Thursday, November 17, 2011

பாரதியின் பாடல்கள் நாட்டுடைமையான வரலாறு!

மகாகவி பாரதியின் பாடல்கள் பொதுஉடைமை ஆக்கப்படவேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பவேண்டிய அவசியம் 1940-களின் பிற்பகுதியில்

ஏற்பட்டது. டி.கே.சண்முகம் சகோதரர்கள், தங்களது பில்கணன் நாடகத்தைத் திரைப்படமாக்கினர். பாரதியின் பாடல்களைத் திரைப்படத்தில் இடம்பெறச்

செய்திருந்தினர்.அப்பொழுது ஏவி.மெய்யப்ப செட்டியார், பாரதி படல்களின் உரிமையளாராக இருந்தார்.சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுவக்ககீல் மூலம் அறிிவித்தார்.

பாரதியின் தம்பி சின்னசாமி ஐயர்; "பாரதி பிரசுராலயம்" மூலமாகப் பாரதியின் பாடல்களைப் பிரசுரித்து வந்தார். பாரதி பிராசுராலயம்

பாரதி பாடல்களை குஜராத்தி சேட் ஒருவருக்கு விற்றிருந்தது. அவரிடமிருந்து ஏவி மெய்யப்ப செட்டியார் அதிக விலைக்கு பாரதி பாடல்களைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றுக் கொண்டார். இசைத்தட்டுகளிலும், தமது திரைப்படங்களிலும் பயன்படுத்தி வந்தார். எனவேதான் மேற்படி அறிவிப்பு நிகழ்ந்தது.

தோழர்.ப.ஜீவானந்தம், பாரதியின் பாடல்கள் பொதுவுடைமையாக்கப்பட வேண்டும் என்று எழுதியும் பேசியும் வந்த கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமானது.

டி.கே.சண்முகம் முயற்சியில்"பாரதி விடுதலைக் கழகம்" அமைக்கப்பட்டது. அதன் தலைவர் எழுத்தாளர் நாரணதுரைக்கண்ணன்;

செயலாளர்கள், எழுத்தாளர்கள் திருலோக சீதாராம், வல்லிக்கண்ணன்; துணைத்தலைவர் பேராசிரியர் அ.சீனிவாசராகவன். முக்கிய எழுத்தாளர்கள்

அனைவரும் உறுப்பினர்கள். கழகத்தின் செயல்திறனால், அனைத்து நாளிதழ்களும், முக்கியப் பத்திரிக்கைகளும் பாரதியின் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று ஆதரவுக் குரல் கொடுத்தன.

அப்போது, ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தமிழக முதல்வராக இருந்தார். அவர், பாரதியார் மனைவியிடம், ஒப்புதல் கடிதம் வாங்கிவரும்படி பாரதி விடுதலைக் கழகத் தலைவர்களிடம் கூறினார்.

நாரண துரைக்கண்ணன், அ.சீனிவசராகவன், வல்லிக்கண்ணன், டி.கே.சண்முகம், திருச்சி வனொலியில் பணியாற்றிவந்த எழுத்தாளர், கே.பி.கணபதி ஆகிய ஐவர் குழுவினர் நெல்லை சென்றனர்.பாரதியின் மனைவி செல்லம்மாளையும், மகள் தங்கம்மாவையும் சந்தித்தனர். சம்மதக் கடிதம் வாங்கினர்.

பாரதி பிரசுராலயத்திடமிருந்தும் இசைவுக்கடிதம் வாங்கப்பட்டது. இம்முயற்சியில், அப்போதைய நெல்லை நகரசபைத் தலைவராகவும்,

பி.எஸ். இராமையாவுக்குப்பின் "மணிக்கொடி" இலக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவருமான ப.இராமசாமியும் துணை நின்றார்.

இதுசமயம், பாரதியின் வரலாற்று ஆசிரியர் வ.ரா. என்கிற வ.ராமசாமியும் பாரதி விடுதலைக் கழகத்தில் சேர்ந்து கொண்டார். அதன்பிறகு,

அவர் தலைவராகவும், நாரண துரைக்கண்ணன் துணைத் தலைவராகவும் செயலாற்றினர். பாரதி விடுதலைக் கழகக் குழுவினர் வாங்கிவந்த இசைவுக்

கடிதங்கள் முதல்வர் ஓமந்தூரரிடம் கொடுக்கப்பட்டன. முதல்வர் இராமசாமி ரெட்டியார்,ஏவி மெய்யப்ப செட்டியாரை அழைத்துப் பேசினார்.செட்டியார்

மனமுவந்து பாரதியார் பாடல்களின் உரிமையை அரசுக்கு அளித்தார். பணம் எதுவும் வாங்கவில்லை

தமிழக முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அரசும் பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்கியது. பாரதியார் குடும்பத்தினருக்கு அரசு ஒரு

தொகையும் வழங்கியது. வெற்றியிவிழாவினைப் பாரதி விடுதலைக் கழகம் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடத்தி மகிழ்ந்தது.பத்திரிக்கைகளும் பாராட்டின.

