Tuesday, November 1, 2011

அமெரிக்கா,இஸ்ரேல் கடும் எதிர்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அங்கீகாரம் கொடுத்த ஐ.நா.

U.S. halts UNESCO funding over Palestinian vote

ஐ.நா.வின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோவில் பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பாலஸ்தீனத்தை முன்வைத்து நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன.


அதேவேளையில், யுனெஸ்கோவில் உறுப்பினர் அங்கீகாரம் கிடைத்ததை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பாலஸ்தீனம் கருதுகிறது.


மெலும், எதிர்காலத்தில் ஐ.நா. பொதுசபையில் உறுப்பினராவதற்கு இதை ஓர் அடையாள வெற்றியாகவே பாலஸ்தீனம் பார்க்கிறது.


பிரான்ஸின் பாரீஸ் நகரில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 107 நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பை 52 நாடுகள் புறக்கணித்தன.


பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகியவை முக்கிய நாடுகளாகும்.


இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.


யுனெஸ்கோவில் பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அங்கீகாரம் அளித்ததற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


யுனெஸ்கோவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்புகளை பாதிக்கும் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல், அமெரிக்காவும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. .

அச

0 comments:

Post a Comment

Kindly post a comment.