Tuesday, November 29, 2011

நிழலின் அருமை- -விருதுநகர் கே.பாண்டியராஜன்

வெளியூரில் இருந்து விருதுநகருக்குள் வருபவர்கள் அதிசயித்துப் பார்க்கும் விஷயம் ஊரின் நடுவே தளும்பி நிற்கும் தெப்பக்குளம். மழை அதிகம் பெய்யாத ஊர் அது. அங்கே எப்படித் தண்ணீர் என்று யோசித்துப் பார்க்கும்போதுதான் அந்த ஊர் மக்களின் அறிவு மிளிர்வதை உணரமுடியும்.

இருளில் நிற்பவனுக்குத்தான் தெரியும் தீக்குச்சியின் ஒளி. ஊசலாடிக் கொண்டிருப்பவனுக்கு சிறு துரும்புகூட விழுதாகத்தான் தோன்றும். தீர்க்க முடியாத தண்ணீர் பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருந்த விருதுநகர் மக்களுக்குத்தான் தண்ணீரின் அருமை புரிந்தது.

ஊரின் நடுவே இருக்கும் தெப்பக் குளத்தில் தண்ணீர் இருந்தால் ஊருக்குள் வறட்சி இருக்காது என்பதை உணர்ந்தார்கள். ஊருக்குள் எங்கே ஒரு துளி மழை பெய்தாலும் அதை அப்படியே அள்ளிக் கொண்டுவந்து தெப்பக்குளத்தில் தேக்கி வைக்க ஆசைப்பட்டார்கள்.

கூரையில் பெய்யும் மழையை அப்படியே குழாய்களுக்குள் செலுத்தி, அதை தெப்பக்குளத்தில் இணைத்து விட்டார்கள். ஒரு மழைக்குப் பிறகு தெப்பக்குளம் தளும்பிச் சிரித்தது. ஊருக்குள் நிலத்தடி நீரும் சுரக்கத் தொடங்கியது. தெப்பக்குளத்தில் இருந்து ஒரு வாய்க்கால் வெட்டி ஊருக்கு வெளியே ஒரு குளத்த்தோடு இணைத்தார்கள். உபரியான நீர் அங்கே ஓடியது.

இன்றும் விருதுநகரில் ஓரளவுக்கு நிலத்தடி நீர் இருக்கிறது என்றால் அதற்கு அன்றே யோசித்த விருதுநகர் மக்களின் புத்திசாலித்தனம்தான் காரணம்.

http://kpandiarajan.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.