிப்ரவரியில் துவக்கி வைக்கிறார்.சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில், கூடுதல் டி.ஜி.பி., ஆசிஸ் பங்கரா தலைமையில், குற்றம், குற்றவாளிகளை கண்டறியும் வளை தள திட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. அவர் பேசியதாவது: 11 வது நிதிக்குழு சார்பில்,தேசிய தகவலியல் மையத்தின் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்டேஷன்களும் வலைதளம் மூலம் இணைக்கப்படும். போலீஸ் ஸ்டேஷன்களில் புகாரை பெற்றவுடன், அவற்றை பதிவு செய்ய, பல்வேறு ஆவணங்கள் பயன்படுத்தப்படுவதால் நேரம் அதிகமாகிறது.


புதிய முறைப்படி, ஒரு ஸ்டேஷனில் உள்ள எஸ்.ஐ., ரைட்டர், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. புகார்கள் இனி, புதிய முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும். ஏற்கனவே, ஸ்டேஷன்களில் உள்ள 10 வருட குற்ற விபரங்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவு செய்யும் பணியும் துவங்கவுள்ளது. வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் ஸ்டேஷனுக்கு வராமல், இணை தள முகவரி மூலம் தங்களது வழக்கின் தற்போதைய நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும். இத்திட்டத்தின் மூலம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள வழக்குகளை இன்ஸ்பெக்டர் முதல் சென்னையில் உள்ள டி.ஜி.பி., வரை அறியலாம், என்றார்.

இத்திட்டம் 2012 ஜன., 15 ல் திருவள்ளுர் மாவட்டத்திலும், சிவகங்கையில் பிப்ரவரி மூன்றாவது வாரத்திலும் துவக்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில், தகவலியல் மைய நிகழ்ச்சி இயக்குனர் மாணிக்க வாசகம், மேலாளர் மகேஷ் கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி., ஸ்டாலின், தென் மண்டல இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன், எஸ்.ஐ., வேணுகுமரன் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.