Tuesday, November 1, 2011

போதி தர்மர் உண்மையில் ஒரு தமிழரா?

சென்னையில் எங்கு திரும்பினாலும் சில சுவரொட்டிகள் கண்களை உறுத்துகின்றன.

போதி தர்மர் தமிழரே அல்ல. காசுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம் என்று கோபம் காட்டும் அந்த போஸ்டர்கள் முருகதாஸ் கண்களில் பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் இது தொடர்பாக இணையத்திலும், துண்டு பத்திரிகைகளிலும் கடும் கருத்து யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் சிலர்.

போதி தர்மர் தமிழரே அல்ல. அவர் கன்னடத்தை சேர்ந்தவர் என்கிறார்கள் அவர்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டும் அனைத்தையும் படித்தால் தலவலியே ஏற்படுகின்றது.

இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை இதன் உண்மைத் தன்மையினை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

என்றாலும் இந்த போதி தர்மர்ன் பற்றி பல்வேறு இணையத்தளங்களில் தேடி ஆராய்ந்த வகையில் இவர் தமிழ் மன்னன் என்ற முடிவுக்கே வர முடிகின்றது.

இதனை பல்வேறு ஆங்கில இணைய தளங்களும் உறுதிப்படுத்துகின்றன.

வலைப்பதிவாளர்களில் உண்மைத் தமிழனுக்குத் தனிச் சிறப்புண்டு. அவர் ”போதிதர்மர் தமிழரா இல்லையா என்பதைப் பின்னர்தான் பார்க்க வேண்டும். இந்தப் படம் அறிமுகமான பின்னர்தான் போதி தர்மரைப் பற்றி விக்கி பீடியா மற்றும் இணையங்களின் மூலம் தெரிந்து கொண்டேன்”, என்று சொல்லி விட்டு திரை விமர்சனத்திற்குச் சென்று விட்டார்.

உண்மைத் தமிழன்
நிச்சயம் பார்க்கக் கூடாத, வேண்டாத படமல்ல. அதே சமயம் பார்த்தே தீர வேண்டிய படமும் அல்ல. நேரம் கிடைத்தால் பாருங்கள்..! இதுவே அவரது நீண்ட அலசலுக்கு அப்புறம் காட்டும் வழி.

Read more: http://truetamilans.blogspot.com/#ixzz1cTFcSWqw


கிழக்கு பதிப்பகத்தின் சேஷாத்ரி சார்பில் நடத்தப்படும் இணைய இதழ் தமிழ் பேப்பர். தமிழுக்குக் கிடைத்ததொரு வரம். அதில் போதி தருமரின் குறைப்பிரசவம் என்று நீண்ட திரை விமர்சனம் மகாதேவன் எழுதியுள்ளார்.

போதி தருமர் தமிழர் இல்லை என்று இவரும் கூறவில்லை.

கதை- வசனத்தையே குறை கூறியுள்ளார். நான் எழுதினால் திரைக்கதையை நிச்சயம் வேறுவிதமாகத்தான் எழுதுவேன். அதை வேண்டுபவர்கள் சுயவிலாசமிட்ட தபால் தலையுடன் ஒரு கனமான கவரை அனுப்பி வைக்கவும் மேலும் படித்திடச் செல்க..http://www.tamilpaper.net/

எல்லோருமே மறந்துவிட்ட வீரஞ்செறிந்த தமிழ் மன்னனின் வரலாற்றைத் தேடிப்பிடித்து உலகை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த முருகதாஸ் குழுவினரைப் பாராட்டுவோம். போதி தருமர் உண்மைத் தமிழர்தான்.

ஆனால், ஒரு வருத்தம்! தமிழருக்கு ஆதரவான சில பகுதிகளை நீக்கினால்தான் இலங்கையில் திரையிட முடியும் என்ற முடிவிற்குக் கட்டுப்பட்டு அவற்றை நீக்கியதுதான். இலங்கையில் திரையிடுவதைத் தவிர்த்திருக்கலாம் சூர்யா & கோ.

1 comments:

Kindly post a comment.