Thursday, November 10, 2011

மாலத்தீவில் மஹிந்த ராஜபக்ச - மன்மோகன் சிங் சந்திப்பு



மாலத்தீவில் இன்று ஆரம்பமாகவுள்ள 17 வது சார்க் அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்குச் சென்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அச் சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்றம், இந்திய அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் 50 ஆயிரம் வீட்டு திட்டம் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனிடையே மீள்குடியேற்றம் மங்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக சிறிலங்காவுக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இச் சந்திப்பின் மூலம் முன்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

Kindly post a comment.