குறிக்கோள்-நோக்கம் நிறைவேறிவிட்டநிலையில் அத்துடன் பாரதி விடுதலைக் கழகம் கலைக்கப்பட்டது. இந்த தகவலைத் தருபவர்,

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர், வல்லிக்கண்ணன்!

உதவியநூல்

"சிறியன சிந்தியாதான்,வல்லிக்கண்ணன்"

தொகுப்பாசிரியர்:அ.நா.பாலகிருஷ்ணன்

வெளியீடு

: ஞானியாரடிகள் தமிழ் மன்றம், 7, நாகமணி தெரு, சிந்தாாப்பேட்டை,

சென்னை-600002

விற்பனை உரிமை:

விஜயா பதிப்பகம்,

20, இராஜவீதி, கோயமுத்தூர்,

. 641001 (டிசம்பர்-௨000)

7 comments:

  1. Geetha Sambasivam geethasmbsvm6@gmail.com to mintamil

    show details 9:39 PM (1 hour ago)

    ஹரிகி ஏற்கெனவே விரிவாக எழுதிப் பல ஆண்டுகள் ஆகின்றனவே.

    - Show quoted text -

    ReplyDelete
  2. Rama Samy to mintamil

    show details 10:11 PM (1 hour ago)

    ஒருவருக்குத் தெரியாதவை எல்லாம் புதுசு. தெரிந்தவை எல்லாம் பழசு.2009-ல் எழுதி வைத்த குறிப்பு. பார்வையில்பட்டது.பதிந்துவிட்டேன். அவ்வளவுதான். ஒரு கேள்வி. மகாத்மாவிற்கு தேசப்பிதா பட்டம் கொடுத்தது நேதாஜியா? பி.சி.ராயா? நான் நேதாஜி என்கிறேன். பி.சி.ராய் என்று ஒரு தலைவர் பேசிச் சென்றுவிட்டார்..சரியான பதிலைச் சொன்னால் நல்லது.
    - Show quoted text -
    --
    Regards

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. http://sivamgss.blogspot.com/2007/12/126.html

    பாரதி யுகம் என்பது பாரதியோடு முடியவில்லை. இன்னும் தொடரும், ஏனெனில் பாரதியின் கனவுகள் எதுவும் நனவாகவில்லை. கீழே உள்ள கவிதை பாரதி வாழ்வு என்ற கவிதைத் தொகுப்பில் உள்ளதின் ஒரு பகுதி. எப்போது எழுதினார் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சீனி.விஸ்வநாதனின் புத்தகங்களில் இருக்கலாம். எனக்கு அது இன்னும் எட்டாக்கனி தான். விலையும் சரி, நூலகத்திலும் சரி கிடைப்பதில்லை!

    ""மற்றையக் கல்லுரு மாறிடப் பின்னு
    மானிடன் தான் என மனத்திடை அறி போழ்து
    எத்தனை இன்பமுறு எந்நிலை நிற்பன்?
    அத்தகைய நிலையினை அளியனேன் எய்தினன்
    வெம்போர் விழையும் வீரனிங்கொருவன்

    சிறையிடை நெடுநாட் சிறுமை பெற்றிருந்த பின்
    வெளியுறப் பெற்றவ் வேளையே தனக்கோர்
    அறப்போர் கிடைப்பின் அவன் எது படுவன்?
    அஃதியான் பட்டனன், அணியியற்குயிலே,
    நின்முக நகையும் நின் விழி யாழ்மையும்

    நின்னுதல் தெளிவும் நின் சொல்லினிமையும்
    நின்பர் சத்தே நிகழ்ந்திடு புளகமும்
    ஈதெலாம் பின்னரு மெண்ணிடைத் தோன்றப்
    பின்னுமோர் முறையான் பெருமையோய் நின்னைச்
    சரணென அடைந்தேன், தமியெனைக் காத்தி!"
    Posted by கீதா சாம்பசிவம் at 12/11/2007 07:41:00 AM
    நாகராசன்
    - Show quoted text -
    November 17, 2011 11:20 PM

    ReplyDelete
  5. Nagarajan Vadivel radius.consultancy@gmail.com to mintamil

    show details 10:24 PM (9 hours ago)

    எல்லாரும் எழுதராய்ங்க. நல்லாத்தான் எழுதராய்ங்க. ஆனா அது சிக்கலைத் தீர்க்க உதவவில்லை. எழுப்பபடும் பல் கேள்விகளுக்குத் தெளிவான விடை அளிக்கமுடியவில்லை
    சில கேள்விகள்
    1. பாரதியின் பல படைப்புகள் பாண்டிச் சேரியில் இருந்து வெளியிடப் பட்டவை. அவை இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் பயன் பாட்டுக்குள் வருமா?
    2. ஒரு படைப்பு படைப்பாளன் உருவாக்கியவுடன் பதிப்புரிமை என்ற பாதுகாப்பு அவனுக்குக் கிடைத்துவிடுவது உண்மையென்றாலும் அவன் படைப்புகளை அவனின் வழித்தோன்றல் சொத்துரிமையை விற்பதுபோல் மற்றவருக்கு விற்பதைக் காப்புரிமைச் சட்டம் ஏற்புடையதாகக் கருதுகிறதா?
    3. தனிப்பட்ட காப்புரிமையிலிருந்து படைப்புகள் படைப்பாளன் மறைந்து 60+10 ஆண்டுகளுக்குப்பின் திறநிலை வளமாகக் கருதப்படவேண்டும். பத்தாண்டுகள் காப்புரிமைக் காலத்தை நீட்டிக்க பாரதியின் வழித்தோன்றல்கள் முயற்சியோ அல்லது மறுபதிப்பு செய்யவோ முடிவெடுத்துள்ளனரா?
    4. பாரதியின் படைப்புகள் தழுவி உருவான மற்ற படைப்புகள் பத்தாண்தடுக்குள் பதிப்புரிமைக்கு விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் அது காப்புரிமை விதியால் கட்டுப்படுத்தமுடியாது என்பது சரியா?
    5. காப்புரிமைச் சட்டம் படைப்புகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அரசு கொள்முதல் செய்வதை விதிமீறல் என்று சுட்டிக் காட்டி வாதிட வாய்ப்பளிக்கிறதா?
    6. இல்லாத இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் (1912-ல்) கீழ் இந்தியாவுக்கு அப்பால் இன்னொரு நாட்டின் காலணி நாட்டில் (பாண்டிச் சேரி) படைக்கப்பட்ட படைப்புகளுக்கு படைப்பாளன் விருப்ப்பமின்றி குடும்பத்துக்குள் சொத்துத் தாவா போல் உரிமையை தட்டிப் பறிப்பதும் அதையே ஈட்டிக்காரனிடம் அடகு வைப்பதுபோல் விற்றுவிடுவதும் அதை இன்னொருவர் விலைகொடுத்துவாங்கி வெளியுடும் உரிமை எனக்கு மட்டும் என்று சொல்வதும் பின்னர் அரசே படைப்பாள்னின் வம்சாவளிகளிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு யார் வேண்டுமானாலும் வெளியிட்டுப் பணம் ஈட்டிக்கொள்ளலாம என்று சொல்வதும் அதை எதிர்த்து படைப்பாளனின் பேத்தியும் கொள்ளுப் பேத்தியும் போர்க்கொடி தூக்கி சட்ட அடிப்படையில் எச்சரிக்கை செய்வதும் சட்டம்பற்றிய புரிதல் இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பான இந்த நிகழ்வுகளே வரலாறாகப்போன நிலையில் பாரதியின் படைப்புகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  6. சட்டபூர்வமான தங்கள் வினாக்களுக்கு விடை தேடிடவே வேண்டும். பாரதியின் படைப்புக்களின் எதிர்காலம் ஒளி மிக்கதாகவே திகழும். எல்லாப் பதிப்பகங்களும் மலிவுப்பதிப்பாகவும் போட்டி போட்டுக்கொண்டு பாரதியின் எழுத்துக்களைப் படைத்தளித்து வருகின்றன. தாங்கள் விரும்பிய பாரதியின் பாடல்களை -வசனங்களை எவர் அனுமதியுமின்றி அச்சிட்டு எல்லோருக்கும் இலவசமாகக் கூடக் கொடுத்து பாரதியின் புகழைப் பரப்பலாம்.

    ReplyDelete
  7. ranganathan venkatachariar ranganathan.venkata@gmail.com to mintamil

    show details 9:39 AM (5 hours ago)

    மிகவும் சரியான கருத்து
    ரங்கநாதன்/உதிரமேருறேர்
    - Show quoted text -
    - Show quoted text -

    ReplyDelete

Kindly post a comment.